ஞாயிறு, மார்ச் 01, 2015

நண்பரின் கேமரா கண்கள்





நண்பரின் கேமரா கண்கள் 

நண்பர் நௌஷாத் அலி கும்பகோணம் நெடிவ்ஸ் முக நூல் குழுமம் மூலமாக எனக்கு அறிமுகமானவர்.  இவர் கும்பகோணத்தில் தனியாக போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அவ்வபோது இவர் கும்பகோணம் நகரத்தை வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து முகநூலில் பதிவிடுவார். 
பிறந்த மண்ணை நேசிக்கும் எனக்கு கும்பகோணத்தின் எழிலை படம் பிடித்து அழகு சேர்க்கும் நண்பரின் படங்கள் பார்த்த போது அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
சமீபத்தில் நடைபெற்ற கும்பகோணம்  ஊர்  பொங்கல்  நிகழ்வில் நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.  ஹலோ என்ற நலம் விசாரிப்புகளுடன் அவர்  நகர்ந்து விடாமல் பல நாள் நெருக்கமான நண்பர் சந்தித்து கொண்டால் எப்படி பேசுவார்களோ அவ்வாறே என்னுடன் பேசினார். அவர்  படங்கள் பற்றி  நான் குறிப்பிட எனது பதிவுகள்  பற்றி அவர் குறிப்பிட இப்படியே நகர்ந்தது . 
அவரது முகநூல்  https://www.facebook.com/noushad.ali.3114?fref=nf 

அவர் எடுத்த  படங்களில்  சில  பார்வைக்கு
    
திரு. நௌஷாத் அலி 

பசுமை போர்த்திய பூமியுடன்  சூரிய வெளிச்சத்தை 
மறைத்த படி விளையாடும் மேகங்கள் 




வெற்றி விளைச்சல் பரிசளித்த  புன்னகை
தொடரட்டும்  



தேர் இழுத்து செல்ல தயாராகும் (பொம்மை ) குதிரைகள் 


 கோபுர தரிசனம் காணும் ஆவலுடன்  சூரியன் 


பசுமையின் ஊடே வெளிச்சபாதை  அமைக்கும் சூரியன் 


காய்கறிவண்டியை  நிழல் தொடர்கிறதா தள்ளுகிறதா 


மண் வாசனை  கிளம்பும்  தருணம் 


 மேய்ச்சல் மைதானத்தில் ஒற்றை ஆலமரம் 


கும்பகோணம் தார் சாலை தான் ஊட்டி அல்ல 




பசுமையின் சூழலில்  ஐராவதேஸ்வரர்  கோவில் 


குடந்தையின் சிறப்பு மிக்க மகாமக குளம் 
                             
                             பேருந்து நிலையம் மழை பொழிந்த ஒரு பொழுதில் 

 நண்பர் நௌஷாத் அலியை சந்தித்த  அந்த நிகழ்வில்  என்னையும் ஒரு படம் எடுங்களேன் என்று  ஆர்வம் பொங்க  நான் கேட்டு கொண்டதிற்கிணங்க 
அவர் கிளிக்கியது  இங்கே 



வாழ்த்துக்கள் நண்பரே 

ஆர்.வி.சரவணன் 

10 கருத்துகள்:

  1. நண்பர் நவ்ஷாத் அலி அவர்களுடனான சந்திப்பை அருமையாகச் சொன்னீர்கள்!

    அழகாக அவர் எடுத்த படங்களில் சில பார்த்ததில் பரவசம்!

    நண்பருக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. அழகாகப் படம் பிடித்திருக்கிறார் திரு. நவ்ஷாத்...
    வாழ்த்துக்கள் அவருக்கும்... அவரைப் பற்றி பகிர்ந்து கொண்ட தங்களுக்கும்...

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொன்றும் அற்புதமான படங்கள்...

    நண்பருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. நமது முகநூல் நண்பர் நவ்சாத் அலி அவர்களின் கேமிரா கண்களின் மூலமாக பலமுறை குடந்தையை கண்டு வியந்துள்ளேன் ! அவர் எந்தளவுக்கு ரசித்திருப்பார் நமதூரை என்பது அவரெடுக்கும் புகைப்படங்களில் உணர முடிகிறது....ரசிகனின் ரசிகனாக நாணும் ஒருவன் வாழ்த்துக்கள்..:)

    பதிலளிநீக்கு
  5. மிக சிறப்பாக ரசனையோடு புகைப்படங்களை எடுத்துள்ள நண்பருக்குப் பாராட்டுக்கள். அப்புகைப்படங்களை எங்களோடு பகிர்ந்துகொண்ட தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ரசனைமிக்க புகைப்படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. பேசும் படங்கள்...!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு படமும் அற்புதம் நண்பரே
    தங்களின் நண்பர் பாராட்டிற்கு உரியவர்

    பதிலளிநீக்கு
  9. கேமரா கண்கள் அருமையாக பதிவு செய்திருக்கின்றது திரு நௌஷத் அலி அவர்களின் கேமராவில் மட்டுமல்ல எங்கள் மனதிலும்! அருமை! அதில் ஒன்று அந்த ஆற்றின் பாதை, சூரியனின் வெளிச்சப்பாதை தன் வறுமையை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே! தான் இந்த நிலைமைக்கு ஆனதற்கு காரணம் இந்த நிலை கெட்ட மனிதர்கள்தான்! இப்பொழுதாவது தன் பாதையைச் செம்மைப் படுத்தி மீண்டும் என்னை ஓட வைப்பார்களா என்று எண்ணுமோ?!!! எண்ணக் கூடும்!

    பதிலளிநீக்கு
  10. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்