ஞாயிறு, ஜனவரி 25, 2015

இணைய நட்புக்களின் ஊர் பொங்கல் (கும்பகோணம்)




இணைய நட்புக்களின் ஊர் பொங்கல் (கும்பகோணம்)

கும்பகோணத்தில் இருந்து படிக்கும் வரை வராத ஊர் பாசம் சென்னைக்கு வேலைக்கு சென்ற பின் தான் வந்தது. எப்போதுமே அருகில் இருக்கும் வரை அதன் பெருமை புரியாது தூரம் சென்ற பின் தான் தெரிய வரும் என்பது இயல்பு தானே. கும்பகோணம் என்ற பெயர் பலகையுடன் செல்லும் பேருந்துகளை பார்க்கையில் அதை ஏக்கமாய் பார்க்கும் அளவு ஊர் பாசம் (எல்லோருக்கும் போல்) எனக்குமுண்டு . ஊர் பாசம் காரணமாக தான் எனது வலைத்தளம் ஆரம்பிக்கையில்,என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்த போது ஊர் ஞாபகம் வந்து குடந்தையூர் என்றே பெயரிட்டேன். 


சரி விசயத்துக்கு வருவோம். முக நூலில் kumbakonam natives என்ற குழு இருப்பதை பார்த்தவுடன் ஆர்வமுடன் சென்று இணைந்து கொண்டேன். 
 எனது பதிவுகள் நான் எடுக்கும் படங்கள் அங்கே ஷேர் செய்ய ஆரம்பித்த போது நிறைய  நட்புக்கள் கிடைக்க பெற்றேன். இந்த குழு முக நூலில் நட்பு பாராட்டுவதுடன் கடமை முடிந்து விட கூடாது  என்று நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் பொருட்டு ஊர் பொங்கல் கொண்டாட  முடிவெடுத்தார்கள் 




இந்த குழுமத்தின் நண்பர்கள் பலரை இது வரை நான் சந்தித்ததில்லை.நாம் சந்திப்பதற்கு உதவியாக இந்த விழா இருக்கும் என்பதால் இந்த விழாவில் கலந்து கொள்ள ஆர்வமானேன்.
  



இந்த குழும நண்பர்களில் நான் இது வரை  சந்தித்த ஒரே நபர் நண்பர்
வேல் முருகவேல் மட்டுமே. அவர்  நீங்க கண்டிப்பா கலந்துக்கணும் சார் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். நான்  என் பெயரை பதிவு செய்ய முகநூல் நண்பர் தீபனை தொடர்பு கொண்ட போது அவரும் கண்டிப்பா நீங்க வரணும் சார் என்று குறிப்பிட்டார்.  யாரையுமே தெரியாதே என்ற என்  
தயக்கம் இந்த இருவரால் விடை பெற்று கொண்டது 

சென்ற ஞாயிறு  (18-01-2015) கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த திருவிழாவில்  நான் என் குடும்பத்துடன்  கலந்து கொண்டேன். விழா நிகழ்வை பற்றி கீழே குறிப்புகளாகவும் எனது செல் போனில் என் மகன் எடுத்த படங்களுடன் குழு அங்கத்தினர்கள் எடுத்த படங்களையும் சேர்த்து  தந்திருக்கிறேன்.




கார்த்தி வித்யாலயா பள்ளி சென்னை பை பாஸ் ரோட்டில் உள்ளது. பள்ளி கட்டடங்களின் ஊடே பச்சை பசேல் என்று மரங்கள் சூழ அம்மன் கோவிலுடன் இருப்பது பார்க்கவே  ரம்யமாக இருந்தது.  




கோவிலின் அருகே வண்ண கோலங்களிட்டு மாட்டு வண்டியின் சக்கரம் நிறுத்தி வைக்கப்பட்டு கூடவே விவசாயியின் ஏர் கலப்பை பல அளவுகளில் நெல் நிரம்பிய  படிகள் மூங்கில் கூடை உரல் என்று கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளான பொருட்கள் வைக்கபட்டிருந்தது.




மாட்டு வண்டி கொண்டு வரப்பட்டு  நிறுத்தப்பட்டிருந்தது. கூடவே 
ஆடுகள் ஒரு மரத்தில் கட்டி வைக்கபட்டிருந்தது.பள்ளியின் கம்பவுண்டு  முழுக்க எங்கு திரும்பினாலும் மரங்களின் அணிவகுப்பு என்பதால் எல்லாமுமாக சேர்ந்து ஒரு அழகிய கிராமத்தை  நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது போல் ஒரு பிரமை


முக நூல் நண்பர்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.
காலை டிபனாக விழாவுக்கு முன்னே இட்லி, சுண்டல், பாயசம் 
வழங்கப்பட்டது. விழா தொடங்கியது. கண்மணி பாரதி நிகழ்சிகளை 
தொகுத்து வழங்கினார். விழாவில் பரத நாட்டிய கலை நிகழ்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த  பள்ளியின் மாணவிகள் தமிழ்த்தாய் 
வாழ்த்து  பாடினார்கள். 



 தேனாம்படுகை ஜீவா குழுவினரின் பறையடித்து ஆடி வந்தார்கள் 


அதனுடன் முக நூல் நண்பர்களும் உற்சாகமாய் பங்கேற்று நடனமாடினார்கள்.




வந்திருந்த மூத்த பெண்கள் பொங்கல் பானைகளை அடுப்பில் ஏற்றி 
வணங்கி பொங்கல் வைத்து   சூரியனை இயற்கையை வழிபட்டார்கள் 






கார்த்திக் வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கபடி போட்டி நடந்தது.அதில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 






மாணவிகள் கோலாட்டம் மற்றும் முருகனின் பக்தி பாடலுக்கு நடனமாடினார்கள்


ஜெரால்டு என்ற நண்பர் தன் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி 
தீ  பற்ற வைத்து நடனமாடினார்.



 மண் பானை எவ்வாறு செய்யபடுகிறது என்பதை மதனதூரிலிருந்து வந்திருந்த வயதான தம்பதிகள் செய்து காட்டினர். நானே இது வரை பார்த்திராதது. களி மண் சில நிமிடங்களில் பானையாவதை  கண்டு  ஆச்சரியப்பட்டோம் 

 மதிய உணவாக கற்கண்டு சாதம் , புளியோதரை தயிர் சாதம், வெஜிடபிள் ரைஸ் வடகம் தயிர்பச்சடி ஊறுகாய் தந்து வந்திருந்தவர்களை உபசரித்தார்கள்.



விழாவில் கலந்து கொண்ட நாட்டிய மாணவிகளின் ஆசிரியர் தீபக் வெங்கடேஷ், கமலின் விஸ்வரூபம் படத்தின் உன்னை காணாத பாடலுக்கு நடனமாடினார் பின் உறியடித்தல் உற்சவம் நடைபெற்றது. சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் இதில் பங்கேற்றனர் 

முக நூல் நண்பர் சுரேஷ் குமார் அனைவருக்கும் நன்றியுரைத்து 
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும், கலை நிகழ்சிகளில் பங்கேற்றவர்களுக்கும் பரிசு கொடுத்து விழாவுக்கு சிறப்பு சேர்த்தார்கள்.



முகநூலில் எனக்கு அறிமுகமான மற்றொரு நண்பர் திரு.நௌஷாத் அலி.இவர் போடோகிராபர். கும்பகோணத்தின் அழகை பல் வேறு கோணங்களில் படம் பிடித்து அவ்வபோது பதிவிடுவார். நானும் அவரும்  
இந்த விழாவில் தான் முதன் முறையாக சந்தித்தோம். விழா பரபரப்பிலும் என்னுடன் அவர் அதிக நேரம் உரையாடியதில் எனக்கு மகிழ்ச்சியுடன் 
 அவர் என்னை படம் எடுத்து தந்தது நிறைவையும் தந்தது.

சுரேஷ்குமார், கண்ணன், வசந்தகுமார், சசிதரன், கிரிதரன் வாசு,அப்புகுமார் குடந்தை செந்தில் நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. தீபன் தனது தந்தையிடம் என்னை அறிமுகபடுத்தி வைத்தார்.

காலை 9 மணிக்கு ஆரம்பமான விழா முடிவடைய  3 மணி ஆகி விட்டது
என்றாலும் உற்சாகம் பொங்கலாய் பொங்கி எங்கும் பரவி நிற்க எங்கே அது அகன்று விட போகிறதோ என்று  அதற்கு இடம் கொடுக்காமல் kumbakonam natives மற்றும்  namma kumabakonam  குழுக்கள், நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடைபெற வைத்து  விழாவுக்கு   சிறப்பு சேர்த்தனர்.



FINAL TOUCH

நண்பர் சுரேஷ்குமார் தன் நன்றியுரையில், அடுத்து சமூக சேவைக்கு அழைக்கும் போது அனைவரும் இது போல் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். முக நூல் வந்தோமா லைக் போட்டோமா இல்லே 
எதுனா ஸ்டேட்டஸ் போட்டோமா என்றில்லாமல் இப்படி ஒரு விழா 
நடத்தும் எண்ணம் கொண்டமைக்கும் அடுத்து சமூக சேவைகளில் 
கவனம் எடுப்பதற்கும், என் நன்றி மற்றும் அன்பை என் பங்களிப்புடன் 
அளிக்கிறேன்.

ஆர்.வி.சரவணன்


12 கருத்துகள்:

  1. இதுவல்லவோ சந்தோசம்....!

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. தங்களின் அருமையான பதிவுக்கும், படங்களுக்கும் மிக்க நன்றி ஆர்.வீ.சரவணன் சகோ....!!

    பதிலளிநீக்கு
  3. மிகச் சிறப்பான சந்தோஷம் அண்ணா...
    இதுபோல ஒரு கூடல் கொடுக்கும் சந்தோஷத்தை வேறெதுவும் கொடுப்பதில்லை...
    ஆமா பொங்கல் வைத்து கொடுக்கவே இல்லையா?

    பதிலளிநீக்கு
  4. என்ன ஒரு சந்திப்பு! அசத்தல்! மகிழ்வும் கூட இல்லையா?!!! ஃபோட்டோக்கள் நன்றாக உள்ளது சார்!

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு பொங்கல் சந்திப்பு. இன்றைய குழந்தைகளுக்கு பாரம்பரிய பொங்கலை கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. கும்பகோணத்தில் பிறந்து, காலத்தின் சூழலால் தஞ்சைக்கு வந்துள்ள நான், தங்களோடு விழாவில் இருப்பதைப்போல உணர்ந்தேன். மிக அசத்தலான பதிவு.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    பதிலளிநீக்கு
  8. அற்புதமான பொங்கல் கொண்டாட்டம் வாழ்த்துக்கள் சரவணன் சார்

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான கொண்டாட்டம்.... படிக்கும்போதே எனக்கும் மகிழ்ச்சி தந்தது.

    பதிலளிநீக்கு
  10. .
    கொண்டாட்டங்களின் மகிழ்வான வெளிப்பாடு தங்கள் பதிவில்.

    புகைப்படங்கள் அருமை!

    பதிலளிநீக்கு
  11. அந்த அழகான போட்டோ உங்களுக்கு எடுத்துக் கொடுத்த போட்டோகிராபர் இவர்தானா? சூப்பர்..

    பதிலளிநீக்கு
  12. படங்களும் விவரணைகளும் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட உணர்வை கொடுத்தது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்