திங்கள், ஜனவரி 12, 2015

வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை குறும்பட சிறுகதை போட்டி







வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை 
குறும்பட சிறுகதை போட்டி 


நம் இணைய நண்பர் கோவை ஆவி அவர்களின் புதிய முயற்சி இது. அவரது தளத்தில் இது பற்றிய முழு விபரங்கள் வந்திருக்கிறது. அவரது இந்த முயற்சி வெற்றி பெற  வாழ்த்துக்கள். இப்  போட்டியை பற்றிய விபரங்கள் இங்கே 





"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..!
குறும்பட- சிறுகதை போட்டி


ஆவி டாக்கீஸ்- வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! குறும்பட - சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படும்.

முதல் பரிசு:      ரூ.2000இரண்டாம் பரிசு: ரூ.1000மூன்றாம் பரிசு:  ரூ.500
ஆறுதல் பரிசு :   ரூ.250   (இரண்டு பரிசுகள்)

தேர்வுக்குழு:

"எங்கள் பிளாக்" ஸ்ரீராம் அவர்கள்,
"வீடு" சுரேஷ்குமார் அவர்கள்,
"மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர்கள்,

மற்றும் உங்கள் "ஆவி"


விதிமுறைகளும்நிபந்தனைகளும்:
  • உங்கள் படைப்புகள்  ​​​400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

  • கதைகள் நகைச்சுவைகாதல்க்ரைம்சமூக உணர்வுக் கதைகள்,விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோயார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.

  • தேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை'இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )

  • கதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வாரமாத இதழ்களுக்கோஇணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய் இருத்தல் கூடாது.

  • கதை உங்கள் தளங்களிலோவேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது.  அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.

  • எந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோநிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும்தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.

  •  போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.

  • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்). 

  • கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •            உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு12 மணிக்குள் (IST)

  •          போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.

  •             தேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

  • .    ​   போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ  தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ​


கதைகளை அனுப்பும் முறை:


  •    நேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும். 

  • MS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். 

  • (எ.கா)  உங்கள் கதையின் தலைப்பு "காதல் போயின் காதல்" என்றால்MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •  கதைக்கு பொருத்தமான ஏதாவது ஒரு படத்தையோ,  நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)

  • MS-Word  பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  •  Subject இல் Aavee Talkies ShortFilm-ShortStory Contest 2015 என்று குறிப்பிடுதல் அவசியம்.

  • Body இல்  பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.

  •  MS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்திபிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன்  சேர்த்து அனுப்பவும்.
  • (PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)


பெயர்* : 
புனைபெயர்:
(Optional )
வசிக்கும் நகரம்:
(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு படைப்பாளிகள் உங்கள் நகரம்/  நாடு சேர்த்து குறிப்பிடவும்.)
அலைபேசி எண்* :
வலைத்தளம்:
(Optional )
கதையின் தலைப்பு* :
கதை எண்* : 



Dates to Remember : 

                  


அனைத்து தகவல்களையும் அவரே சொல்லியிருப்பதால் நான் இதில் சொல்ல போவது 
 ஒன்றே தான். ஆர்வமிருப்பவர்கள் போட்டியில் பங்கு பெறுங்கள் பரிசை வெல்லுங்கள் 
உங்கள் எழுத்தும் கதாபாத்திரமும் திரையில் மின்ன போவதை காணுங்கள் 

FINAL TOUCH 

இதுல நீ டச் கொடுக்கிற அளவுக்கு என்னடா இருக்கு னு சலித்து கொள்ள வேண்டாம்.
நானும் இந்த போட்டியில் மற்ற நண்பர்களுடன் பங்கு கொள்கிறேன் 

ஆர்.வி.சரவணன் 







9 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி. தங்களுக்கும் குழுவினருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  3. நல்ல முயற்சி. நடத்தும் நண்பர்களுக்குப் பாராட்டுகள். பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பாக அமையும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. வலைத்தளத்தில் பலர் இது போன்று போட்டிகள் வைத்து நண்பர்களை ஊக்கப்படுத்துவதை அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

    நம் இனிய நண்பர் ஆவிக்கும் வாழ்த்துக்கள்! அதில் பங்குபெறப்போகும் அனைவருக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. போட்டியை நடத்தும் கோவை ஆவி உட்பட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. கருத்து தெரிவித்த, கலந்து கொண்ட எல்லோருக்கும் என் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்