திங்கள், மே 12, 2014

கேமராவுக்கு முன்னும் பின்னும்-3



 கேமராவுக்கு முன்னும் பின்னும்-3



அன்று அதிகாலை 3 மணி இருக்கும். என் செல் போனில் பாட்டு ஒலித்து  கொண்டிருந்தது.தூக்க கலக்கத்தில், பாட்டு போட்டுட்டு தூங்கிட்டோம் போலிருக்கு என்று எண்ணத்துடன் செல் போனை எடுத்தேன்.பார்த்தால் \நண்பர் திண்டுக்கல் தனபாலன் சார் போன் அடித்திருந்தார். அவசரமாய் எழுந்தேன். அவர் திண்டுகல்லில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருப்பதாக முதல் நாள் இரவு சொல்லியிருந்தார்.நானும் செல்லப்பா சாரும்  வந்தவுடன் போன் அடியுங்கள் என்று சொல்லியிருந்தோம்.நான் கீழே இறங்கி ஹோட்டல் வாசலுக்கு போய் அழைத்து வந்தேன்.சில நிமிடங்கள் பேசி விட்டு மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர்ந்தோம். முதல் நாள் போல் 
6 மணிக்கு குளித்து கிளம்பி நாங்கள் வெளி வந்தோம். துளசிதரன் நண்பர் எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார். முதல் நாள் போலவே கேமரா மேனுடன் (அங்கே தான் அவர்களும் தங்கியிருந்தார்கள்) சேர்ந்து கிளம்பி மாத்தூர் சென்றடைந்தோம் 

அன்று முழுக்க இன்டோர் ஷூட்டிங் பள்ளியில் தான் என்பதால்  பள்ளிக்கு சென்று நாங்கள் இறங்கிய போது கூடவே இன்னொரு

காரும் வந்தது.காரிலிருந்து யார் இறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கவனித்தோம்.கோவை ஆவி இறங்கினார். கூடவே அவரது அக்கா மகன் விக்னேஷையும் அழைத்து வந்திருந்தார். எல்லாரும் சந்தோசமாய் சில நிமிடங்கள் பேசினோம்.பின் துளசிதரன் ஷூட்டிங் ஆரம்பிக்க  உள்ளே சென்று விட நாங்கள் சில நாள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் பேசி கொள்வது போல் பேசி மகிழ்ந்தோம். 




 அன்று பள்ளிக்கு ஷூட்டிங்கில் பங்கு பெற மாணவ மாணவிகள் வந்திருந்தார்கள்.  வகுப்பறை காட்சிகள் படமாக்கப்பட்டன. கோவை ஆவி அக்க பையன் விக்னேஷை நீ நடிக்கிறியா என்று கேட்டேன் தயக்கமாய் மறுத்தார். துளசிதரன் ஹீரோவின் ப்ரெண்ட் ஆக நடி என்று நடிக்க 
வைத்து விட்டார். பின் விக்னேஷும் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
 துளசிதரனும் ஆசிரியராக நடித்தார்.ஷூட்டிங்கில் முழு படத்தை இயக்கி கொண்டே நடிப்பதில் இருக்கும் சில சிரமங்கள் அப்போது புரிந்தது. பின் ராய செல்லப்பா சார் மற்றும் தனபாலன் கோவை ஆவிக்கு மேக்கப் போடப்பட்டது 

என்னால் அன்று ஷூட்டிங்கில் முழுமையாக ஈடுபட முடியாமல் இருந்தாலும்,  நண்பர்களுடன் பேசி கொண்டே நடுநடுவே என்ன காட்சி எடுக்கபடுகிறது என்று கவனித்து கொண்டே இருந்தேன் 

கூடவே ரிகர்சல் பார்த்து கொண்டிருந்தோம். ராய செல்லப்பா சார், பிரின்சிபால் ஆகவும்  தனபாலன் கோவை ஆவி ஆசிரியர்களாக நடிக்கும் காட்சிகள் படமானது. இதனிடையே  நான்,கோவை ஆவி,தனபாலன், ராய செல்லப்பா சார்  எல்லோரும் கலகலப்பாய் எடுத்து கொண்ட புகைப்படங்கள் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் எவ்வளவு ஜாலியாக எங்கள் பொழுது அன்று கழிந்தது என்று. 










இருந்தும் நான் நடிக்க வேண்டிய நேரம் நெருங்க நெருங்க ஒரு பதட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. நீங்கள் நினைக்கலாம். நடிக்கிற விசயத்துக்கு எதுக்கு நீ இவ்வளவு பில்டப் கொடுக்கிறே என்று. இங்கே ஒரு சின்ன பிளாஷ் பேக் தேவைபடுகிறது. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நாட்டு நல பணி திட்டத்தில் சேர்ந்திருந்ததால் அந்த பணிக்காக திருச்சி டூர்  சென்றிருந்தோம். அங்கே சில நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் நாடக போட்டி நடைபெற்றது. எல்லா கல்லூரிகளில் இருந்தும் வந்திருந்தார்கள். நாங்களும் கலந்து கொண்டோம். நண்பன் தான் இயக்கினான். ஆள் குறையுது என்று என்னையும் நடிக்க வைத்தான். அவன் எதிர்பார்த்த நடிப்பை நான் தரவில்லை என்பதால் முகம் சுளித்தான்.திட்டியும் விட்டான் எனக்கும் கோபமாகி இனி மேல் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். இருந்தும் நானே எழுதி இயக்கிய நாடகத்தில் ஒரு காட்சியில் நானும் வந்தேன். 

மேலும் எனக்கு மேடை கூச்சம் ஜாஸ்தி கை கால்கள் மேடை ஏறினாலே உதறலெடுக்கும்.  
அதனால் இது எனக்கு சரிபட்டு வராது என்று நினைத்திருக்கையில் துளசிதரன் நீங்கள் எம் எல் எ வாக நடிக்க வேண்டும் என்று சொன்ன போது மறுத்து ,நண்பர்கள் வேறு யாரையேனும் நடிக்க வையுங்கள் என்றேன். அவர் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்றார். என் வீட்டில் சொன்ன போது  வாய்ப்பு வரும் போது ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.நடிங்க என்றே சொன்னார்கள். 

நான் துளசிதரன் சாரிடம்  எதனால் என்னை செலக்ட் பண்ணீங்க என்றேன். அவர் உங்கள் 
குரலை வைத்து தான் உங்களையே நடீக வைக்க முடிவு செய்தேன் என்றார். நான் தான் நடிக்க வராதுன்னு னு சொல்றேனே ஏன் அதை வர வச்சி பார்க்க ஆசைபடறீங்க என்றேன் வடிவேலு போல். இப்படியாக நான் நடிப்பது உறுதியானது. நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட லஞ்ச் ப்ரேக் முடிய மேக்கப் மேன் மேன் எனை அழைத்தார். 



மேக்கப் போட்டு  முடிந்த பின் என்னை எல்லாரும் ஆச்சரியமாய் பார்த்தார்கள். கோவை ஆவி கீதா ரங்கன் மேடம் போட்டோ களாக  எடுத்து தள்ளினார்கள்.மேக்கப் நன்றாகஇருப்பதாக சொன்னார்கள்.துளசிதரனும், 
"நான் தான் சொன்னேனே உங்களுக்கு பொருத்தமாக
இருக்கும்னு"என்றார்.  எனது கேரக்டரில் மலையாள வர்சனில் நடிக்கும் திரு.பாலகிருஷ்ணன் அவர்களையும் என்னையும் வைத்து சில போட்டோ எடுத்தார்கள் நான் கோவை ஆவி,தனபாலனிடம்  சொன்னேன் "நண்பா என் எம் எல் எ கெட்டப் வச்சி காமெடி பண்ணிடாதீங்க. ஓரளவுக்கு மேல் என்னால் கிண்டல் கேலியை தாங்க முடியாது மீ பாவம்" என்றேன் இருந்தும் அவர்களின் உற்சாகம் எனக்கும் தொற்றியது. 




ஷூட்டிங் ஆரம்பித்தது  பள்ளி ஆடிடோரியத்தில். முதலில் மலையாள வர்சன் காட்சி 
எடுக்கப்பட்டது. மலையாள எம்.எல்.எ கேரக்டர்  பாலகிருஷ்ணன் 
நடித்ததை பார்த்து விட்டு நான் மிரண்டேன். ஏனெனில் அவர் ஒரு டிராமா ஆர்டிஸ்ட். நடிப்பில் அனுபவம் அதிகம். அவர் நடிப்பை பார்த்தவுடன் கவுண்டமணி போல் இது ஆவறதில்லே என்று கலக்கமாகி வேட்டியை மடித்து கட்டி வெளியேறி விடலாமா என்று தோன்றியது. துளசிதரன் முக சுளிப்புக்கு ஆளாக போகிறோம் என்ற பயம் வந்தது. 




அப்போது என் மனது எனக்கு பாடம் எடுத்தது.  பிடிக்காதவர்களை சந்திக்கும் போது என்ன செய்வாய். வெறுப்பை வெளி கொண்டு வராமல் சிரித்த படி விஷ் பண்ணுவாய். அது தான் நடிப்பு மேலும் இந்த விசயத்தில்  ரெண்டே சாய்ஸ் தான் உள்ளது ஒன்று நீ நடித்து பாராட்டு பெற வேண்டும் இல்லை எல்லாரது முக சுளிப்புக்கு ஆளாக வேண்டும் எது வேண்டும் என்பதை நீயே முடிவு செய் என்று அதட்டியது.
பதட்டத்தை தணித்தேன்.

என்னை கூப்பிடவே  மேடை ஏறினேன்.  எனக்கு ஒரு பக்கத்திற்கும் மேலாக வசனம். ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும். (மனப்பாடம் செய்திருந்தேன்)  தனபாலன் மேடைக்கு வந்து மைக் மற்றும் பேப்பர்களை டேபிளில் அடுக்கி வைத்து உதவி செய்தார் . 




பேச ஆரம்பித்தேன்  பாதிக்கு மேல் செல்லும் போது எனக்கு நாக்கு குழற ஆரம்பிக்க 
கட் கட் என்று கத்தினேன் . கேமராமேனும் துளசிதரனும் தொடர்ந்து பேசுங்க என்றார்கள். பேசி முடித்த பின் மீண்டும் ஒன் மோர் சொன்னார்.நானும் முதலில் இருந்த தவறுகளை சரி செய்து பேசினேன். மீண்டும் பேச சொன்னார்கள். இது போல் 5 முறை டேக் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த  பின் கேட்டேன் ஏன் சார் சரியாய் செய்யவில்லையா என்று. துளசிதரன் சொன்னார். அடுத்தடுத்து பேசும் போது இன்னும் சரியாக வரும் எது சரியாக இருக்கிறதோ அதை எடுத்து கொள்வோம் அதனால் தான் என்றார்.எல்லாரும் நல்லா பேசினீங்க என்றே சொன்னார்கள். 
இருந்தும் பரீட்சை எழுதிய மாணவனின் நிலையில் தான் நான்
இருக்கிறேன்  நீதிபதியாகிய (ஆடியன்ஸ்) நீங்கள் பார்த்து ஓகே 
சொல்லும் வரை எனக்கு டென்சன் தான். 

ஷூட்டிங் முடிந்து கிளம்பினோம்.எல்லாரும்  பாலக்காடு வந்து டிபன் சாப்பிட்டோம்  கோவை ஆவி காரில் அழைத்து கொண்டு வந்து ஹோட்டலில் விட்டு சென்றார். .தனபாலனும் ஊருக்கு கிளம்பினார்.
என்னையும் செல்லப்பா சாரையும் அடுத்த நாள்  பாலக்கட்டில் இருந்து 
60 கிலோ மீட்டரில் இயற்கை அன்னை வீற்றிருக்கும் SILENT VELLY என்ற  இடத்திற்கு  சுற்றுலா அழைத்து செல்வதாக சொல்லியிருந்தார்.

 நாளைய பதிவில் படங்களுடன் சொல்லி  இந்த தொடரை  நிறைவு செய்கிறேன் 


ஆர் .வி.சரவணன் 




9 கருத்துகள்:

  1. இருப்பதிலேயே மேக்கப் போட்டதில் உங்களைத் தான் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை... சுற்றுலாவை ஆவலுடன் காண காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. சூப்பரா சொல்லிட்டீங்க பாஸ்.. ஸ்டேஜ்ல உங்க பெர்பார்மென்ஸ் அருமை..!

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே! மிக நன்றாகத் தொகுத்து நம் குறும்படத்திற்கு ஒரு வரவேற்பையும் அளித்து விட்டீர்கள்! எல்லோரது ஆர்வமும் எகிறிக் கொண்டிருக்கின்றது!

    நீங்கள் எல்லோரும் கிடைக்கப் பெற்றதற்கு நாங்கள் மிக்க மகிழ்வடைகின்றோம்!

    பதிலளிநீக்கு
  4. சுவையாக இருக்கிறது பகிர்வு! படத்தை ரசிக்க காத்திருக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம், நீங்க எப்படி நடிச்சிருக்கீங்கன்னு நாங்க தான் சொல்லனுமா? சீக்கிரம் பாத்து சொல்லிருவோம்...

    பதிலளிநீக்கு
  6. சூட்டிங்க்ன்னாலே ஜாலிதான், இதில் சுற்றுலாவுமா ? வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. சூட்டிங் ஸ்பாட் சூப்பர்...குறும் படத்திற்காக காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. வாவ்....அடுத்தது சைலண்ட் வேலி பயணமா.... காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. சரவணன் உங்க அனுபவம் அருமை.. நீங்க விளக்கி இருந்ததை படித்த போது உங்களின் மன நிலையை நன்றாக உணர முடிந்தது.

    எனக்கும் இது போல மேடை என்றால் பயம்.. அதுவும் மனப்பாடம் செய்து பேசுவதெல்லாம் வாய்ப்பே இல்லை.

    உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் தான்.. இன்னும் சில முறை இது போல நடித்தால் கூச்சம் சென்று முன்னேற்றம் வரும்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்