சனி, மார்ச் 08, 2014

பாக்யாவின் பாராட்டு கடிதம்




பாக்யாவின் பாராட்டு கடிதம் 


(சாதி இரண்டொழிய வேறில்லை)

நான் படித்த கல்லூரியில் மாணவ தலைவர் தேர்தல் வந்தது . தேர்தலுக்கு நின்ற 
இருவருமே என் வகுப்பில் என்னுடன் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தான் . அதில் 
ஒருவர் கல்லூரியில் நன்கு பிரபலமானவர். நண்பர்கள் நிறைய உண்டு அவருக்கு. 
இருந்தும் அவருக்கு வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை.காரணம் கட்சி சார்புடன் 
அவர் நின்றது எனக்கு பிடிக்கவில்லை. (மாணவ சமுதாயத்தில் அரசியல் நுழைவதை 
நான் எப்போதுமே விரும்புவதில்லை ).

ஆகையால் மற்ற நண்பருக்கு  வாக்கு செலுத்தலாம் என்று முதலிலேயே முடிவு செய்திருந்தேன். யாருக்கு வாக்கு நான் செலுத்த நான் முடிவு செய்திருந்தேனோ அவர் என்னிடமும் மற்ற நண்பர்களிடமும் வாக்கு சேகரித்த போது  எனக்கு ஓட்டு போடுங்கள் அவருக்கு போட வேண்டாம் ஏனெனில் அவர் நமது சாதியை சேர்ந்தவரில்லை என்று 
கூறி வாக்கு கேட்டதும் கடுப்பாகி விட்டேன் .

சாதியை முன்னிறுத்திய ஒரே காரணத்தால் நான் அவருக்கு வாக்கு செலுத்தாமல் 
கட்சி சார்புடன் நின்ற நண்பருக்கே ஓட்டு போட்டேன்.அவரே வெற்றியும் பெற்றார். அவர் வெற்றி பெற்றதில் நான் அடைந்த மகிழ்ச்சியை ஒரு புறம் இருந்தாலும் எனது கொள்கையின் படி நான் நடந்து கொண்டதில் எனக்கு மன நிறைவு கிடைத்தது 

இந்த நிகழ்வை தெரிவித்து,எனது அபிமான நடிகர் மற்றும் இயக்குனர் திரு.கே பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழுக்கு கடிதம் எழுதிஅனுப்பினேன்.(அந்த சமயத்தில் தான் இது நம்ம ஆளு படம் வெளிவந்து ஓடி கொண்டிருந்தது ) என் கடிதத்தை பார்த்து எனக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்கள் பாக்யாவில் இருந்து .

எனது சந்தோசங்களில் ஒன்றாக எனது பொக்கிஷங்களில் ஒன்றாக இதை இன்றளவும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்

இதோ அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு




பாரதி சரவணன் னு பேர் போட்டிருக்கே அப்படின்னு குழப்பமாகாதீங்க
புனை பெயர் எல்லாரும் வச்சிருக்காங்களே நாமும் வச்சிக்கலாம் னு நினைச்சு 
ஆர்வ கோளாறில் நான் வைத்து கொண்ட பேர் அது 

ஆர்.வி.சரவணன்

FINAL PUNCH 


தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்ட பதிவு இது. அப்போது நான் பாக்யராஜ் அவர்களை சந்தித்திருக்கவில்லை.நான் சமீபத்தில் திரு கே.பாக்யராஜ் அவர்களை சந்தித்த போது 
நடந்த நிகழ்வை சொல்லி கடிதத்தையும் காண்பித்து சந்தோசப்பட்டேன்.
(ஆண் சாதி பெண் சாதி தவிர வேறேது சாதி )


25 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்... சத்தமில்லாம நிறைய வேலைகள் செஞ்சிருக்கீங்க....

    பதிலளிநீக்கு
  2. அருமை! அப்பவே கலக்கியிருக்கீங்க! வாழ்த்துக்கள்! இன்னொரு சின்ன தகவல் உங்களுக்காக, இந்த வார பாக்யாவில் வலையில் சிக்கியவை பகுதியில் என் ஜோக் வந்துள்ளது. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஏறக்குறைய 20 வருடங்களுக்கு பிறகு என் படைப்பு ஒன்று இதழில் வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சுரேஷ் பாக்யா வில் இடம் பெற்றதற்கும் வாழ்த்துக்கள்

      நீக்கு
  3. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  4. மகிழ்ச்சியாக இருக்கிறது திரு. பாரதி சரவணன்!!!
    (ம்... புனை பெயரா? நடக்கட்டும்,நடக்கட்டும்!)

    பதிலளிநீக்கு
  5. இன்று இரு தடவைகள் உங்களுக்கு ஃபோன் செய்தேன், சரவணன்!
    ஆனால், ஃபோனை எடுக்கவில்லையே நீங்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நிஜாமுதீன் சார் நேற்று தியேட்டரில் இருந்ததால் பேச முடியவில்லை மன்னிக்கவும் இன்று போன் பண்ணுங்கள்

      நீக்கு
  6. ஓட்டு போடும் விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுத்தீர்கள்!

    பதிலளிநீக்கு
  7. தமிழ் திரைப்பட உலகில் அதி முக்கியமான திறமைசாலிகளின் ஒருவர் பாக்யராஜ். நிச்சயம் பாராட்டுக்குரியவர். உங்களை வாழ்த்தியது உண்மையிலேயே பெரிய விசயம் தான். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் சரவணன், உங்கள் வாக்கு செலுத்த எடுத்த முடிவும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. இன்னும் இந்த கடிதத்தை நீங்கள் பத்திரமாக வைத்திருப்பதில் இருந்தே தெரிகிறது சார் பாக்யராஜ் மீதும் பாக்யா மீதும் நீங்கள் எவ்வளவு மரியாதை வைத்துள்ளீர்கள் என்று

    பதிலளிநீக்கு
  10. சரவணன் சார்...

    தங்கள் 'இளமை எழுதும் கவிதை நீ' நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்வுற்ற நிகழ்ச்சிகளில் சுவாரஸ்யமானவற்றில் இன்னும் ஒரு சிலவற்றை புதிதாக ஒரு பதிவு தருவீர்களா? இது ஓர் அன்பு வேண்டுகோள்!!!

    பதிலளிநீக்கு
  11. நண்பரே! பாரதி சரவணனே! வாழ்த்துக்கள்! மிகவும் சந்தோஷமாக இருக்கிறது!

    தங்கள் பெருமைகல் மேன்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் அண்ணா...

    தங்களது செயல் பாராட்டுக்குரியது...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்