ஒரு சிறு(தொடர்)கதை.இதில் வரும் மூன்று கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில்
கதையை நகர்த்தியிருக்கிறேன்.(ஏற்கனவே எல்லோரும் செய்தது தான்) மூன்று பகுதிகளாக
தர இருக்கிறேன்.படித்து விட்டு சொல்லுங்கள்.இந்த கதை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் கதை முடியும் போது பகிர்ந்து கொள்கிறேன்
இரு மன அழைப்பிதழ்-1
கதாநாயகி ராதா
மாப்பிள்ளை வந்தாச்சு என்று கல்யாண பெண் ராதாவிடம் வந்து சொன்னாள் அவள் தோழி. சொன்னவுடன் அங்கிருந்த அனைவரையும் ஆவல் பற்றிக் கொள்ள சிலர் ஜன்னலுக்கும் சிலர் வாசலுக்கும் சென்றனர். அவர்களிடம் இருந்த உற்சாகம் ராதாவிடம் இல்லை. மாறாக
சோகத்தில் இருந்தாள் அவள்.மனதின் வேதனையை முகத்திற்கு கொண்டு வராமல் இருக்க ரொம்ப கஷ்டப்பட்டு வெற்றுச் சிரிப்புடன் "அப்படியா "என்றாள். வீட்டில் கல்யாணம் பேச ஆரம்பித்த நாள் முதல் மனதுக்குள் புயலடித்து கொண்டிருந்தது.
காரணம் கிருஷ்ணா. அண்ணனின் நண்பனாக வீட்டுக்குள் நுழைந்து அவள் மனத்திலும் நுழைந்தவன். ஒரு நாள் அண்ணனுடன் வெளியில் சென்ற போது அவனை சந்தித்தாள். அவள் அண்ணன் அவர்களை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று விட அவர்கள் மட்டும் தனியாக. ஏதாவது பேசியாக வேண்டும் என்ற சம்பிராயத்தில் பேச ஆரம்பித்தார்கள். படிப்பு, வீடு, பிடித்தது, பிடிக்காதது என்று பேச்சு வளர்ந்தது. முதலில் சந்திக்கும் போதெல்லாம் பேசினார்கள். பின் பேசுவதற்காக சந்திப்பை உண்டாக்கி கொண்டார்கள்.
வேலை தேடி கொண்டிருந்த கிருஷ்ணாவிற்கு அவளோடு பேசுவதே வேலை என்றாகி
போனது. ஒரு நாள் அவன் வரவில்லை என்றாலும் ஏன் வரவில்லை என்று ராதாவின்
அப்பா அம்மாவே கேட்கும் அளவுக்கு வீட்டில் சுதந்திரமாய் வளைய வந்தான். தன்
விசயங்களில் அவனின் அக்கறை அவளை நெகிழ வைத்தது. அதே போல் தனது விசயங்களிலும்அவன் தன்னிடம் யோசனை கேட்பது அவளை மகிழ வைத்தது.
இதை பார்த்த ராதாவின் தோழிகள் "நீங்க எப்படியும் காதலுக்கு மாறிடுவீங்க "என்று சொன்னார்கள் . அவர்கள் சொன்னது தான் நடந்தது. எப்படியும் எனக்கு ஒரு மாப்பிள்ளை வருவார். அது கிருஷ்ணா வாக இருக்கலாமே என்று ராதா வுக்கு தோன்ற. கூடவே காதலும் வெரூன்றியது.
கிருஷ்ணாவிற்கு வெளியூரில் வேலை கிடைக்க திருச்சி விட்டு சென்னை சென்றான்.
அவனுக்கு உமா எழுதிய மின்னஞ்சல்கள் மற்றும் செல் போன் உரையாடல்களில்
காதல் உள்ளுர நடமாடி கொண்டிருந்தது. ஆனால் அவன் அவளுக்கு எழுதிய
மின்னஞ்சலிலோ உரையாடல்களிலோ காதலின் எந்த நடமாட்டமும் கிடைக்கவில்லை
கிடைத்தது அவளுக்கு வரன் மட்டுமே. நல்ல படிப்பு பெரிய கம்பெனி யில் நல்ல சம்பளத்தில் மாப்பிள்ளை என்று உமாவின் அப்பா அம்மா பிடித்து கொள்ள என்ன சொல்லி
தட்டி கழிப்பது என்று தெரியாமல் இதோ கல்யாணத்திற்கு முதல் நாளான இன்று வரை விழித்து கொண்டிருக்கிறாள் .
" என்ன தூங்காமல் முளிச்சிட்டிருக்கே " என்று கேட்டு கொண்டு அம்மா நுழைய,
" என்ன தூங்காமல் முளிச்சிட்டிருக்கே " என்று கேட்டு கொண்டு அம்மா நுழைய,
கூடவே அண்ணன் "மாப்பிளையின் நினைப்பிலே இருப்பா "என்று சொல்லி சிரித்தவாறே வர "இதற்கு நான் வெட்கபடனுமா என்று சொல்லி தலை குனிந்தவள் இன்னும் ஏண்டா கிருஷ்ணா வரலே என்ற அம்மாவின் கேள்விக்கு தலை நிமிர்ந்தாள்.
"காலையிலே வரான்மா"
" ஏண்டா வீட்ல ஒருத்தர் மாதிரி பழகினவன் ரெண்டு நாள் முன்னாடியே
வர வேண்டியது தானே"
" நம்ம வீட்டு கல்யாணத்தில் கலந்துக்கணும்னே நார்த்
இந்தியா லேருந்து வர்றான். லீவே கிடைக்கலையாம் "
நீயும் எனக்கு கிடைக்க மாட்டாய் போலிருக்கு என்று உள்ளுக்குள் சொல்லி கொண்டாள். கல்யாணம் என்று முடிவானவுடன் உடனே மெயில் அனுப்பினாள் .
போனில் பேச முயற்சி செய்தாள் .செல் போன் சுவிட்ச் ஆப் என்றே வந்தது .
அலுவலகத்தில் விசாரித்தாள். பஞ்சாப் மாநிலத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் அலுவலக வேலையாய் சென்றிருப்பதாகவும் காண்டக்ட் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்கள் .
அவன் மனத்தில் தன்னை பற்றி என்ன நினைக்கிறான் என்று தெரியாமலே இதோ கலயாணத்திற்கு முதல் நாள் இரவு வரை முழித்து கொண்டிருக்கிறாள் .
அலுவலகத்தில் விசாரித்தாள். பஞ்சாப் மாநிலத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் அலுவலக வேலையாய் சென்றிருப்பதாகவும் காண்டக்ட் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்கள் .
அவன் மனத்தில் தன்னை பற்றி என்ன நினைக்கிறான் என்று தெரியாமலே இதோ கலயாணத்திற்கு முதல் நாள் இரவு வரை முழித்து கொண்டிருக்கிறாள் .
நாளை தொடர்வது கதாநாயகன் கிருஷ்ணா
ஆர்.வி.சரவணன்
super anna...
பதிலளிநீக்குthodar thodarattum...
(officeil irunthu tamil font illai)
கதாநாயகியின் கோணத்தில் காதல் துவக்கமும் காத்திருத்தலும் வெளிப்பட்டாயிற்று. நாளை கதாநாயகன் கோணத்தில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவல். சரளமான நடை, சரியான நீளத்தில் பதிவு. மொத்தத்தில் ரசனை!
பதிலளிநீக்கு"அடுத்து என்ன...?" என்று நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்...
பதிலளிநீக்குசுவாரசியமாக செல்கிறது தொடருங்கள்
பதிலளிநீக்குஅளவோடு பரிமாறினீர்கள்!
பதிலளிநீக்குநல்லதோர் ஆரம்பம்! நண்பரே! நாளை கதாநாயகன் வருகிறார் இல்லையா?!! காத்திருக்கிறோம்! தலைப்பே அருமையாக இருக்கிறதே!
பதிலளிநீக்குதொடருங்கள்! நாங்களும் தொடர்கிறோம்!
சுவையாக செல்கிறது கதை! அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குசிறப்பான ஆரம்பம். நாளை கதாநாயகன் என்ன சொல்லப் போகிறார் - தெரிந்து கொள்ள ஆவலுடன்....
பதிலளிநீக்குகாதல் ....காத்திருப்பு அடுத்தென்ன ? வினாவோடு அட இதுவும் நல்லாதானே இருக்கு.
பதிலளிநீக்கு