வெள்ளி, ஜூலை 26, 2013

திஸ் இஸ் T.R. ஸ்டைல்






திஸ் இஸ் T.R.  ஸ்டைல்


என் கல்லூரி நாட்களில்  நான் எழுதிய கதையில்
ஒரு காட்சி.ஹீரோவின்  தங்கை ஒருவரை (செகண்ட் ஹீரோ ) காதலித்து
கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விடுகிறார்.(20 வருஷத்திற்கு முன்னாடி
எழுதின சீன் அப்படி தான் இருக்கும்). ஊராருக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கும் அம்மாவை சமாதானபடுத்த,  கதாநாயகன் பேசுவதாக ஒரு வசனம் வரும். இதில் டி. ராஜேந்தர் நடித்தால் வசனம் எப்படி
இருக்கும் என்று  (ரூம் போடாம ) யோசித்து நான்
எழுதியதை இதோ உங்களுக்காக தருகிறேன். தன் படங்களில் 
செண்டிமெண்ட் சீன்களில் டி .ஆர் கண் கலங்கி தலையை அசைத்த படியே பேசுவார். அந்த கான்செப்டில் படித்து பாருங்கள் 


அம்மா,

ஊரார் சொல்லும் பழி

நமக்கு காட்டாது ஒரு வழி

அவங்க வெட்டுவாங்க நமக்கு அவதூரு ங்கிற குழி

அது நம் போன்றவர்க்கு என்னிக்குமே தீராத வலி

அதுக்காக உங்க மனசிலே ஏன் கிலி

அவங்க பேச்சுக்கு நாம ஏன் ஆகணும் பலி

அவங்க சொல்றதை மனசிலேருந்து அழி

அவங்களுக்கு காலம் தரட்டும் கூலி

நம்ம குடும்பம் சந்தோசமாக வாழ தேடுவோமா ஒரு வழி

அதற்கான மன அமைதியை குடும்பத்திற்கு அளி



 எப்பூடி.... 


ஆர்.வி.சரவணன் 

20 கருத்துகள்:

  1. சூப்பரு...! அதே வ(லி)ழி..!

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஒரு டீ.ஆர் உதயமாகிறார் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனு டி.ஆர் னால் அவர் தான். அவர் போல் வர முடியாது

      நீக்கு
  3. ரூம் போடாம நல்லாவே யோசிச்சியிருக்கிங்க.

    பதிலளிநீக்கு
  4. ஜெயில்ல கிடைக்கும் களி!
    மூக்கில வரும் சளி!
    அந்தக் கருமத்த விட்டு ஒழி!

    எப்பூ...ழி?
    sorry... எப்பூடி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பாட்டுக்கு எதிர் பாட்டா நல்லாருக்கு சார்

      நீக்கு
  5. அன்பின் சரவணன் - அப்படியே டி ஆர நேரில பேசற மாதிரியே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. T .R நம்பர் ரூ........!! :))) வாழ்த்துக்கள் சகோ .ரசிக்க வைத்த பகிர்விற்கு .

    பதிலளிநீக்கு
  7. நண்பருக்கு, உங்கள் படைப்புகள் மிக அருமையாக ரசிக்கும்படியாக உள்ளது. வாழ்த்துக்கள், பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்