புதன், ஜூன் 05, 2013

ஏட்டிக்கு போட்டி







ஏட்டிக்கு போட்டி



சில திரைப்படங்களின் பெயர்களை வைத்து நான் உரையாடிய (எழுதிய )
ஒரு பதிவு 

"ஏய்" 
"யாரை பார்த்து ஏய் னு சொல்றே நான் யார் தெரியுமா"

"எவனாயிருந்தா எனக்கென்ன""திமிரு தானே உனக்கு"

"உனக்கு தான் வாய் கொழுப்பு"


"என்னப்பா ஏட்டிக்கு போட்டி யாவே பேசறே. யாருப்பா நீ""உன்னை போல் ஒருவன்"

"எங்கிருந்து வரே"

"அண்ணா நகர் முதல் தெரு லேருந்து"

"எப்படி வந்தே"

"கிழக்கே போகும் ரயில் லே"

"எதுக்கு வந்திருக்கே"

"நாட்டாமையை பார்க்க"
"பார்த்து"

"அவர் கிட்டே வேலைக்காரன் ஆக வேலைக்கு சேர போறேன்"

"சேர்ந்து" 

"பெரிய இடத்து பெண் யாராவது இருந்தா பார்த்து லவ் பண்ணி 
கல்யாணம் பண்ணி பணக்காரன் ஆக போறேன்"


கேட்டவருக்கு அதிர்ச்சி


இருக்காதா பின்னே ஏன்னா அவர் தாங்க நாட்டாமை



ஆர்.வி.சரவணன் 

தளம் ஆரம்பித்த புதிதில் எழுதிய பதிவு 

6 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா நல்ல முயற்சி... நான் பள்ளியில் படிக்கும் பொழுது நண்பர்களுடன் சேர்ந்து பட பெயர்களை கொண்டு ஒரு காதல் கடிதம் போல் ஒன்றை எழுதிப் பார்த்தோம். இதைப் படிக்கும் பொழுது அந்த நியாபகம் வந்தது

    பதிலளிநீக்கு
  2. அன்பின் சரவணன் - நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. சரவணன் உங்கள் இணையதளம் மிக நன்றாக உள்ளது. உங்கள் எழுத்துக்களும். இதைப் போன்று நான் படிக்கும் காலத்தில் எழுதி கல்லூரி விழாக்களில் அரங்கேற்றியிருக்கிறோம். நீங்கள் எழுதி உள்ளது மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள், பாராட்டுகளுடன் - துளசிதரன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்