சோழர் கால அற்புதம் ஐராவதேஸ்வரம்
(அருள் மிகு ஐராவதேஸ்வரர் கோவில்)
கும்பகோணத்திற்கு மிக அருகில் தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது தாராசுரம் என்ற ஊர்.இங்கே வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்கள் நிறைந்த அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு சமீபத்தில் நான் சென்றிருந்த போது எடுத்த படங்களும்,கோவிலை பற்றிய சிறப்பு தகவல்களும் உங்களுக்காக
கோவிலின் வெளி தோற்றம்
கோவிலின் நுழைவாயில்
கொடிமரம்
கருவறை கோபுரம்
யானை சிற்பத்துடன் கூடிய படிக்கட்டுகள்
கோவில் விமானம்
கோவிலை சுற்றி பசுமையை நிழலை அள்ளி தந்திருக்கும் மரங்கள்
இந்த கோவிலை இரண்டாம் ராஜராஜன் கட்டினார்
(ஆயிரம் வருடங்களுக்கு முன்)
தாரன் என்பவன் வழிபட்டதால் தாராசுரம் எனவும்,இந்திரனின் பட்டத்து யானை ஐராவதம், தன் சாபம் தீர வந்து வழிபட்டு பேறு பெற அருளிய இறைவன் ஐராவதேஸ்வரர் எனவும் இந்த ஸ்தலம் ஐராவதேஸ்வரம் எனவும் பெயர் பெற்றிருக்கிறது
இங்கு உள்ள நந்தி பலிபீடம் இதற்கு அமைந்திருக்கும் படிக்கட்டுகளை தட்டினால் ஒலி எழும்பும் விதத்தில் இசை கற்கள் போன்று அமைந்திருக்கிறது
ராமாயண மகாபாரத நிகழ்சிகள் சிவன் பார்வதி கைலாய காட்சி
முருகன் வள்ளி தெய்வானையோடு காட்சி, முனிவர்கள் தவம் புரியும் காட்சிகள் மண்டப தூண்களில் செதுக்கபட்டிருப்பது பார்க்கும் போது செதுக்கிய சிற்பிகளை பாராட்ட வார்த்தைகள் ஏது
இங்குள்ள மண்டபம் குதிரைகள் பூட்டிய சக்கரங்கள் கொண்ட ஒரு தேர் போன்ற அமைப்பை கொண்டதாகும்
தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் கோவில்களின் விமானங்கள் போன்றே இதன் விமானமும் அமைக்கபட்டிருக்கிறது
இக் கோவிலின் மூலவர் ஐராவதேஸ்வரர்
அம்பாள் வேத நாயகி (தனி சன்னதி.கோவிலுக்கு வடக்கில் அமைந்திருக்கிறது )
மண்டபத்தில் உள்ள பதினாறு கல் தூண்களில், காணப்படும் சிற்பங்களின் கலை நயம் வியக்க வைக்கும்
நர்த்தன விநாயகர்,அர்த்த நாரீஸ்வரர், அகத்தியர், சரப மூர்த்தி, நரசிங்கமூர்த்தி ,தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி,விஷ்ணு துர்க்கை
சிற்பங்கள் அழகுற காட்சியளிக்கின்றன
இந்த அரிய வரலாற்று பொக்கிஷம், சோழர் காலத்தின் புகழை
இன்றளவும் உலகுக்கு உணர்த்துகிறது
ஆர்.வி. சரவணன்
அறிய தகவல்களுடன் கூடிய, அற்ப்புதமான படங்களுடன் பதிவினை இட்டுள்ளீர்கள்... சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி இரவின் புன்னகை
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குதல சிறப்புகளுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
தங்கள் வருகைக்கு நன்றி தனபாலன்
நீக்குபுகைப்படங்களைப் பார்க்கும் பொழுதே நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் உள்ளது சார்
பதிலளிநீக்குகண்டிப்பாக வாருங்கள் சீனு தங்கள் வருகைக்கும் நன்றி
நீக்குFantastic sculptures. Thanks for sharing.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி நாடோடிப் பையன்
நீக்குVeenai illa saraswathi silai onru ullathai ninaivu?
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி. தங்கள் வருகைக்கும் நன்றி
நீக்குதெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்களுடன் அருமையான படங்கள்...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் நன்றி குமார்
நீக்குநான் கடந்த முறை வந்த போது சில படங்கள் திறக்கவில்லை... ஆனால் இப்போது அப்படி இல்லை. அனைத்தும் பார்க்க முடிகிறது... சோழர்கள் சிற்ப்பங்கள் எப்போதுமே தனிச்சிறப்பு வாய்ந்தது... அழகானதும் கூட...
பதிலளிநீக்குநான் போய் பார்க்கனும்ன்னு ஆசைப்படும் இடம். அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குநானும் சமீபத்தில் போய் வந்தேன்.,சில தகவல்கள் புதிது,நன்றி
பதிலளிநீக்குவலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம் கண்டு வந்தேன். மனம் மகிழ்ந்து நின்றேன். நல்ல பதிவுகள். வாழ்க.. வளமுடன்!..
பதிலளிநீக்குதஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் கோயில்களின் கலைப்பாணியில் திருபுவனம் கோயிலும் சேரும். கோயிலுள்ள தொடர் சிற்பங்கள் பெரிய புராணத்தோடு தொடர்புடையவையாகும். இன்றுதான் தங்களது பதிவைப் பார்த்தேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு