ஞாயிறு, மே 19, 2013

ஸ்வீட் காரம் காபி - 19-05-2013








ஸ்வீட் காரம் காபி
-----------------------------------------19-05-2013
(சூது கவ்வினாலும் எதிர் நீச்சலிடு) 


சூது கவ்வும்

நான் ஸ்டாப் காமெடி படம் இது. விமர்சனம் எதையும் படிக்காமல் 
படம் பார்க்க போனதால் படம் பார்க்க நல்ல சுவாரஸ்யமா இருந்துச்சு.
ஆள் கடத்தலை சீரியஸா பார்த்திருக்கோம். இதிலே அதையே நகைச்சுவையா ரூட் போட்டு பண்ணிருக்கார் நலன் குமரசாமி. 
விஜய் சேதுபதி வேலையில்லாத மூன்று  நண்பர்களுடன்  சேர்ந்து 
ஆள் கடத்தி பணம்சம்பாதிக்கிறார்.மந்திரியின் மகனை கடத்தும் போது 
வரும்   சுவாரசிய கலாட்டாக்கள் தான் கதை.விஜய் சேதுபதி கடத்தப்பட்ட பெண்ணின் தந்தையிடம் பணம் வாங்கி கொண்டு நடந்து வரும் இடம் , எம்.எஸ்.பாஸ்கர் மனைவி கணவன் அடிப்பதை கண்டு பயந்து அலறுவது போல் நடித்து, உள்ளே வந்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு இம்சை நீ சாப்பாடை  போடு என்று சாதாரணமாக  சொல்லும் இடம்.  என்று படம் நெடுக நாம் ரசிக்க காட்சிகள் இருக்கிறது. அதே போல் வசனமும் அங்கங்கே பளீரிட்டு நம்மை சிரிக்க வைக்கிறது ."டெய்லி 18 டி குடிக்கிறவனை கடத்த பிளான்  தேவையில்லை ஒரு டீ கடை போட்டா போதும்"  இது ஒரு சாம்பிள் ஹீரோயின் இருக்கு ஆனால் இல்லை என்பது போல் செய்திருக்கும் இயக்குனரின் புத்திசாலிதனம் பளிச்சிடுகிறது.  சந்தோஷ் நாராயண் இசையில் துட்டு மணி..... பாடல் பார்க்கும் போது  நமக்கே ஆடலாம் போல தோணுது. மந்திரி மகன் கடத்தலை எப்படி போலீஸ் கண்டு பிடிக்கவில்லை.

தவறுகளை நியாயபடுத்தும் விதமான கதை இதெல்லாம் மைனஸ் 
என்றாலும் அதையெல்லாம்  தூர வைத்து விட்டு நம்மை ரசிக்க வைத்திருக்கிறது, ஒவ்வொரு காட்சியையும் கேரக்டரையும் கவனம் 
எடுத்து செய்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம்.
(மனசை அள்ளும்  இந்த சூது கவ்வும் )  








எதிர் நீச்சல்

 ஹீரோ  பெற்றோர் வைத்த பெயரை   மாற்றி கொண்டு புது பேரில் வெற்றி பெற ஆசைப்பட்டு வெற்றி பெற்று மீண்டும் தன் பெற்றோர் வைத்த பெயரால் அழைக்கபடுவதை விரும்புவதே கதை. ஹீரோ  சிவ கார்த்திகேயன் தன் பெயரால் அவர் படும்  அவஸ்தை காதல் லட்சியம் என்று அவரது கேரக்டரை ரசிக்க முடிகிறது.பிரியா ஆனந்த் பள்ளி ஆசிரியையாக புடவையிலும்  சுடிதாரிலும்  பார்க்கும் போது மனசை அள்ளுகிறார். இடைவேளைக்கு பின் கதை வேறு உலகத்தில் பயணிப்பதால் முதல் பாதியின் டெம்போ குறைந்தார் போல் ஆகி விடுகிறது. விளையாட்டு வீராங்கனை நந்திதாவுக்காக பழி வாங்க புறப்பட்ட மாதிரி இருக்கிறது 

இதற்கு பதில் இப்படி செய்திருக்கலாம். படம் ஆரம்பிக்கும் போது சிவ கார்த்திகேயன் நந்திதா  விடம்   பயிற்சி பெற வர,  அவர் எதற்காக நீ பயிற்சி பெறுகிறாய் என்று கேட்க சிவா என் புது பெயரில் அறியப்பட ஆசைபடுகிறேன் என்று சொல்ல பெற்றோர் வச்ச பெயர்லயே என்னாலே விண் பண்ண முடியல நீ அப்பா அம்மா வைக்காத புது பெயர் மாற்றி என்ன சாதிக்க 
போறே என்று சொல்லி தன் கதையை அவர் சொல்ல பின்பு சிவா 
தன் கதையை சொல்வதாக அமைத்து பின் ஜெயிக்கும் கட்சிகளை வைத்திருக்கலாம். பாடல்களில் அனிருத்தின் இசையில் , பூமி என்னை சுத்துதே பாடல் நம் காதுகளை சுற்றுகிறது.தனுஷ் வரும் பாடல் வாழை இலை போட்டு பரிமாறிய சைவ சாப்பாட்டில் முட்டை ஆம்லேட் வைத்ததை போன்று தோன்றுகிறது.பள்ளி கூட காட்சிகள்,மாரத்தான் பயிற்சி காட்சிகள்,  நண்பர் கல்யாணத்தில்  நடக்கும் கலாட்டா , ஹீரோவின் நண்பராக வரும் சதீஷ் அடிக்கும் வசனங்கள் என்று படம் முழுவதும் நம்மை ஈர்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் துரை  செந்தில்குமார் 
(சுவாரஸ்ய நீச்சல்)

------


சரிதாயணம் 



வலைபதிவர் நண்பர்  பால கணேஷ் அவர்கள்,  தனது மின்னல் வரிகள் தளத்தில் எழுதி  புத்தகமாக  வெளியிட்ட சரிதாயணம் நூல் படித்தேன். 
எனக்கு  நகைச்சுவையாக எல்லாம் எழுத வராது.ஆனால் நகைச்சுவையாக எழுதப்படும் கதைகளை  விரும்பி படிப்பேன். அந்த வகையில் நான் 
விரும்பி படிப்பது பால கணேஷ் எழுத்துக்களை.   இந்த  புத்தகத்தில் 
வரிகளின் இடையிடையே மின்னலாய் வெளிப்படும் நகைச்சுவை  நம் முகத்தில் புன்னகையை பளீரிட வைக்கிறது. 

அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த  அந்த பெண் நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாக பார்த்து பார்த்து பெருமூச்சு   விட்டாள்,  சரிதா   குறைவு குறைவு  என்று (அதாங்க லோ லோன்னு ) அலறினாள்,     நான் பொறுமை இழந்து கடுங்கோபம் கொண்டதன் விளைவு முன் மண்டை வீங்கி விட்டது அவளுக்கல்ல எனக்கு சுவரில் மடல் மடேலென்று முட்டி கொண்டால் பின் என்னாகும். 

இப்படி நெடுக வரும் நகைச்சுவையுடன், ஹோட்டல் லில் சரிதாவுடன் சாப்பிட செல்வது, கார் ஓட்ட கற்று கொள்வது, செந்தமிழ் கற்று கொள்வது, நண்பன் குடும்ப வாண்டுகளால் வீட்டில் படும் அவஸ்தை  பகுதிகளை விரும்பி ரசித்தேன். எழுத்தாளர் திரு பட்டுகோட்டை பிரபாகர்  மதிப்புரையில்
வெளி வந்திருக்கிறது இந்த புத்தகம்.  பால கணேஷ் சார் ஒரு கண்டிப்பான வேண்டுகோள் .(சரிதாயணம் தொடர்ந்து எழுதியாகணும்)

------

எனது நண்பரின் நண்பர் ( நமக்கும் நண்பர் தானே)  திரு. ராம் கிருஷ்ணா கடலூரில் வசிக்கிறார். அவர் எடுத்திருக்கும் குறும் படம்  காண நேர்ந்தது. தொழில் நுட்ப வசதிகள் குறைவாய் இருந்த போதும் படம் எடுத்திருக்கும் 
அந்த குழுவினரின்  முயற்சியை  போன் செய்து பாராட்டினேன்.  அதற்கு 
அவர் அடைந்த  சந்தோஷம்  பார்த்து எனக்கே ஆச்சரியமாகி விட்டது.
அவரது கண் மற்றும்  சட்டம் தன் கடமையை செய்யும் குறும் படங்களை 
இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஸ்டோரி லைன், சீன்கள், மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் ப்ரெசென்ட் பண்ணிய விதத்தில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். நடிப்பு இன்னும் இயல்பாக இருந்திருக்க வேண்டும்   அதனாலென்ன. குழந்தை நடக்க தொடங்கிய புதிதில் தத்தக்க புத்தக்க என்று நடந்தாலும் அதுவே  அழகு தானே. நண்பர்களே நீங்கள் பார்த்து அவரை ஊக்கபடுத்துங்கள்.(வாழ்த்துக்கள் ராம் கிருஷ்ணா)


சட்டம் தன் கடமையை செய்யும்



கண்


------

  சென்ற வார குமுதத்தில் கோவை மாநகர கமிஷனர் 
திரு.ஏ.கே.விஸ்வநாதன் பற்றிய செய்தி படித்தேன். அதை இங்கே குறிப்பிடுகிறேன். காவல் துறையை சேர்ந்த ஒரு சாதாரண காவலர் குடிபோதையில் சிக்னலுக்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட, அந்த செய்தி பரபரப்பானது. விசாரிக்கிறோம் கமிசன் அமைக்கிறோம் என்றெல்லாம் சொல்லாமல், அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று தன் துறை சார்ந்த ஒருவரின் செயலுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார் கமிஷனர். மேலும் சமீபத்தில் கோவையில் நடந்த தீ விபத்தில் துணிச்சலாக செயல்பட்டு பலரது உயிரை காப்பாற்றிய இளைனர்களை போலீசார் சார்பில் முதலில் அழைத்து கௌரவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், எங்கே எது நடந்தாலும் பாராட்டுவதும் உற்சாகபடுத்துவது   காவல் துறையின் கடமை என்கிறார்.   காவல் துறை என்றாலே ஒரு பயம் தோன்றுவது இயற்கை. அதை போக்கும் விதத்தில் செயலாற்றும் கமிஷனர்  காவல் துறை உங்கள் நண்பன் என்ற  வார்த்தைகளுக்கு தனி அர்த்தம்  தருகிறார் 
( கிரேட் சலுட் சார்)

------

செய்திகள் சில வரிகளில்

நடிகை ஹன்சிகா 22 குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு தேவையான அணைத்து செலவுகளையும் அவரே ஏற்றிருக்கிறார்.

நல்ல மனம் வாழ்க  நாடு போற்ற வாழ்க  

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் புதுப்படம்

புல்லட் னு பேர் வைப்பாங்களோ

மக்களின் நலன் கருதி எங்கள் போராட்டத்தை கை விடுகிறோம் வாட்டர் கேன்  உற்பத்தியாளர்கள் 

அதே போல் மக்கள் நலனை  கருத்தில் கொண்டு தண்ணீரையும்  
பசுமை தீர்ப்பாயம் சொல்வது போல் தரமாய் தாருங்கள் 


ஒரு மரம் கூட இல்லாத சிறையில் என்னை அடைத்தார்கள் -ராமதாஸ் 

மரங்கள் தள்ளி நின்றனவோ 

  ------

FINAL PUNCH


நீ உடலில் அணியும் உடையை விட மேலானது 
முகத்தில் அணியும் மலர்ச்சி

  
ஆர்.வி.சரவணன் 


13 கருத்துகள்:

  1. இரண்டு பட விமர்சனமும், மின்னல் சரிதாயணம் விமர்சனமும் அருமை... செய்திகளோடு Final Punch - Super...

    பதிலளிநீக்கு
  2. வெகுநாளைக்குப் பின் வந்த ஸ்வீட் காரம் காபி சுவைத்தேன் சார்..
    சிரிதாயனத்தில் நானும் அந்த வரிகளை வெகுவாய் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பர்களே! புத்தகம் முழுதாய் படித்து விட்டு பிடித்ததை பகிர்கிறேன் என்றீர்கள் சரவணன். இப்போது இங்கே பாராட்டைப் பார்க்கையில் மனம் மகிழ்கிறது. மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி! தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்க இன்ஜெக்ஷன் உங்கள் போன்ற நண்பர்களின் பாராட்டுக்கள் தானே சரவணன்! ஆகவே தொடர்ந்து எழுதுவேன் நிச்சயம்! மீண்டும் என் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய மகிழ்ச்சி என்னை இன்னும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது பால கணேஷ் சார்

      நீக்கு
  4. எதிர் நீச்சல் படம் பார்த்தேன். சூது கவ்வும் பார்க்கவில்லை. கணேஷின் வரிகளை சொல்லவும் வேண்டுமோ இருப்பினும் தங்கள் விமர்சனத்தில் அருமை.

    பதிலளிநீக்கு
  5. சூது கவ்வும், மற்றும் எதிர் நீச்சல் இரண்டு படங்களுமே மனதை கவர்ந்தன.

    சரிதாயணம் எங்கே கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பாலா சார் சரிதாயணம் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு தங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள் கணேஷ் சாரிடம் கேட்டு வாங்கி அனுப்பி வைக்கிறேன்

      நீக்கு
  6. Thank you for making this interesting article. I'm happy to visit here

    பதிலளிநீக்கு
  7. நான் சூது கவ்வும் பார்த்த போது, அங்கு இருந்தவர்கள் சத்தத்தால் சில வசனங்கள் புரியவில்லை இதனால் திரும்ப பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

    ராமதாஸ் ஐ பாலைவனத்துல உட்கார வைத்து இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. அனைத்துப் பகுதிகளையும்
    சுவாரஸ்யமாய் தந்தீர்கள் சரவணன். நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்