இளமை எழுதும் கவிதை நீ-30
உன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும்
வா நம் வெற்றியை உலகம் கொண்டாடட்டும்
ராஜேஷ்குமாருக்கு சொந்தமான கிருஷ்ணா மருத்துவமனை, அந்த அதிகாலை வேலையிலும் சுறுசுறுப்பாய் பதற்றம் தொற்றிய படி இருந்தது. மருத்துவமனையின் உள்ளே ஆட்கள் பரபரப்பாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க சிவா அம்மா காயத்ரி கத்தி கொண்டிருந்தார்
"ஒழுங்கா இருந்த என் பிள்ளையை ஒழுங்கு படுத்தறேன் னு வீட்டை
விட்டு வெளில அனுப்பிச்சு இப்படி சீரழிச்சுகொண்டாந்து ஆஸ்பத்திரியில் போட்டுட்டீங்க. இப்ப உங்களுக்கு திருப்தி தானே . நம்ம குடும்பத்துக்கு நேர்மை நாணயம் மட்டும் இருந்தா போதும். குழந்தைங்க எல்லாம்
தேவையா என்ன. கோடி கோடியா ஏமாத்தி சம்பாதிச்சு குடும்பத்தோட சௌக்கியமா இருக்கிறவங்களை பார்த்து சந்தோசபட்டுக்குவோம் "
ராஜேஷ்குமார் இதற்கு மௌனமே பதிலாய் அமர்ந்திருக்க, சிவகுமார் அதட்டினார்
அவன் வலது கை விரல்கள் மெதுவாக அருகே நின்று பெட்டில் வைத்திருந்த உமாவின் கை விரல்களை ஆசையுடன் பற்றி கொண்டது. சிவாவின் விரல்கள் தந்த அழுத்தத்திற்கு, உமா தந்த பதில் அழுத்தம் அவர்களின் அழுத்தமான காதலை அங்கிருந்தோருக்கு உணர்த்தின.
நிறைந்தது
ஓவியம் : மணியம் செல்வன் (ஆனந்தவிகடன் )
******
நான் பதிமூன்று வயதில் முதலில் சிறு கதை எழுதிய போது அதை
பாராட்டி எல்லோரிடமும் சொல்லி பெருமைப்பட்ட என் தாத்தா
திரு .முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்
******
முடிவுரை
என்னுள் இருபத்தைந்து வருடங்களாக இருந்த இந்த கதையை எழுத்துக்களில் பார்க்கும் பரவசம் எனக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கு ஊக்கம் தந்த என் அலுவலக நண்பர்களுக்கும், கண்டிப்பாக எழுதுங்கள் என்று சொல்லி இதோ இந்த அத்தியாயம் வரை ஊக்கபடுத்திய வலைபதிவர் நண்பர் (கரை சேரா அலை) அரசன், அடுத்த அத்தியாயம் எப்போது என்று போனிலும் கருத்துரையிலும் கேட்டு உற்சாகபடுத்திய ( நிசாம் பக்கம் பல்சுவை பக்கம்) நிசாமுதீன் , தன் கருத்துக்களால் எனை அடுத்த அத்தியாயம் நோக்கி செல்ல வைத்த நண்பர் (கிரி ப்ளாக்) கிரி,மற்றும் (திடங்கொண்டு போராடு ) சீனு, பாலா பக்கங்கள் பாலா,மனசு குமார், படங்கள் வரைந்து தந்த,படித்து வந்த இணைய தோழிகள் மற்ற ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி
எப்போதும் நான் முணுமுணுக்கும் ஒரு பாடலின் வரிகள் இங்கே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனமாகும்
ஆர்.வி.சரவணன்
ஒருபயனத்தின் இடையில் வந்து நான் இணைத்து கொண்டாலும் முழுவதும் அனுபவித்து உணர்ந்த ஒரு திருப்தியைக் கொடுத்தது சார்...
பதிலளிநீக்குஇன்று தான் நினைத்தேன் இன்னும் கிளைமாக்ஸ் வரவில்லையே என்று.... ஆச்சரியம் வலையைத் திறந்தால் இளமை எழுதும் கவிதை நீ...
நிறைவான ஒரு பயணம் மிக்க நன்றி சார்... இத்தனை நாள் தொடர்ந்து பொறுமைyai எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள் பல...
இறுதியில் என்னையும் குறிபிட்டமைக்கு நன்றி
சக மனிதனின் எல்லா உணர்வுகளையும் படம் பிடித்து காட்டிய வரிகள் எல்லா பகிர்வுகளிலும் காணக்கிடைத்தன. ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நின்றன. இறுதியில் சுபமாக முடித்த விதம் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குசரவணன் முதலில் வாழ்த்துக்கள் :-)
பதிலளிநீக்குஒரு தொடர் எழுதுவது என்பது சாதாரண விசயமல்ல அதுவும் 30 பகுதி என்பதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். அதற்கு காரணமில்லாமல் இல்லை.. எந்த ஒரு விசயத்திற்கும் ஆதரவும் ஊக்கமும் இருந்தால் மட்டுமே தொடர முடியும். சில பகுதிகளில் ஆதரவு குறைவாக இருக்கும் அது போன்ற சமயங்களில் அடுத்த பகுதி எழுத ஆர்வம் குறைந்து விடும்... என்ன தான் நம்முடைய ஆசை விருப்பம் என்று எழுதினாலும் அதற்கும் நான்கு பேர் கருத்து கூறும் போது தான் நமக்கும் உற்சாகமாக இருக்கும்.
அந்த வகையில் இவ்வளவு நீண்ட தொடராக எழுதுவது என்பது பெரிய விஷயம் தான்.
கதையில் சில இடங்களில் என்ன நடக்கும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது என்றாலும் தொடர் சுவாரசியமாக சென்றது என்பதை மறுப்பதற்கில்லை. நேரம் கிடைக்கும் போது இதில் உள்ள சில எழுத்துப் பிழைகளை சரி செய்து விடுங்கள். ஒருவேளை நாளை நீங்கள் புத்தகமாக போட நினைத்தால் வேலை குறையும்.
இன்னொன்றை குறிப்பிட நினைத்தேன் மறந்துட்டேன்... :-) உங்கள் தொடரின் துவக்கத்தில் தடுமாற்றம் இருந்தாலும் போகப் போக எழுத்தில் அனுபவம் கூடி இருந்தது. படிக்கவும் நன்றாக இருந்தது.
மேலும் இது போல ஒரு தொடரை உங்களுக்கு நேரம் அமையும் போது ஆரம்பியுங்கள்.
அன்புடன்
கிரி
இப்படி ஒரு படைப்பை உங்களிடம் இருந்து சற்று தாமதமாக வந்திருக்கிறது என்பது தான் சற்று வருத்தம் ... இது இதோடு நிற்கவில்லை , இன்னும் நிறைய படைப்புக்கு இது தொடக்கமாய் அமைய வேண்டிக் கொள்கிறேன் சார் ... இனிதான கதை இன்பமாய் முடிவுற்றது ....
பதிலளிநீக்கு'சுபம்' என்று கதை முடிந்ததும்தான் என் மனது நிம்மதி அடைந்தது.
பதிலளிநீக்குநன்றி சரவணன் சார், கதையை இனிய நிகழ்வாக முடித்தமைக்கு.
தொடர்கதையின் பாத்திரங்களான
பதிலளிநீக்குசிவா,
உமா,
கார்த்திக்,
கீதா,
பாலு,
அருள்
போன்ற அனைவர்களின் பாத்திரங்களும்
பெயர்களும் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்
என்பது உறுதி.
எனக்கு படிக்கின்ற வசதியின்மையினால் சற்றே தாமதமாக
பதிலளிநீக்குஎனது கருத்துரையை எழுதுகின்றேன்.
தங்கள் நுயற்சியினால் வெற்றிகரமாய் ஓர் இனிய
படைப்பை வழங்கினீர்கள். சிறிது இடைவெளிக்குப் பின்னர்
அடுத்த படைப்பை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் சார்.
எனது பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சார்.