ஸ்வீட்....காரம்....காபி
________________________________________
10-9-12
சமீபத்தில் இரவு சன் டிவி யில் ஆண் பாவம் . இந்த படம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் அலுக்காத படம் என்பதால் மீண்டும் பார்த்தேன். இந்த படத்தை பற்றி தனி பகிர்வே கொடுக்கிற அளவுக்கு விஷயம் இருக்கு( அது பின்னாடி பார்க்கலாம்) இப்ப நான் சொல்ல வர்றது அந்த படத்தில்
வரும் ஒரு டயலாக் ரொம்ப பிடிச்சிருந்தது ரேவதி வாய் பேசாமல் போய், மருத்துவமனையில்
இருக்கும் போது பார்ப்பதற்கு வி.கே.ராமசாமி வருவார் (அவரது மகன் பாண்டியனுக்கு ரேவதியை
நிச்சயம் செய்திருப்பார்) அப்ப ரேவதியை பார்த்து ஆறுதல் சொல்வார் "வருத்தபடாதம்மா
எங்க வீட்டு பூஜை அறையிலே எத்தனையோ சாமீ படங்கள் இருக்கு அதெல்லாம் பேசுதா என்ன
அந்த மாதிரி நீயும் ஒரு சாமின்னு நாங்க நினைச்சுக்கிறோம் "(மாற்று திறனாளிகள் கடவுளின் குழந்தைகளாக சொல்லபடுவதுண்டு இந்த டயலாக் ஒரு படி மேலே போய் அவர்களை கடவுள் என்று சொல்வது வாட் எ டயலாக் என்று சொல்ல வைத்தது )
------
கார்டூனிஸ்ட் மதனின் வந்தார்கள் வென்றார்கள், வட இந்தியா வை ஆட்சி செய்த மன்னர்கள் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகளை அவர் ப்ரெசென்ட் செய்திருக்கும் விதம் படிக்க வெகு சுவாரசியம் தந்தது நான் தற்போது ஹுமாயுன் ,அக்பர், ஜகாங்கீர் பற்றிய வரலாறு வரை படித்திருக்கிறேன். (அதிலிருந்து ஒரு தகவல் அக்பர் சக்கரவர்த்திக்கு புத்தகங்கள் என்றால் உயிர். அவர் லைப்ரரியில் இருந்த புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை 24000௦௦ . பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள் கலை
கவிதை தத்துவம் என்று விவாதிப்பதை கூர்ந்து கேட்டு ஒரு வரி விடாமல் கிரகித்து கொள்ளும் திறமையும் பிரமிப்பூட்டும் அளவு நியாபக சக்தியும் அவருக்கு இருந்தது இதில் ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால் மாமன்னர் அக்பருக்கு எழுத படிக்க தெரியாது). அவர்களை பற்றிய செய்திகள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் படிக்கையில் வியப்பும் கூடவே ஐநூறு வருடங்களுக்கு முன்பே சென்று வந்தது போல் ஒரு பீலிங் கும் ஏற்படுகிறது.(வந்தார்கள் வென்றார்கள் மனதில் நின்றார்கள் என்றும் சேர்த்து கொள்ள வேண்டும் )
------
நான் படத்தில் வரும் ஒரு பாடல், மக்காயல மக்காயல..... இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை இந்த பாடல் இப்ப என்னோட favourite சாங். விஜய் அன்டனி யின் மியூசிக், மற்றும் அந்த டான்ஸ் (கை அசைவுகள்), ஹீரோயின் முக பாவங்கள் காரணமாக இருக்கலாம் . கூட ஆடும் அந்த இன்னொரு ஹீரோ கூட நல்ல பர்பார்மன்ஸ் செய்திருக்கிறார் (விஜய் அண்டனி இந்த பாடலில்
நான் இருக்கிறேன் என்று முத்திரை பதிக்கிறார் )
---------
ஒரு நாள் நான் பஸ் ஏறிய போது நல்ல கூட்டம் நான் நின்ற இடத்திற்கு பக்கத்தில் இருந்த இருக்கை காலியானது. சரி உட்காரலாம் என்று நினைத்து அருகில் செல்ல, அப்போது பக்கத்தில் நின்ற ஒருவர் இருங்க பஸ்லே இப்ப தான் ஏறுனீங்க அதுக்குள்ளே உடனே உட்காரணும்னு ஆசைபடறீங்க என்றவாறு உட்கார்ந்தார். எனக்கு வந்தது பாருங்க கோபம் நான் கேட்டேன் "ஏன் பஸ்லே ஏறினவுடனே உட்கார கூடாது னு எதுனா சட்டம் போட்டிருக்காங்களா என்ன, நீங்க உட்காரணும்னு நினைச்சா என்னாலே முடியலே உட்கார்ந்துக்கிறேன் னு சொல்லிட்டு உட்காருங்க அத விட்டுட்டு எனக்கு நீங்க ரூல்ஸ் போடாதீங்க என்று கடுப்படித்தேன் ( என் ஆக்சன்க்கு அவரிடமிருந்து நோ ரியாக்சன்)
------
செய்திகள் சில வரிகளில்
நீல் ஆம்ஸ்ட்ராங் சென்ற வாரம் காலமானார் - செய்தி
(நிலவில் காலடி வைத்தவர் இப்போது சொர்க்கத்தில் காலடி வைத்திருக்கிறார்)
******
சிவகாசி அருகே வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நடிகர் மம்முட்டி ரூபாய் 35 லட்சத்திற்கான மருந்துகளை இலவசமாக வழங்கியிருக்கிறார் - செய்தி
"வேதனையோடு வாழ்க்கையில் போராடுபவர்களுக்கு உதவுவதை போல் மனதுக்கு மகிழ்ச்சி
வேறு எதுவும் கிடையாது" இது நான் சொல்லல மம்முட்டி அவர்கள் இது விசயமாக இப்படி குறிப்பிட்டுள்ளார். நானும் இதை ரீபீட்டுக்கிறேன் (நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க)
------
ஜோக் ஸ்பாட்
"என்ன மந்திரியரே நான் போருக்கு கிளம்பும் நேரத்தில் வெற்றி திலகமிட்டு வழியனுப்ப மகராணி இன்னும் வரவில்லையே"
"மகராணி டிவி சீரியல் பார்த்து கொண்டிருப்பதால் உங்களை வாழ்த்தி எஸ் எம் எஸ் அனுப்பியுள்ளார் பார்க்கவில்லையா நீங்கள்"
------
ஹர்ஷவர்தன் கார்னர்
இந்திய நாடு நம் வீடு
------
நான் சென்ற வாரம் வைரஸ் பீவர் வந்து அவதிப்பட்ட போது , ஹாஸ்பிடல் போய் ட்ரிப்ஸ் போட்டுக்கும் படி ஆகிடுச்சு (விஷயம் அதுல்லே ) அப்ப யோசிச்சதுலே வந்தது தான் இந்த
தலைப்பு (நீங்க உங்க ஊக்கம் என்ற ட்ரிப்ஸ் (கமெண்ட்ஸ்) தொடர்ந்து கொடுத்துட்டு இருங்க. அப்ப தான் இந்த ஸ்வீட் காரம் காபி இன்னும் சிறப்பா வரும் என்பது என் தாழ்மையான கருத்து
ஆர்.வி.சரவணன்
வரும் வாரா வாரம்......
வந்தார்கள் வென்றார்கள் நானும் படித்துள்ளேன்! மிகச்சிறப்பான புத்தகம்! பஸ்ஸில் நடந்தசம்பவம் ஓக்கே! நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள்! ஸ்வீட் காரம் காபி நல்லாவே இருக்கு தொடருங்கோ!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html
நன்றி சுரேஷ்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு(நிலவில் காலடி வைத்தவர் இப்போது சொர்க்கத்தில் காலடி வைத்திருக்கிறார்)super
நீக்குharshavardhan
என்னாது மக்கயால பிடிக்குதா நீங்க யூத்து தான்
பதிலளிநீக்குஹா....ஹா
நீக்குஅனைத்துமே நறுக்-என்று இருக்கின்றன.
பதிலளிநீக்குதொடருங்கள்.
நன்றி நிசமுதீன் தங்கள் ஊக்கத்திற்கு நன்றி
நீக்குஅனைத்துமே நறுக்-என்று இருக்கின்றன.
பதிலளிநீக்குதொடருங்கள்.
ஸ்வீட் காரம் காபி இன்னும் சிறப்பாக மலர வாழ்த்துகள் !
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்திற்கு நன்றி மேடம்
நீக்குஸ்வீட்டும் காரமும் காபியும் அருமை..
பதிலளிநீக்குஇன்னும் வரும் வாரங்களில் சிறப்பாக வரட்டும்.
தொடர்ந்து வரட்டும்.
நல்லா இருக்குங்க... சில தகவல்கள் அறியாதவை... நன்றி...
பதிலளிநீக்குஸ்வீட் காரம் காபி மூன்றையும் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது எனினும் இந்த உங்களோட மூன்றும் எப்பவும் ரசிக்கலாம் அருமைங்க சார் .. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅரசன் சேசெப்டம்பர் 10, 2012 2:57 am
பதிலளிநீக்குஸ்வீட் காரம் காபி மூன்றையும் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது எனினும் இந்த உங்களோட மூன்றும் எப்பவும் ரசிக்கலாம் அருமைங்க சார் .. வாழ்த்துக்கள்
>>>
ஏன் முடியாது. முதல்ல ஸ்வீட் சாப்பிடுங்க, அப்புறம் காரம் சாப்பிடுங்க. கடைசியா காஃபி குடிங்க சரியா சகோ?
சரவணன் உங்களோட ஸ்வீட் காரம் காபி நன்றாக உள்ளது. நிச்சயம் தொடருங்கள்.
பதிலளிநீக்கு//என் ஆக்சன்க்கு அவரிடமிருந்து நோ ரியாக்சன்//
சரவணன் கூட கோபப்பட்டு பேசுவார் போல இருக்கே :-)
"நிலவில் காலடி வைத்தவர் இப்போது சொர்க்கத்தில் காலடி வைத்திருக்கிறார்"
:-)