ஞாயிறு, ஜூலை 29, 2012

இயற்கையின் மடியில்....

இயற்கையின் மடியில்....


எனது அம்மாவின் அம்மா அதாங்க பாட்டியின் சொந்த ஊருக்கு, (அன்னப்பன் பேட்டை) கடவுள் வழிபாட்டிற்காக சென்றிருந்தோம்.

சிறு வயதில் ஓடி விளையாடிய இடங்களை இப்போது சென்று பார்ப்பது என் மனதுக்குள் எவ்வளவு சந்தோசத்தை அள்ளி வழங்கியது தெரியுமா. அதிலும் மனைவி குழந்தைகளுக்கு நான் விளையாடிய இடங்களை காண்பித்து சிறு குழந்தை போல் குதூகலித்தேன்.

என் அம்மா, மனைவி,மகன், மகள், மற்றும் உறவினர்களுடன் வழிபாடு முடித்து விட்டு அந்த ஆற்றங்கரையோரம் அரச மர நிழலில் அமர்ந்து (இளையராஜா பாடல்களை செல் போனில் ஒலிக்க விட்டு கேட்டு கொண்டே ) சாப்பிட்டது மனதுக்கு இன்னும் இனிமையை தந்தது. அங்கே நான் எடுத்த சில படங்களை தான் இங்கே பகிர்ந்துள்ளேன்

இந்த இடம் தஞ்சாவூர் கும்பகோணம் இடையே தஞ்சாவூரிலிருந்து பதினைந்து
கிலோ மீட்டரில் திட்டை என்ற ஊருக்கு அருகே உள்ளது



ஊருக்குள் நுழையும் போது சாலையோரம் கோவில் ஒன்று


ஊர் செல்லும் வழியில் சாலையில் உள்ள ஆல மரம்
சாலையை தொட முயற்சிக்கும் விழுதுடன்



ஊர் செல்லும் வழியில் சாலையோரம் வரிசையாய் நின்று வரவேற்கிறதோ
என எண்ண வைக்கும் பனை மரங்கள்



தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் வறண்டு கிடக்கும் வெட்டாறு


வறண்ட ஆற்றினுள்ளே வளர்ந்து ஆறுதலுடன் அதற்கு துணை நின்று காற்றுடன் விளையாடும் நாணல்


சில இடங்களில் பசுமை துளிர் விட்டு நிற்கும் அற்புதம்


ஆற்றங்கரையோரம் அரச மரம் நிழல் தர கூடவே இலைகளின் இடையில்
நம்மை நலம் விசாரிக்கும் கதிரவனின் கதிர்கள்


இயற்கையின் மடியில் இளைப்பாறிய திருப்தியுடன் டூ வீலரில்
எங்கள் மகன் ஹர்ஷவர்தன், மகள் ஜனனி

இயற்கை
நமக்கு தரும் இனிமைக்கு தான் எல்லையேது
ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

  1. படங்கள் நாங்களே அவ்விடத்தில்
    இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்திப்போகுது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. கட்டுரையும் குதூகலம். படங்களோடு வர்ணனைகள் இதமான இறகின் தடவல்.

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ஊரை பார்த்த மாதிரி இருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. உங்களின் ஊருக்கு ஒரு ரவுண்டு சுற்றி (படங்கள் மூலம்) காண்பித்து விட்டீர்கள்...

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    பதிலளிநீக்கு
  5. இயற்கை தரும் இனிமைக்கு எல்லையே இல்லை...ரசித்தேன் அண்ணே..

    பதிலளிநீக்கு
  6. ஒரு ரவுண்டு ஜாலியா போயிட்டு வந்துட்டீங்க.. தண்ணீர் இல்லாமல் மொட்டையாக இருப்பதைப் பார்க்கவே கஷ்டமாக உள்ளது. எங்கள் ஊரில் தற்போது தண்ணீர் பிரச்சனையாம்.. மழை பெய்யாததால்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்