தல WIN மங்காத்தா ஒரு பகிர்வு
இந்த படத்தை நான் எனது ஊரான கும்பகோணத்தில் பார்த்தேன் ஆனால் பாருங்க ,நான் செல்லும் போது படம் ஆரம்பித்து கொஞ்சம் நேரமாகி விட்டது ஆகவே என்னால் படத்தில் சரியாக ஒன்ற முடியவில்லை எனவே மீண்டும் சென்னை வந்தவுடன் சென்று பார்த்தேன். படத்துக்கு நான் லேட்டா போனது போல் , படத்தை பற்றிய பகிர்வும் சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு
அஜித் நடிப்பு இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது (ஏற்கனவே அவரது படங்களில் ஆசை, அமர்க்களம், வாலி,காதல் கோட்டை, எனக்கு பிடித்த படங்கள் அதற்காக மற்ற படங்கள் பிடிக்காது என்று அர்த்தமல்ல கதையும் அவரது கேரக்டரும் இந்த படங்களில் அவர் மேல் ஒரு ஈர்ப்பை கொடுக்கும் வண்ணம் இருக்கும் )
அஜித் முழுக்க முழுக்க இதில் வில்லனாகவே நடித்திருக்கிறார் நான் எப்படியும் கடைசியில் அவர் நல்லவனாகி விடுவதாக கதை முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நடப்பதே வேறு.
மணி....மணி.... என்று சொல்வது
ஆக்சன் கிங் என்று உச்சரிப்பது
அர்ஜுன் மனைவியை தன் பிடிக்குள் வைத்துகொண்டு அர்ஜுனிடம் பேரம் பேசுவது,
பணம் காணவில்லை என்றவுடன் கோபத்தில் தன் கன்னத்தில் தானே அறைந்து கொள்வது
அலட்டி கொள்ளாமலே சண்டை செய்வது
பிரேம்ஜி யை கொல்லுவது பற்றி அவர் தின்க் பண்ணும் போது இவன் இப்படி சொல்ல மாட்டானே என்று யோசிப்பது,
துப்பாக்கி முனையில் த்ரிஷா அப்பாவை casual ஆக அழைத்து வருவது என்று
இப்படி படம் முழுக்க அஜித் அமர்க்களம் செய்திருக்கிறார்
த்ரிஷா அப்பாவை காரிலிருந்து கீழே தள்ளி விட்டு அதை பற்றி ஒன்றும் அலட்டி கொள்ளாமல் செல்வதை அஜித்தின் வில்லன் நடிப்புக்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்
வெங்கட்பிரபு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் அதே போல் அனைத்து கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்தும், எடுத்து சென்றிருக்கிறார்.அஜித்தின் வசனம், நடை, உடை, பாவனை என்று அனைத்திலும் அக்கறை கொண்டு அவரது கேரக்டரை வடிவமைத்திருக்கிறார். இருந்தும் அஜித் ஏன் இந்த சாதாரண கூட்டணியோடு பணம் கொள்ளை அடிக்க முடிவு செய்கிறார் என்பதற்கு சரியான விளக்கமில்லை
த்ரிஷா கேரக்டர் கொஞ்சம் தான் என்றாலும் அஜித்தின் சுயரூபம் தெரிந்து திகைக்கும் போது அந்த கேரக்டர் மேல் ஒரு பரிதாபம் தோன்றுகிறது
அந்த நால்வர் கூட்டணி யில் வைபவ் ஓகே
பாடல்கள் சூப்பர் ஹிட் என்றாலும் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா முன்னணி வகிக்கிறார்
ஐம்பதை வெற்றியுடன் தொட்டதற்கு வாழ்த்துக்கள் அஜித் சார்
ஆர்.வி.சரவணன்
yeah gud movie.. i watchd twice
பதிலளிநீக்குநண்பரே இன்னும் பார்த்து கொண்டே இருக்கிறோம். சலிக்கவில்லை மங்காத்தா...
பதிலளிநீக்குநன்றி. பார்த்திடுவோம்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு..தல போல வருமா.. நான் இங்கே(qatar) ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவே பார்த்தாச்சு.. :))
பதிலளிநீக்குதல ஜெயிச்சிட்டாரு...............
பதிலளிநீக்குthala pola varuma
பதிலளிநீக்குsoopar boss..!
பதிலளிநீக்கு