நிலவு ஒரு அட்சய பாத்திரம்
அம்மாவாசையன்று வாராது வெண்ணிலவு
அதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு
அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்
நிலவின் துணையுடன் விண்மீன்களும் நானும்
என்னவள் வீட்டின் ஜன்னலில் நுழையும் நிலவே
என் காத்திருப்பை சொல்வாயா
எனக்காக தூது செல்வாயா
அமைதியான இரவில் அன்பாய் உரையாடும் நம்மை
நிலவு மேக திரையில் ஒளிந்து ஒளிந்து பார்க்கிறதோ
நிலவுக்கு தேய்பிறை வளர்பிறை இருந்தாலும் அன்பே
நம் காதலுக்கு வளர்பிறை மட்டும் இருக்கட்டும்
நிலவு நமக்கொரு அட்சய பாத்திரம்
அன்பே நித்தம் எனக்கது கவிதை தரும்

ஆர்.வி.சரவணன்
இந்த கவிதையும் தளம் ஆரம்பித்த புதிதில் நான் வெளியிட்டது தான்
ரொம்பவும் அழகா இருக்கு :-)
பதிலளிநீக்குசரவணன்,
பதிலளிநீக்குமீள்பதிவா? என்றாலும் அட்சயா அருமை!
என்னவள் வீட்டின் ஜன்னலில் நுழையும் நிலவே
பதிலளிநீக்குஎன் காத்திருப்பை சொல்வாயா
எனக்காக தூது செல்வாயா //
தூது சொல்லிச்சுங்களா சார் ..
மிகவும் இளமை ததும்பிய காதல் நிரம்பிய வரிகள் ..
வாழ்த்துக்கள் சார்
கவிதை ரொம்ப அழகாயிருக்கு!உங்கள் மனைவி பார்த்தால் அடுத்த தொடர்வண்டியை பிடித்து வந்திடுவாங்க!!!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி
பதிலளிநீக்குஆம் சத்ரியன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தூது சொல்லிச்சுங்களா சார் ..
பதிலளிநீக்குநிலவை கேட்டு சொல்றேன் அரசன் ஹா ஹா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கவிதை ரொம்ப அழகாயிருக்கு!உங்கள் மனைவி பார்த்தால் அடுத்த தொடர்வண்டியை பிடித்து வந்திடுவாங்க!!!!
பதிலளிநீக்குஅவருக்கு நான் கவிதைகள் உடனே எழுதியவுடன் சொல்லி விடுவேன் தென்றல்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி