திங்கள், ஆகஸ்ட் 22, 2011

காஞ்சனா ஒரு பகிர்வு



காஞ்சனா ஒரு பகிர்வு

காஞ்சனா இந்த படத்தின் ட்ரைலர் டிவி யில் பார்க்கும் போது படம் இந்த அளவு நன்றாக இருக்கும் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை நல்லா இருக்கு என்று நண்பர்கள் சொல்ல விமர்சனங்களும் படம் பார்க்கும் ஆர்வத்தை கிளப்பி விட நேற்று சென்று படம் பார்த்து விட்டு வந்தேன்

திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் தந்து திகிலை காமெடியில் தோய்த்து ராகவா லாரென்ஸ் கொடுத்திருக்கும் இத் திரைப்படம் நமக்கு
ஒரு ஜாலி த்ரில்லர் .

ராகவா லாரென்ஸ்


மனிதர் பயத்தில் அலறி கொண்டு வந்து அம்மா அண்ணி என்று ஒவ்வொருவர் மடியாய் ஏறி கொள்வதாகட்டும் ஆவி புகுந்த பின் பெண் சாயலில் அபிநயம் செய்வதாகட்டும் கிளைமாக்ஸ் இல் வில்லன தேவனை வெளுத்து வாங்குவதாகட்டும் மனிதர் அதகளப்படுத்துகிறார்

சரத்குமார்

திருநங்கையாக வே மாறியிருக்கிறார் .அறிமுக சீனில் பாய்ந்து வருவதாகட்டும் மேடையில் தங்கள் நிலை குறித்து சொல்லி கலங்குவதாகட்டும் சண்டை காட்சியில் பந்தாடுவதாகட்டும் சரத்குமார் நீங்கள் கிரேட் குமார்



கோவை சரளா தேவதர்ஷினி

மாமியார் மருமகள் சண்டை போடும் கேரக்டர்களாகவே பார்த்து பழகிய நமக்கு மருமகள் மாமியாரிடம் நொடிக்கு ஒரு முறை ஆசிர்வாதம் வாங்குவதும் மாமியார் மருமகளுடன் தோழி போல் கூடவே ஜோவியலாய் பேசி பழகுவதுமான இந்த கேரக்டர்கள் நமக்கு பார்ப்பதற்கு சந்தோசமாய் இருக்கிறது இந்த படத்தில் கோவை சரளா மிக முக்கிய கேரக்டராக ஜொலிக்கிறார் என்றால் அது மிகையல்ல இப்படி ஒரு கேரக்டருக்காக தான் காத்திருந்தேன் என்று சொல்லாமல் சொல்லி பிச்சு உதறியிருக்கிறார்

ஹீரோயின் லட்சுமிராய் ஒரு டான்ஸ் ஹீரோவுடன் கொஞ்சம் ரொமான்ஸ் அவ்வளவே

இடைவேளைக்கு முன்பு வீட்டில் ஆவி இருக்கிறதா இல்லையா என்று இருவரும் கண்டுபிடிக்கும் காட்சியில் தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது இடைவேளை போடும் போது ஆவி வரும் காட்சி திகிலை கிளப்பி விடுகிறது

அதே போல் ஆவி புகுந்த லாரென்ஸ் வீட்டில் உள்ளோரை அடித்து துவைக்கும் போது கோவை சரளா தொடர்ந்து சிரித்து கொண்டே சமாளிப்பதும் தேவதர்ஷினி புருஷனை யாரென்றே தெரியாது என்று சொல்லி தப்பிக்க முயற்சிப்பதும் ஸ்ரீமன் ஆவியை பார்க்கும் போதெல்லாம் வாய் கோணி கொண்டே படுத்து கொண்டு விடுவதும் என்று ஒரே ரகளை தான்.


கிளைமாக்ஸ் சில் கொஞ்சம் விட்டால் நம் முகத்தில் ரத்தம் தெறிக்கும் அளவுக்கு ஒரே ரத்த மயம் ராகவா லாரென்ஸ் போடும் ஆட்டம் கதி கலங்க வைக்கிறது

திகில் காட்சிகளை சிரித்து கொண்டே ரசிக்க வைக்கும் இந்த

காஞ்சனா சூப்பர் னா

ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

  1. அப்பாடா ஓசியில் ஒரு படம் பார்த்துட்டேன்...அதான்ப்பா உங்கள் விமர்ச்சனம் படம் பார்த்த ஃபீலிங் கொடுத்திருச்சு... நன்றி r.v.s....

    பதிலளிநீக்கு
  2. செம படம்!.. இரண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம்

    பதிலளிநீக்கு
  3. நல்ல படம் சரவணன். இதே கருத்துத்தான் எனக்கும்.

    பதிலளிநீக்கு
  4. சார் அழகிய விமர்சன பகிர்வு.
    என்னால் தங்களுடன் வர இயலாமல் போனதற்கு மன்னிக்கவும்.
    நல்ல படத்தை தவற விட்டுவிட்டேன் என்று இப்போ வருத்த படுகிறேன் .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்