திங்கள், ஆகஸ்ட் 08, 2011

(கல்யாணம் பண்ணிய) பேச்சிலர் வாழ்க்கையில் ....




(கல்யாணம் பண்ணிய) பேச்சிலர் வாழ்க்கையில் ....

கல்யாணத்திற்கு பின் வேலை காரணமாக நாம் தனியே வேறு ஊரில் இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது அப்பொழுது நமக்கு கிடைக்கும் சவுகரியங்கள் என்ன என்பது பற்றி கொஞ்சம் ஜாலியாக யோசித்தேன் பாருங்க ஒரு பதிவு போடுற அளவுக்கு விஷயம் கிடைச்சிடுச்சு இதோ ஒரு பதிவாகி விட்டது இந்த சவுகரியங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்
ஏனெனில் இது எனது அனுபவம் மட்டுமே


* நைட் ரொம்ப நேரம் டிவி பார்த்துட்டு காலையில் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் தூங்கிட்டிருக்கலாம். யாரும் எழுந்திரு
என்று நம்மை டிஸ்டர்ப் பண்ண மாட்டார்கள்
(என்ன அப்படியே தொடர்ந்து நேரம் தெரியாமல் தூங்கிடோம்னா அன்னிக்கு வேலைக்கு விடுமுறை தான் எடுக்க வேண்டியிருக்கும் )

*துவைக்க வேண்டிய துணிகளை எப்ப வேணும்னாலும் எவ்வளவு வேணும்னாலும் சேர்த்து வைச்சுகிட்டு எப்ப முடியுதோ அப்ப துவைக்கலாம்
(என்ன தொடந்து துவைக்காமல் விட்டுட்டால் அலுவலகம் கிளம்பும் போது போட்டுக்க டிரஸ் இல்லாமல் முழி பிதுங்கி நிக்க வேண்டியிருக்கும் )


*சாப்பாடு விசயத்தில் அன் லிமிடெட் தான் அதாவது எது பிடிக்குதோ எப்படி பிடிக்குதோ எப்ப பிடிக்குதோ நம்ம டேஸ்டுக்கு தகுந்தார் போல் சமைச்சு சாப்பிடலாம்
(ஆனா என்ன பிரச்சினைனா சமைக்கும் போது அளவு தெரியாமல் போட்டு சமைச்சு சாப்பிட முடியாமல் ஆகிடும். கூடவே பத்து பாத்திரங்கள் வேறு மலை போல் குவிந்து போய் நம்மை மிரட்டும் வாய்ப்பும் இருக்கு )


*நைட் சுத்திட்டு எவ்வளவு நேரம் கழித்தும் வீடு திரும்பலாம்
(வாசல் கேட் பூட்டப்படாமல் இருந்தால் கொண்டாட்டம் தான் பூட்டப்பட்டிருந்தால் திண்டாட்டம் தான் )


*டிவி சானெல் இஷ்டத்திற்கு மாத்தி மாத்தி பார்க்கலாம்
(காமெடி பார்த்து ரசிச்சு ஓவரா சிரிச்சோம் னா தனியா சிரிக்கிறானே என்னாச்சு இவனுக்கு என்று அக்கம் பக்கத்திலே நினைக்கலாம் )

இது போல் ஏகப்பட்ட சவுகரியங்கள் இதில் இருந்தாலும் மனைவி குழந்தைகள் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கைக்கு முன் இதெல்லாம் ஈடாகுமா

ஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

  1. மனைவி குழந்தைகள் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கைக்கு முன் இதெல்லாம் ஈடாகுமா// Yes. Its true.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப ஜாலியான பெர்வழிப் போல நீங்க ...

    நல்ல வித்தியாசமான சிந்தனை..

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி

    நான் ஜாலி பேர்வழி இல்லை விசயத்தை ஜாலியாக யோசித்தேன் அதுவே இந்த இடுகை

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்

    பதிலளிநீக்கு
  4. பிரம்மச்சாரி வாழ்கையின் சுகமே தனி சார்..
    இக்கரைக்கு அக்கரை பச்சை மாதிரி எனக்கு தோணுது சார் ...
    அனுபவம் தானே வாழ்க்கை ..
    நல்ல செய்தியை சிரிப்பாகவும் , சிறப்பாகவும் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  5. //இது போல் ஏகப்பட்ட சவுகரியங்கள் இதில் இருந்தாலும் மனைவி குழந்தைகள் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கைக்கு முன் இதெல்லாம் ஈடாகுமா//

    இதுதான் உண்மை.

    அதானே... ஆண்களைத் தூக்குவது போல் பெண்களுக்கே உங்கள் ஆதரவு என்பதை ஆணித்தரமாக சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. r.v.s.,
    என்ன சொல்ல வாரீங்க...அப்படின்னு பார்த்தா கடைசியில் மனைவியிடம் சரண்டர் ஆகி விட்டீர்கள்...தப்பிச்சிட்டிங்க...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்