சனி, மார்ச் 19, 2011

இன்று பிறந்தநாள்


இன்று பிறந்தநாள்
நமது குடந்தையூர் தளத்திற்கு


(ஆம் சென்ற வருடம் மார்ச் மாதம் 20 ஆம் தேதி தான் நான் இந்த தளம் ஆரம்பித்தேன்)


எல்லோரும் குடந்தையூர் தளத்திற்கு வாழ்த்து சொல்லுங்க கேக் எடுத்துக்குங்க
******
பெயர் காரணம்
தோழி பிரியா (என் மனதில் இருந்து ) அவர்கள் பெயர் காரணம் பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றி (ஒரு பதிவு எழுத விஷயம் கிடைச்சிடுச்சு)

சரவணன் என்ற இந்த பெயர் ஒன்றும் கோயிலில் ஆயிரம் பேருக்கு சாப்பாடு எல்லாம் போட்டு வச்ச பெயர் இல்லை. என் வீட்டில் கேட்ட போது கடவுள் முருகன் மேல் கொண்ட பக்தியால் வச்ச பேர் என்று என் தாய் சொன்னார்கள் .

வீடு
வீட்டில் என்னை சரவணா என்று தான் அழைப்பார்கள் செல்ல பேர் எல்லாம் கிடையாது
கல்லூரி
ஆனால் பாருங்க என் கல்லுரி நாட்களில் நான் என் பெயர் ஸ்டைலிஷ் ஆக இருந்தா நல்லா இருக்குமே என்று ரொம்ப பீல் பண்ணேன் சினிமாவுலே போய் பெரிய இயக்குனரா ஆகணும் னு ஆசை அதனாலே புனை பெயராக நான் என் பெயருக்கு முன் பாரதி சேர்த்து பாரதி சரவணன் என்று வைத்து கொண்டேன் . கல்லுரி மாணவர்கள் நடத்திய சிறு பத்திரிகையில் என் கவிதை பாரதி சரவணன் என்ற பெயரிலேயே வெளியானது நாடகம் பத்திரிகைகளுக்கு அந்த பெயரிலேயே அனுப்பினேன்.


ஆனா பாருங்க நான் இந்த மாதிரி சினிமா டிராமா என்று இருந்ததால் வீட்டில் என்னை எல்லோரும் உருப்படாமல் தான் போக போறேன் என்று முடிவே கட்டி விட்டனர். மனசு வெறுத்து பொய் வீட்டின் விருப்பபடி நான் என் சினிமா ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டு வேலையில் சேர்ந்து முன்னுக்கு வந்து எதோ நல்ல பெயர் வாங்கினேன் இப்பொழுது என்னை பார்க்கும் கல்லுரி நண்பர்கள் பாரதி சரவணன் என்று பெயர் சொல்லி அழைக்கும் போது எனக்கு வெறுப்பாகி விடும் நானே மறந்துட்டேன் ஏன்டா அந்த பேரை வச்சி கூப்புடுறீங்க என்பேன் சலித்து கொண்டு

அலுவலகம்
நான் வேலைக்கு வந்த பிறகு என் பெயரை வைத்து நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு உங்க கிட்டே சொல்லியாகனும்
திருப்பூரில் கார்மென்ட் கம்பெனி யில் நான் மேலாளராக வேலைக்கு சேர்ந்த போது கம்பெனி முதலாளியின் தந்தை வயசானவர் தினமும் காலை வாக்கிங் வருவார் அவர் வருகிறார் என்றாலே எல்லோரும் ஓடி ஒளிவார்கள் நான் அவர் முன்னே சென்ற போது அவர் என்னை பார்த்து விசாரித்து விட்டு உன் பெயர் என்ன என்றார். நான் சரவணன் என்றவுடன் சரவணன் என்ற பெயர் உள்ளவங்க எல்லாம் ஒழுங்கானவன்களா இருப்பாங்க நீ அந்த பேரை காப்பாத்து என்று சொல்லி விட்டு போய் விட்டார். எல்லோர் முன்பு இப்படி சொன்னவுடன் எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது . நான் இப்படி சொன்னவர் மெச்ச வேண்டும் என்று முடிவு செய்து உழைத்தேன் மூன்றே மாதங்களில் நல்ல பேர் வாங்கினேன் எப்படி தெரியுமா தினமும் காலை அவர் என் அறைக்கு வந்து என்னை எழுப்பி வாக்கிங் என்னை அழைத்து கொண்டு தன் வீடு முதல் கம்பெனி உள்ளிட்ட எல்லா விசயங்களை பற்றியும் அவர் என்னோடு பகிர்ந்து கொள்வார். அந்த அளவுக்கு நெருக்கமானேன் என் கூட வேலை பார்க்கும் நபருடன் ஏற்பட்ட மனத்தாங்கலில் நான் வேலையை விட முடிவு செய்து அவரிடம் சொன்ன போது அவரும் அவர் மனைவியும் உனக்கு இங்கே என்ன கஷ்டம் ஏன் போறேன் என்கிறாய் என்று என்னை விட மறுத்தனர். நான் ஏற்கனவே சொல்லியாச்சு இனிமே எப்படி இருக்கிறது என்று சொல்லி விட்டு விடை பெற்றேன்.
அதே போல் நான் தற்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னை ஒரு நாளைக்கு இருபது முறையாவது என் எம்.டி. பேர் சொல்லி அழைத்து கொண்டே இருப்பார்.என்னுடன் வேலை பார்க்கும் நண்பன் சொல்வதுண்டு. அந்த பேர் வச்சிருக்கிற உன்னக்கு புண்ணியமோ இல்லையோ அந்த பேரை கூப்பிட்டு எம்.டி. நல்லா புண்ணியம் சம்பாதிக்கிறார். பணமும் நிறைய சம்பாதிக்கிறார்.என்பான். நான் சொல்வேன் என் பேரை வச்சி நல்லது நடந்தா சரி என்பேன்

வலையுலகம் வந்த போது என் பெயருடன் ஏதேனும் சேர்க்க வேண்டும் என்று நினைத்து என்ன சேர்க்கலாம் என்று அவசரத்தில் யோசித்து ஆர்.சரவணன் என்ற என் பெயருடன் என் தாயின் முதலெழுத்து வி சேர்த்து ஆர்.வி.சரவணன் என்று வைத்து கொண்டு கமெண்ட்ஸ் எழுத ஆரம்பித்தேன் பின்பு வலை தளம் தொடங்கி கதை கவிதைகள் என்று தொடர ஆரம்பித்தேன் இதன் மூலம் என் தந்தை பெயருடன் தாயின் பெயரையும் இனிசியல் ஆக சேர்த்து வைத்து கொண்டதில் எனக்கு மன நிறைவு கிடைத்தது. அந்த பெயருடன் நான் இப்பொழுது வலையுலகில் அறியபடுகிறேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

ஆர்.வி.சரவணன்

12 கருத்துகள்:

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்க பெயர் வரலாறு நல்லத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்க‌ள் ச‌ர‌வ‌ண‌ன்... தொட‌ர்ந்து எழுதுங்க‌..

    பதிலளிநீக்கு
  3. தாய்க்கு மரியாதை கொடுக்கும் நீங்களும் உங்கள் ப்ளாகும் வாழ்க பல்லாண்டு!

    பதிலளிநீக்கு
  4. மகிழ்ச்சிங்க சரவணன் @ பாரதி சரவணன் :))

    அலுவல் ரீதியாகவும் மேலும் பல வெற்றிகளைபெறவும் வாழ்த்துக்கள். சுவாரசியமான இடுகை..

    பதிலளிநீக்கு
  5. உங்க ஒரு வயது குழந்தைக்கு வாழ்த்துக்கள் சார் ..

    பதிலளிநீக்கு
  6. பெயர்க்காரணம் பற்றி

    எழுதிய விதம் சிறப்பு ...

    ரொம்ப ரசித்தேன் சார் ...

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாமார்ச் 23, 2011 3:04 AM

    பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. தொடர்ந்து எழுதிட‌ வாழ்த்துக்கள்!!!
    அழைப்பினை ஏற்று எழுதியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கருண்
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாலா
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நாடோடி
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மிடில் கிளாஸ் மாதவி

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி குமார்
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாலாசி

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சங்கவி
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நையாண்டி மேளம்
    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பிரியா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்