கும்பகோணம் அருகே பத்து கிலோமீட்டரில் மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது வலங்கைமான் என்ற ஊர் .
இந்த ஊரில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
மிகுந்த புகழ் வாய்ந்த ஸ்தலம் இது. பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று பாடை காவடி திருவிழா இங்கு புகழ் வாய்ந்த ஒன்றாகும்.
இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் உடல் நலம் சரியில்லாதவர்கள்அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் பாடை காவடி எடுத்து ஈமக்ரியை செய்வது போல் உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். மிக பிரசித்தி பெற்ற இத் திருவிழாவை காணும் வாய்ப்பு எங்கள் குடும்பதிற்கு கிடைத்தது.
திருவிழாவில் முதல் நாள் மாலையிலிருந்து மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்திருந்தனர் இரவு முழுக்க சாலையோரம் முழுதும் இரு புறமும் கடை வீதிகள் அமைத்து எங்கும் மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது .ஞாயிறு அன்று அவ்வளவு வெயிலிலும் மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது பக்தி பரவசமாய் இருந்தது.
பாடை காவடி எடுத்து வரும் பக்தர்கள்
வலங்கைமான் மகா மாரியம்மனின் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்
ஆர்.வி.சரவணன்
r.v.saravanan ,
பதிலளிநீக்குரொம்ப நன்றி(வலங்கைமான் மகா மாரியம்மனின் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்)தங்களின் அன்பான வேண்டுதலுக்கு!
nice photos and good post.
பதிலளிநீக்குபுது தகவலுடன் படங்களும் அருமை.. நன்றிங்க :)
பதிலளிநீக்குபடங்களுடன் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி... நல்ல பகிர்வு!
பதிலளிநீக்குசில அறிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க சார் ... படித்து முடித்ததும் வியந்து போனேன் ...
பதிலளிநீக்குஅது போல் படங்களும் தூள் ....
ரொம்ப நல்ல பதிவு ...