காதலர் தினம்
காதலர் தினத்திற்காக ஒரு அசத்தலான கவிதை ஒன்றை எழுதி மனைவிக்கு கொடுக்கலாமே என்று யோசனை வர பேப்பர் பேனா எடுத்துக் கொண்டு அமரும் வேளையில்
என் பெண் அப்பா என் ஸ்கூல் டிரஸ் அயர்ன் பண்ணி கொடுங்கப்பா
என்று கையை பிடித்து இழுக்க நான் பெண்ணை சமாதானம் செய்து விட்டு அமர்ந்து எப்படி கவிதையை தொடங்கலாம் என்று யோசிக்கையில்
என் பையன் வந்து அப்பா மச...மச... னு உட்காரதிங்க என்று சொல்ல நான் முறைத்தேன். அவன், அம்மா இப்படி தான் உங்களை சொல்ல போறாங்க என்றான்.
என் நேரம்டா என்று சொல்லி விட்டு நான் எழுத ஆரம்பித்தேன்
என்னவளே என்னுள் உள்ளவளே உன் செவ்இதழ் மலர்ந்து ஒரு இனிமையான சொல் சொல்வாயா.............. என்று எழுதும் போது
என் மனைவி வந்து என்ன கிறுக்கறீங்க என்று சொன்னாள். உனக்கு காதலர் தினத்தில் கொடுப்பதற்கு என் அன்பை சொல்ல கவிதை எழுதி கொண்டிருகின்றேன் என்று சொன்னேன் சமயலறையில் பத்து பாத்திரங்கள் கிடக்கு அதை கொஞ்சம் கிளீன் பண்ணி கொடுங்க அது தான் நீங்க எனக்கு கொடுக்கிற அன்பு கவிதை மண்ணாங்கட்டி எல்லாம் வேண்டாம் என்று சொல்ல
நான் கழுதைக்கு தெரியுமா கவிதை வாசனை சீ கற்பூர வாசனை என்று முணுமுணுத்தேன் என்னையா கழுதைன்னு சொல்றீங்க என்று அவள் எகிற
நான் வாய் தவறி வந்துட்டுது என்று சமாதானம் பேச அவள் எப்படி சொல்லலாம் என்று கோபப்பட நானும் டென்ஷன் ஆகி கோபப்பட
இருவரும் சர்ச்சையில் இறங்க அந்த நேரம் மின் விசிறியை
எங்கள் பையன்,பெண் ஆன் செய்ய நான் கவிதை எழுதிய பேப்பர் பறந்து சென்று விழுந்த இடம் குப்பை தொட்டி
பின் குறிப்பு
இது என் அனுபவமல்ல இயந்திர வாழ்க்கையில் அன்பு என்ற அவசியம் அனாவசியமாகி விட்டது என்பதை யோசித்ததின் விளைவு இந்த சிறுகதை
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்
ஆர்.வி.சரவணன்
அட,இது சிறு கதையா. சும்மா விளையாடாதீங்க..நம்ம கதை தானே.
பதிலளிநீக்குசூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க சார்! ..
பதிலளிநீக்குஓட்டும் போட்டோமில்ல...
பதிலளிநீக்குசிறுகதை நல்லாருக்கு நண்பரே,
பதிலளிநீக்குஇனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் :))
நல்லாதான் யோசிக்கறிங்க சரவணன்.
பதிலளிநீக்குஹா ஹா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாநேசன்
பதிலளிநீக்குஓட்டு போட்டதற்கும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருண்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாணவன்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி
பதிலளிநீக்குசிறுகதை நல்லாருக்கு.
பதிலளிநீக்குஉண்மைதான், காதலற்ற இயந்திர வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது!சிறுகதை நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஉண்மைதாங்க நண்பரே ...
பதிலளிநீக்குநிச்சயம் இந்த எந்திர வாழ்க்கையில் காதலும் இப்படிதான்
.. நல்ல பகிர்வுக்கு நன்றி