பருவச் சோலையில் பூக்கள் ஏராளம் மலரினும் மெல்லிய பெண்ணே உன் அழகு தாராளம்
தென்றலின் தொடுகையில் குயில்கள் இசை பாடுகையில் பிரம்மன் எனும் கதிரவன் கரம் படுகையில்
மலர்ந்தவளே
உன்னை சூறையாட தேன் அருந்த ஆடவர் கூட்டம் ஒன்று வண்டுகளாய் உனை முற்றுகையிட்டது
சுற்றி சுற்றி வந்து நாள் பார்த்தது
அதிலே நானும் ஒருவன்
உனை அடைய எண்ணமில்லை காக்க எண்ணமுண்டு
உன் அருகில் ஆயுதமாய் இருந்திட்ட முள் பட்டு எனை வருத்திட்டேன்
என் உயிரை மாய்த்தேன் தீயவர் தம் ஆசையை தகர்த்தேன்
ஆடவர் என் நிலை கண்டனர் உனை விட்டு அகன்றனர்
நீ நினைத்திருப்பாய்
உனை அடைய வந்தவன் நான் என்று
நீ நினைப்பாயா
உனை காக்க என் உயிர் போக்கியதை அறிவாயா
r.v.saravanan
அற்புதம்!!!! நண்பரே,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பின்னூட்டப்புயலே, நிறைய
பின்னூட்டம் எனக்கு போட்டு இருக்கிறீர்கள்,
மிக்க மகிழ்ச்சி, இதோ போய் அனைத்துக்கும்
பதில் எழுதுகிறேன், நன்றி.
thanks diski
பதிலளிநீக்குthanks to view my blog
mm ,kalakkreenga
பதிலளிநீக்கு