திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழா
தண்ணீரை அண்ட விடாத பால் சூடா எடுத்துண்டு, அதுல முதல் முதலா இறக்கின டிகாக்ஷனை வள்ளல் கணக்காவும் வாரி வழங்காம கஞ்சத்தனமாவும் குறைச்சிடாம சரியான விகிதத்துல கலந்துகிட்டு, காபியின் கசப்பை மீறி செயல்பட முடியாத வண்ணம் சர்க்கரையோட கூட்டணி அமைச்சு, கொஞ்சமே கொஞ்சம் ஆத்தி அதில உதயமாகிற நுரை கீரீடத்தை காபிக்கு அணிவிச்சு, ஒரு மழை நாளில் துணையோடு சேர்ந்தமர்ந்து கொஞ்சலான வார்த்தைகளின் இடையிடையே அந்த காபியை பருகும் போது ஒரு உற்சாகம் வரும் பாருங்க. அதை அசோகன் வாய்ஸ்ல இப்படி தான் சொல்ல தோணும்.
"ஆஹா. இந்த காபிக்கு நான் அடிமை"
எதுக்கு இதை இப்ப சொல்றேன்?. கேள்வி வருதுல்ல. அதற்கான பதில். திருமண ஒத்திகை நாவலில் நாயகன் நாயகிக்கு இடையில் காபி ஒரு காதல் தூதுவன்.
ஆகவே காபியின் ரசனை வர்ணனை இங்கு .
சரி விசயத்துக்கு வருகிறேன். திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. இந்த இனிய நிகழ்வில் உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் விழாவிற்கு மேலும் இனிமை சேர்க்கட்டும்.
ஆர்.வி.சரவணன்
விழா சிறக்க மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமகிழ்ந்தேன்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
மனம் நிறைந்த வாழ்த்தகள்.
பதிலளிநீக்குவிழா சிறப்பாக நிகழ்ந்ததில் மகிழ்ச்சி அண்ணா..
பதிலளிநீக்கு