சனி, டிசம்பர் 10, 2016

யதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை






யதார்த்தம்
(ஒரு பக்கக் கதை)

"படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம்" என்ற தலைப்பு செய்தியை  கலா படிக்கவும், கட்டிலில் படுத்திருந்த அவள் கணவன் அசோக் செய்தியை அறிந்து கொள்ளும் ஆவலுடன்  அவள் முகத்தைதிரும்பி  பார்த்தான். மேலே படி  என்பது போல்.


"தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான இளம் புயல் சதீஷ் நடித்து கொண்டிருந்த புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடந்து கொண்டிருந்தது. காட்சிப் படி ஹீரோ மாடியிலிருந்து கீழே இருக்கும் ஸ்டன்ட் நடிகர் மீது குதிக்க வேண்டும். அப்படி குதித்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரால் எழுந்திருக்க முடியாமல் போகவே பட யூனிட் அவரை அவசரமாக அருகிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்டாக்டரகள் குழு  அவரை குணப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது


அவர் விரைவில் குணமாக வேண்டி முன்னணி நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.அவரது ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகர்  உடல் நலம் பெற வேண்டி கோவில்களில் பிரார்த்தனைகளும் அன்னதானமும் செய்து வருகிறார்கள். சதீஷ் விழுந்த இடம் கீழே உள்ள படத்தில் அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது."


செய்தியை படித்து முடித்த கலா பேப்பரை அருகிலிருந்த டீப்பாயின் மேல் சலிப்புடன் போட்ட படி,  "உங்களை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதலை பாருங்க  " என்றாள் கலங்கிய கண்களுடன்.

ஹீரோ சதீஷ் தன் மீது விழுந்ததால், இடுப்பு எலும்பு முறிந்து போய்  ரத்த காயங்களுடன் மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் அரசாங்க மருத்துவமனைகட்டிலில் படுத்திருந்தான் ஸ்டண்ட் கலைஞன் அசோக்.


ஆர்.வி.சரவணன் 

குமுதம் (03-08-2016) வார  இதழில் வெளியான எனது ஒரு பக்க சிறுகதை யதார்த்தம். 
குமுதம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.



8 கருத்துகள்:

  1. செடியின் அடி வேர் வெளியில் தெரிவதில்லை...
    பழங்களுக்கே மதிப்பு...

    (முன்பே குடந்தையூரில் வெளியிட்டீர்களே?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுயநலம் சிறுகதையை தான் இதற்கு முன்பு வெளியிட்டிருந்தேன்.யதார்த்தம் கதையை இப்போது தான் வெளியிடுகிறேன்.

      நீக்கு
  2. நல்ல கதை. ஸ்டண்ட் நடிகர்களின் உழைப்பும் வலியும் எங்கும் பதிவாவதில்லை என்பது தான் சோகம்.

    நல்ல கதை. குமுதத்தில் வெளியானதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. கதை மிக மிக யதார்த்தம்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான கதை சார்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அருமை குடந்தை சார். எக்ஸ்ட்ரா நடிகர்களின் உழைப்பும், வேதனைகளும் எங்குமே பதியப்படுவதில்லை, கவனத்தில் வருவதுமில்லை, பாராட்டப்படுவதுமில்லை.

    வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  6. இதை முகநூலில் பகிர்ந்தீர்களோ... முன்பு வாசித்திருக்கிறேன் அண்ணா... அருமை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்