சனி, பிப்ரவரி 01, 2014

ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில்





ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில் 


(சிவன் காமனை எரித்து உயிர்ப்பித்த ஸ்தலம்)  

எனது ஊரான கும்பகோணம் கோவில் நகரம் என்று பெயர் பெற்றது.  ஊரை சுற்றி பிரசித்தி பெற்ற கோவில்கள் தான் எவ்வளவு இருக்கின்றன. அதில் சிறப்பு பெற்ற சிவன் கோவில் பற்றிய பதிவு இது 

எங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் இந்த புண்ணிய ஸ்தலத்துக்கு சென்று விட்டு வந்து கோவிலை பற்றியும் அதன் சிறப்பையும் எங்களிடம் தெரிவித்தார்கள். கோவில் செல்லும் ஆர்வம் எழுந்தது.  சென்ற  ஞாயிறு  அன்று கிளம்பினோம் 


கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மெயின் ரோட்டில் குத்தாலம் 
என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து உள்ளே திருமணஞ்சேரி செல்லும் பாதையில் சென்றால் 
காளி என்ற  ஊருக்கு அடுத்து வருகிறது இந்த திருகுறுக்கை  ஊர். (மயிலாடுதுறையிலிருந்து நீடூர் வழியாகவும் செல்லலாம் ) 

கோவிலுக்கு அருகில் கடைகள் ஏதும் இல்லை என்று சொன்னதால் குத்தாலத்தில் அர்ச்சனை பொருட்கள் மாலைகள் வாங்கி கொண்டு கிளம்பினோம். செல்லும் பாதை மிககுறுகலாய் கொஞ்சம் மேடு பள்ளத்துடன் தான் இருக்கிறது அதற்காக தயங்க தேவையில்லை. இரு பக்கமும்
இயற்கை வாரி இறைத்திருக்கும் அழகுக்கு முன் அது ஒன்றும் பெரிய விசயமில்லை. பரபரப்பான இந்த உலகத்தில் அந்த பரபரப்பை உள்ளே அனுமதிக்காதது போல் இருக்கும்  இந்த ஊரில் தான்  இறைவன் அருள் பாலிக்கிறார் 



இறைவனின் திருத்தலம் பார்க்கையில் அதன் எழில் நம்மை பரவசம் கொள்ள வைக்கிறது. கோவிலுக்கு எதிரே  பெரிய குளம் படிக்கட்டுகளுடன் இருக்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால் அதன் அமைதியே நமக்கு ஒரு அழகை தருகிறது என்றால் அது மிகையல்ல. கோவில் அர்ச்சகரிடம்  கேட்டு கோவில் பற்றிய சிறப்புகளை தெரிந்து கொண்டோம் 

யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் 
தவத்தை கலைக்கும் பொருட்டு தேவர்கள் யோசனையின் படி மன்மதன் சிவன் தவம் இருக்கும் இடத்திற்கு ஒரு பர்லாங் தூரத்தில் இருந்து கொண்டு, கரும்பால் வில் செய்து அதில் மலர்கணை  எய்கிறார். சிவன் நிஷ்டை கலைந்ததால் தன் நெற்றி கண்ணை திறந்து பார்க்க,  மன்மதன் எரிந்து  சாம்பலாகிறான். மன்மதன் மனைவி 
ரதி வந்து சிவனிடம் வேண்டி பிரார்த்திக்க மன்மதனை உயிப்பித்து தனது அருள் புரிகிறார் சிவபெருமான்.  இனி உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான் மற்றவர் கண்களுக்கு தெரிய மாட்டான் என்றும் உரைக்கிறார். இதுவே இந்த தளத்தின் வரலாறு.



உள் பிரகாரத்தில் விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது இவர் குறுங்கை விநாயகர் என்று அழைக்கபடுகிறார்.




இங்குள்ள தீர்த்ததிற்கு சூழ தீர்த்தம் என்று பெயர்  



இறைவன் யோகிஸ்வரர் என்ற பெயருடன் மேற்கு நோக்கிய சன்னதியில்
வீற்றிருக்கிறார்.  ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் ஞானாம்பிகா என்ற பெயருடன் தெற்கு நோக்கிய  சன்னதி யில் நின்ற 
கோலம் கொண்டிருக்கிறார் கோவிலை சுற்றி உள் பிரகாரம் மட்டுமில்லாமல் சுற்றி வர வெளி பிரகாரமும் இருக்கிறது


                   கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் 
              அழகுறசெதுக்கப்பட்டுள்ளன 


இது சிவபெருமானின் அஷ்ட வீரட்டான தலங்களில்ஒன்று 


இத் தலத்திற்காக திருநாவுக்கரசர் இரு பதிகங்கள் இயற்றியுள்ளார் 



இறைவனை தரிசித்து கொண்டிருக்கும் போது வேகமாக பேச கூட கொஞ்சம் தயக்கமாக இருந்தது காரணம் அந்த அமைதி இறைவன் நிஷ்டையில் இருப்பதாய் நமக்கு செய்தி சொல்வது போன்று இருந்தது.  அந்த கோவிலின் (ஊரின்) அழகை பார்க்கும் போது இந்த ஊரில் வாடகைக்கு வீடு கிடைத்தால் சில நாட்கள் தங்கி தினமும் இறைவனையும் தரிசித்து கூடவே இந்த அமைதியையும் ரசிக்கலாமே என்று சொன்னேன். 





மூலவர் லிங்க வடிவில் காட்சி தரும் வீரட்டேஸ்வரர் தியான பலம், மனோபலம் இவற்றுடன் செய்த தவறை மன்னித்தும் அருள்
புரிகிறார். இழந்ததை மீட்டு கொடுக்கும் யோக மூர்த்தி மன்மதனை 
ரதிக்கு மீட்டு தந்திருகின்றன் உண்மை பக்தியுடன் அவர் சன்னதியில் 
சென்று உளமார வழிபட்டால் அவன் அருள் கிடைக்கும் நல்லதே நடக்கும் 



மன்மதன் எரிக்கபட்ட்ட இடம் இரு தெருக்கள் தள்ளி இருக்கிறது. விபூதி குட்டை செல்லும் வழி என்ற அறிவிப்பு பலகை இருக்கிறது அங்கே சென்றோம் ஒரு தோட்டம் போல் இருந்த இடத்தில் சதுர வடிவில் பெரிய தொட்டி போல் இருந்தது சிறுவர்கள் அழைத்துசென்றார்கள்.
அந்த தொட்டியில் மணல் திருநீறு போன்ற வெண்மையில் இருக்கிறது . (சுற்றியுள்ள இடங்களில் செம்மண் போல் இருந்தாலும்)







கோவிலை விட்டு கிளம்பி வருகையில் இறைவனை நேரில் கண்டது 
போன்ற திருப்தி ஏற்பட்டது எங்களுக்கு.  அது மனபிரம்மையாக இருக்கலாம் என்று சொல்லும் போது கூடவே ஏன் இறைவன் ஆசி யால் ஏற்பட்ட திருப்தியாக கூட இருக்கலாமே  என்றும் சொல்ல தோன்றுகிறது   


FINAL PUNCH 

பழைய பக்தி பாடல் ஒன்று உண்டு "எழுதி எழுதி பழகி வந்தேன் எழுத்து கூட்டி பாடி வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்"  

எனக்கு எழுத்தறிவித்த இறைவன் தன் புண்ணிய பூமிக்கு வர வைத்திருக்கிறார். எழுத வைத்திருக்கிறார். (குருவாய் என்னுள் அமர்ந்து)

ஓம் நமச்சிவாய 

ஆர்.வி.சரவணன்    

6 கருத்துகள்:

  1. அருமையான விளக்கமான, நல்ல படங்களுடன் ஒரு பதிவு!

    //அந்த கோவிலின் (ஊரின்) அழகை பார்க்கும் போது இந்த ஊரில் வாடகைக்கு வீடு கிடைத்தால் சில நாட்கள் தங்கி தினமும் இறைவனையும் தரிசித்து கூடவே இந்த அமைதியையும் ரசிக்கலாமே //

    உங்கள் பதிவைப் படித்த போது அந்த எண்ணம் தோன்றியது!

    குருவாய் உருவாய் வந்து அவர் தான் நம் எல்லோருள்ளும் இருந்து எழுத வைக்கின்றார்! உண்மையே!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு... அருமையான படங்கள் மூலம் நாங்களும் கலந்து கொண்ட உணர்வு... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. Visit : http://thillaiakathuchronicles.blogspot.com/2014/02/Kudandhai-RVSaravanan-Novel-IlamaiEzhuthumKavaithaiNee.html

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில் பதிவைப் பற்றிய தகவல்கள் அங்கு செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். நல்ல வெய்யிலில் படம் எடுத்து இருக்கிறீர்கள் போலிருக்கிறது. பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. இறைவன் ஆசி யால் ஏற்பட்ட திருப்தியாக கூட இருக்கலாமே
    >>
    இறைவனின் ஆசியேதான்! அவன் ஆசியின்றி நீங்கள் அவ்வூருக்கு சென்றிருக்க முடியாது. அப்படியேச் சென்றாலும் இறைவனை தரிசித்திருக்க முடியாது. அனைத்தும் அவன் ஆசியோடுதான் நடக்கிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்