குடந்தையில் மாசி மக விழா
பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வருவது மகாமகம்.ஒவ்வொரு வருடமும் வருவது மாசிமகம். முதலில் மகாமகம் பற்றிய வரலாறை பார்ப்போம்
ஊழி பெரு வெள்ளத்தால் அழிய இருந்த உலகம் அழியும் நிலை வந்த போது பிரம்மன் சிவனிடம் கேட்க அவர் பல புண்ணிய ஸ்தலங்களில் இருக்கும் மணலை அமுதத்தோடு சேர்த்து கும்பம் செய்து அதில் அமுதத்தை நிரப்பி பூஜை செய்யும் படி ஆணையிட்டார் .வெள்ளம் வந்து கும்பத்தை அடித்து சென்று ஓரிடத்தில் சேர்த்தது. அங்கு வந்த சிவபெருமான் கும்பத்தில்
பானம் எய்தார்.கும்பம் உடைந்து அதிலிருந்த அமுதம் பூமியில் பரவியது அந்த இடமே மகாமக குளம். கும்பம் வந்து சேர்ந்த இடமாதலால் குடமூக்கு என்று பெயராயிற்று. குடம் என்றால் கும்பம் மூக்கு என்றால் கோணம் அதுவே பின் கும்பகோணம் என்ற ஊர் பெயராயிற்று.
குருபகவான் சிம்மராசியில் இருக்கும் போது மாசி மாதத்து பௌர்ணமியும்
மக நட்சத்திரமும் கூடும் நாள் மகாமக திருநாள். இந்த நாளில் நவ கன்னியரான நதிகள் தங்கள் பாவங்களை போக்கும் விதம் எப்படி என்று சிவபெருமானிடம் கேட்க அவர் மகாமக நாளில் வந்து மகாமக குளத்தில் வந்து நீராடுங்கள் நான் பார்வதியுடன் காட்சி தந்து தங்களின் பாவங்களை பெற்று கொள்கிறேன் என்று உரைக்க அது போல் அவர்கள் வந்து நீராடுவதாக ஐதீகம். மனிதர்களான நாமும் சென்று நீராடினால் நம் பாவங்கள் விலகும் என்று சொல்கிறது தல வரலாறு
ஒவ்வொரு மாசி மகம் வரும் போதும் நான் சென்னையில் தான் இருப்பேன் அன்றைய நாள் என் மனம் இங்கேயே தான் இருக்கும். இன்று கும்பகோணத்தில் இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.கும்பகோணத்தில் உள்ள ஆலயங்களிலிருந்து உற்சவர்கள் திரு வீதி உலா வந்து மகமாக குளத்தில் தீர்த்தம் தரும் நேரத்தில் நான் சென்றிருந்தேன். நான் எடுத்த படங்கள் இங்கு
உற்சவர் தீர்த்தம் கொடுக்க மகாமக குளத்துக்கு வருகை
சோமேஸ்வரர் கோவில் உற்சவர்
மகாமக குளம் அருகிலுள்ள அபிமுகேஷ்வர் ஆலயம்
நாகேஸ்வரன் கோவில் உற்சவர்
மகாமக குளம்
ஆர்.வி.சரவணன்
FINAL PUNCH
பாவம் செய்தவர்களை காசிக்கு சென்று கங்கையில் நீராடு என்று சொல்வார்கள். ஆனால் காசியில் பாவம் செய்தவர் கும்பகோணத்தில்
மகாமக குளத்தில் நீராடினால் பாவம் தொலையும் என்கிறது தல வரலாறு
ஓம் நமசிவாய
படங்கள் அனைத்தும் மிகவும் அருமை... மகாமகம் வரலாறு தகவலுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅழகான விவரணம்! படங்கள் அனைத்துமே அழகாக உள்ளது! வரளாறு தகவலுக்கு மிக்க நன்றி! நண்பரே!
பதிலளிநீக்குசென்ற வருடம் இந்த குளத்தில் நீராடினேன் ஓர் அதிகாலை வேளையில்! ஆதிகும்பேஸ்வரர் தரிசனமும் கிடைத்தது! பார்ப்போம்! இந்தவருடம் இறைவன் எண்ணம் எப்படியோ? பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குபடங்களும் வரலாறும் அருமை நண்பரே
பதிலளிநீக்குநன்றி