ஞாயிறு, அக்டோபர் 27, 2013

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை





சூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை 


டிவியில் ஒரு நாள் இரவு கழுகு படம் ( எந்த விளம்பரமுமின்றி ). இந்த படம் இது வரை பார்த்ததில்லை. பார்க்காம இருந்த படங்களை டைம் கிடைக்கும் போது பார்ப்பதுண்டு.அதனால் படம் பார்க்க அமர்ந்து விட்டேன். பார்த்தவுடன் எழுதிடணும் னு தோணுச்சு எழுதிட்டேன். ஆனால் பாருங்க பழைய படத்தை பத்தி இப்ப பதிவு தேவையா என்று எழுதியதை அப்படியே ஓரமா வச்சிட்டேன். இப்ப எடுத்து பார்க்கிறப்ப நல்லாருக்கிற மாதிரி தோணுச்சு உங்களுக்கு எப்படி தோணுது சொல்லுங்களேன் 

 நரபலி கொடுக்கும் சாமியார் ஒருவரை அவரது கும்பலை சூப்பர் ஸ்டார் ரஜினி பொறி வைத்து  பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார்  என்பதே கதை. தலைவர் ரஜினி இதில் ஜாலி, காதல் ,ஹீரோயிசம், என்று அனைத்திலும் பின்னி எடுக்கிறார் என்பதை சொல்வது சூரியனுக்கு டார்ச் லைட் அடிக்கிற மாதிரி தான் (இத எங்கியோ படிச்சேன்) 

ரஜினிக்கு ஜோடி ரதி. இருவரின் ஆரம்பகட்ட காதல் மோதல் காட்சிகள் நல்ல கலகலப்பு.வி.கே.ராமசாமியிடம்  ரஜினி  முதல் நாள் ஒரு லவ் லெட்டர் கொடுத்து அவரது
பெண்ணிடம் கொடுக்க சொல்வதும் , மறுநாள் வேறொரு பெண்ணுக்கு அது என்று திரும்ப வாங்கி கொள்வதும் கலாட்டா.




இந்த படத்தில் கவனிக்க வேண்டிய ஒரு டயலாக் என்ன தெரியுமா 
போனில் ராமசாமி" உன் பேர் என்ன" என்று கேட்கும் போது ரஜினி  "கமல்ஹாசன்" என்று சொல்ல பக்கத்தில் இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் "என்ன அவர் பேர் சொல்றே" என்று சீரியசாக  "கமல் என் பிரெண்ட் தான் நான் சொல்லிக்கிறேன் விடு" என்று ரஜினி கூலாக  சொல்ல, "இவர் பெரிய ரஜினிகாந்த்" என்று ஒய்.ஜி.மகேந்திரன் பதில் கொடுப்பார் 

மூட நம்பிக்கை யுடன்  சாமியார் தான் தெய்வம் என்று  இருக்கும் தேங்காய் சீனிவாசன் ரஜினிக்கு அண்ணனாக வருகிறார். வனிதா சுட்டி பெண்ணாய் வந்து ரஜினி ரதிக்கு உதவி செய்கிறார். அவர் நரபலி கொடுக்கப்பட்ட மறுநாள் போலிஸ் வந்து விசாரிக்கும் போது அப்படி ஒரு பெண்ணே ஊரில் கிடையாது எனும் போது கதையில் திகில் ஆரம்பிக்கிறது 

சங்கிலி முருகன் தான் சாமியார். நரபலி கொடுக்கும் காட்சியில் முகமூடி அணிந்து 
வரும் அவர் கண்கள் கொஞ்சம் திகிலை கிள்ளப்புகிறது. வனிதா நரபலி
கொடுக்கப்படும்காட்சி திடுக்கிட வைத்தாலும் அப்போது  சங்கிலி முருகன் மேல் நமக்கு வரும் பயத்தை கடைசி வரை இன்னும் அதிகபடுத்தி தக்க வைத்திருக்கலாம் 

சங்கிலி முருகனுக்கு உதவியாளராக சுருளிராஜன் வருவது சீரியஸ் குறைக்க உதவும் ரிலாக்ஸ் என்றாலும்,  டெரர் சங்கிலி முருகனுக்கு ஏற்றவாறு வில்லத்தனம் கொண்ட இன்னொரு கேரக்டரையும்  போட்டிருக்கலாம்.  ஏனெனில் சாமியார் அநியாயங்களை கண்டுபிடித்து எழுத வந்திருக்கும் பத்திரிகையாளர் சோ வை அவர்  மிரட்டி பணிய வைப்பது காமெடிக்கு ஓகே ஆனால் த்ரில்லர் கதையின் டெம்போ வை கொஞ்சம் குறைய வைக்கிறது. ரதியையும்  குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விட்டு வந்து ரஜினி வில்லனை தேடுவது போலில்லாமல் ரதியும், ரஜினியின் அண்ணன் மகளும்  சங்கிலி முருகனிடம் சிக்கி கொண்டு விட அவர்கள் இருக்கிறார்களா பலியாகி விட்டார்களா என்று தெரியாமல் ரஜினி ஆக்ரோசமாய்  தேடுவது போல் அமைத்திருந்தால் இன்னும் நகம் கடிக்கும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் 

நரபலியை பார்த்ததினால் ரஜினி அன் கோவை அவர்கள் துரத்த அவர்கள் பஸ்சுடன்  தப்பிக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. படத்தின் கடைசியில் பஸ்ஸை அவர்கள் தீப்பந்தத்துடன் துரத்த ரஜினி அவர்களுக்குள் பஸ் சை செலுத்தி மீண்டு வரும் காட்சி நன்றாக இருக்கிறது.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒரு பூவனத்திலே,பொன்னோவியம்,
 தேன் என்றாலும் தேனில் ஊறிய பலா போன்றது காதல் என்னும் கோயில் பாடல். ஒரு அருமையான  காதல் மேலோடி என்றே சொல்லலாம்  இந்த பாடல் ஏற்கனவே நான் கேட்டிருந்தாலும் இந்த படத்தோடு பார்க்கையில் எனக்கு இப்போது இந்த பாடல் favourite   
சாங் ஆகி விட்டது அடிக்கடி ஹம்மிங் செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த படத்தில் வரும் பஸ் வடிவமைப்பு ரொம்ப நன்றாக இருக்கிறது உள்ளேயே பாத்ரூம் கிச்சன் படுக்கை  அறை  பைக்  வைக்க  இடம்  என்று சூப்பர்  ஆக  இருக்கிறது இது  இப்போது
அதிசயமல்ல  தான் ஆனால்  1981 ஆம் வருடம் அது புதுமை தானே. எது எப்படி இருப்பினும் தலைவர் ரஜினி படமாதலால் அவரது ஆடல் பாடல் ஸ்டைல் மற்றும் சண்டைகளுடன் 
நம்மை ஈர்த்து விடுகிறது 


FINAL PUNCH 

மூட நம்பிக்கையை  தகர்க்கும்  வண்ணம்  ஒரு படம்  அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட தேவை தான் என்பதை இந்த படம் உணர்த்தினாலும்  இது அந்த காலத்திலேயே வந்திருப்பது தான் மிகுந்த ஆச்சரியமான ஒன்று .


ஆர்.வி.சரவணன் 

11 கருத்துகள்:

  1. அருமையான படம். பஸ் சண்டை அருமையாக இருக்கும். இது போல நல்ல படங்களை பற்றி அதிகம் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் அது பிடித்த படம் தான்... உங்கள் விமர்சனம் அருமை...நன்றி....

    பதிலளிநீக்கு
  3. மறுபடியும் படம் பார்த்த திருப்தி உங்களின் விமர்சனம்...

    பதிலளிநீக்கு
  4. கழுகு.. இந்தப் படத்தை இன்னும் நான் பார்த்ததில்லை!.. உங்களுடைய விமரிசனம் ஆவலைத் தூண்டியது. நன்றி!..

    பதிலளிநீக்கு
  5. இந்தப் படத்தில் வரும் பேருந்து அந்தக் காலத்திலே பெரிதாக பேசப்பட்டது என்று அம்மா அடிகடி சொல்வார், மேலும் இந்தப் படத்தின் படபிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்ற பொழுது என் அம்மா சித்தி மாமா எல்லாரும் சென்று ரஜினியை சந்தித்ததாக கூறுவார்.. அந்த அளவில் இந்த படம் எனக்கும் கொஞ்சம் ஸ்பெஷல் படம் தான்

    பதிலளிநீக்கு
  6. ஆமாங்க சரவணன்....உங்கள் விமர்சனம் ஏற்கனவே பார்த்த படம் தான் என்றாலும் எனக்குத் திரும்பவும் படம் பார்க்கத் தோன்றியது....நம்ம தலைவ்ர் ஆச்சே!!!..."சூப்ப்ர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்".

    பதிலளிநீக்கு
  7. எப்போதோ பார்த்த படம்! இந்த முறை கே டி வியில் போடும் போது பார்த்து விடுகிறேன்! அருமையான அலசல்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. நல்ல படத்தைப் பற்றி விரிவான பார்வை அண்ணா...

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பதிவு ரஜினி நடித்த கழுகு படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது. வாய்ப்பு அமையும்போது பார்க்கிறேன். நன்றி!
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


    பதிலளிநீக்கு
  10. தீப ஒளி
    வாழ்த்துக்கள்,
    உங்களுக்கும்
    இல்லத்தில்
    அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்