புத்தக கண் காட்சியில்....
புத்தக கண் காட்சி சென்று வந்த அனுபவத்தை நான் சில குறிப்புகளாக கொடுத்து விடுகிறேன் படிக்க உங்களுக்கு சுலபமாக இருக்கும்
* புத்தக காட்சி ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு பின் நேற்று தான் நான் சென்றேன் போக்குவரத்தில் சிக்கி மீண்டு நானும் எனது அலுவலக நண்பரும் உள்ளே நுழைந்த போது நேரம் இரவு எழு மணி ஒன்பது மணிக்கு கிளம்பி விடலாம் என்று உறுதிமொழி யுடன் அவர் ஒரு பக்கம் செல்ல நான் ஒரு பக்கம் நுழைந்து விட்டேன் (வெளியுலகத்தை மறந்தும் விட்டேன் )
* டிஸ்கவரி புக் ஸ்டாலில் பதிவர் கேபிள் சங்கர் அவர்களை சந்தித்து பேசினேன்.தொடர்ந்து அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்து கொண்டிருப்பதை குறிப்பிட்டேன். ( புன்னகையுடன் சிநேகமாய் அனைவருடனும் அவர் பழகுவது அவரிடம் எனக்கு பிடித்த ஒன்று )
*மீனாட்சி புத்தக நிலையத்தில் சுஜாதா புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றேன் பிரியா நாவலும் அவரது கட்டுரை தொகுப்புகளும் மட்டுமே இருந்தது (இதற்கு தான் முன்னாடியே வரணும் கிறது )
*ஞாயிறு இன்றும் வரும் எண்ணம் இருந்ததால்அங்குமிங்கும் அலைந்து எந்தெந்த ஸ்டால் எங்கு இருக்கிறது என்று பார்த்து வைத்து கொண்டேன். ஒரு முன்னோட்டம் (முன்பெ நோட்டம்)
* சில புத்தகங்கள் மட்டும் வாங்கிய நிலையில், ஒன்பது மணியாகி விடவே நண்பர் கிளம்பலாம் என்று சொன்னதால் கிளம்பி விட்டேன் (பாதி சாப்பாட்டில் எழுந்த மன நிலையுடன் )
* வீட்டில் எல்லாருமே புத்தக பிரியர்கள் என்பதால் நான் இன்றும் செல்ல போவதை சொன்ன போது அந்த புக் வாங்கு இது வாங்கு என்று டிப்ஸ் கொடுத்து கொண்டிருந்தனர் (வாங்கலேன்னா என்னை வாங்கு வாங்கு னு வாங்கிடுவாங்க)
* மீண்டும் இன்று காலை படையெடுத்தேன் புத்தக கண் காட்சிக்கு
பதிவர் நண்பர் பால கணேஷ் அவர்களிடம் நான் அவரை பார்க்க
வருவதாக சொல்லியிருந்ததால் அவர் "எங்கப்பா இருக்கே" என்று போன்
அடித்தார்.வந்து கொண்டே இருக்கிறேன் என்று சொல்லி அவர் முன்பு
போய் நின்றேன் (அவர் வந்த பின்னே வந்து அவர் முன்னே சென்று
நின்றேன் )
* இருவரும் சேர்ந்து வலம் வர ஆரம்பித்தோம் எந்தெந்த புக்ஸ் எங்கு கிடைக்கும் என்று டிப்ஸ் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் அங்கெல்லாம் அழைத்தும் சென்றார்.அவருடன் பேசிய படியே அரங்கை சுற்றி வந்தது கண்டிப்பாக எனக்கு அயர்ச்சி தெரியவில்லை ( அவர் விடை பெற்று செல்லும் வரை )
*எழுத்தாளர் ராஜேந்திரகுமார் அவர்களின் நாவல்கள் கிடைக்குமா என்று விசாரித்தோம். ஒரு ஸ்டாலில் அவரது நாவல் ஒன்றும் சிறுகதை தொகுப்பு ஒன்றும் கிடைத்தது அது நான் ஏற்கனவே நூலகத்தில் படித்து விட்டதால் வாங்கவில்லை ( எங்க கிடைக்கும் யாராவது சொல்லுங்களேன் )
* விகடன் ஸ்டால் சென்று புதிதாக வந்திருக்கும் சுஜாதா மலர் புரட்டி பார்த்து விட்டு வைத்து விட்டேன்.இது போல் பல ஸ்டால்களில் பல புத்தகங்களை ஆசையாய் எடுத்து பார்த்து வைத்து விட்டேன் (விலையை பார்த்தவுடன் )
* என் மகன் தனக்கு புத்தகம் வாங்கி வர வேண்டும் என்று போனில் மிரட்டல் விடுத்ததால் முத்து காமிக்ஸ் ஸ்டால் சென்று முன்னூறு பக்க இரும்புக்கை மாயாவி வாங்கினேன். குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர் ஆர்வமாய் வாங்கினர் ஒருவர் அந்த கால காமிக்ஸ் புக்ஸ் கிடைக்குமா இருக்கா அது இன்னும் சுவாரஸ்யமா இருக்கும் என்று கேட்டு கொண்டிருந்தார் (இதையும் படிக்கலாம் னு இருக்கேன் சிறார்களின் உலகத்துக்கும் போய் வருவோமே )
* சாண்டில்யன் நாவல்கள் இரண்டு (மூன்று பாகங்கள் ) வாங்கிய கடையில்
ஒரே கவரை போட்டு கொடுத்தார்கள் தாங்காது இன்னொரு கவர்ல போட்டு கொடுங்க னு சொன்னேன் தாங்கும் சார் என்றார் கடையில் இருந்தவர்
(பஸ் ஸ்டான்ட் வருவதற்குள் கவர் கிழிய ஆரம்பித்தது வெயிட் தாங்காமல்)
*குடும்பம் குடும்பமாக சிறார்களுடன் மக்கள் காலையிலேயே
வந்திருப்பதை பார்க்க சந்தோசமாக இருந்தது. புக் வாங்கி
கொண்டிருந்த தம்பதி யில் கணவன் உனக்கு பிக்ஸ் பண்ண பட்ஜெட்டை
விட ஜாஸ்தியாகிடுச்சு புக் வாங்கிட்டே படிப்பே இல்லே என்று கேட்டு கொண்டிருக்க நான் எல்லாம் படிச்சுடுவேன் என்று மனைவி பதில் சொல்லி கொண்டிருந்தார் (எல்லா குடும்பத்திலேயும் இப்படி தானா )
* நடந்து நடந்து கால்கள் வலியெடுத்தது. எனவே மனது வெளியேறும்
வழியை முன்னெடுத்தது. பாக்கெட்டின் வெயிட் குறைந்து போய், கையில் புத்தகங்கள் வெயிட் நிறைந்து விட்டது (இனி படித்து மனசு நிறைவடைய வேண்டும்)
* வாங்கிய புத்தகங்களை நான் கொண்டு வந்து ஆசையாய் பிரித்து பார்த்து விட்டு, எனது புத்தக செல்பில் அடுக்கும் போது ஏற்கனவே வாங்கிய புத்தகங்களில் சில எங்களை நீ இன்னும் படிக்கவில்லை என்று அறிவுறுத்தி கொண்டிருந்தது (புத்தகத்தை எடுக்கறதில்லே எடுத்தா படிச்சு முடிக்காம விடறதில்ல)
நான் வாங்கிய புத்தகங்கள் லிஸ்ட்
கடல் புறா-சாண்டில்யன்
ஜலதீபம்-சாண்டில்யன்
ரத்தம் ஒரே நிறம் -சுஜாதா
கொலையுதிர்காலம் -சுஜாதா
வசந்த் வசந்த் -சுஜாதா
தொட்டால் தொடரும் -பட்டுகோட்டை பிரபாகர்
இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் -வைரமுத்து
சரிதாயணம் - பால கணேஷ்
மீண்டும் ஒரு காதல் கதை -கேபிள் சங்கர்
சினிமா வியாபாரம் -கேபிள் சங்கர்
இரும்பு கை மாயாவி - முத்து காமிக்ஸ்
இனி அடுத்த புத்தக காட்சி யின் நாள் எப்போது, என்பதில்
என் ஆர்வம் இப்போது
படம் நன்றி கூகுள்
ஆர்.வி.சரவணன்

நானே போய் (வாங்கி) வந்தது மாதிரி இருக்கு. ஃ1
பதிலளிநீக்குஎங்கு சென்றாலும் நான் பை கொண்டு போவது வழக்கம்.
பதிலளிநீக்கு"புத்தகம் வாங்க போனேன், பை மறந்து போனேன்"
கூகுள்லருந்து படம் எடுத்துப் போட்ருக்கீங்க. நீங்க எடுக்கலையா?
பதிலளிநீக்குஃ3
இனி படித்து மனசு நிறைவடைய வேண்டும்)
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
I also enjoyed verymuch yesterday visit with you Saravanan. Thank you.
பதிலளிநீக்குநானும் வரவேண்டிய பிளான்... இயலாமல் போனது ... அடுத்த வருட திருவிழாவிலாவது இணைந்து போவோம் சார்
பதிலளிநீக்குநான் அரசனையும் உங்களையும் எதிர்பார்த்தேன் கிளம்பும் வரை. அரசன் பரிட்சை எழுதுவதாக பின்பே தெரிந்தது. சாண்டில்யன் என்றால் தனி ஆர்வம் எனக்கும் கடல் புறா படித்து விட்டேன் எடுத்தால் வைக்கவே மனசு இருக்காது அருமையான வர்ணனை காதல் ததும்பும். நானும் ராஜ திலகம் மோகனச்சீலை மூங்கில் கோட்டை இன்னும் சில வாங்கினேன்.
பதிலளிநீக்குசார் நான் இந்த கண்காட்சியை ரொம்ப மிஸ் பண்றேன். மதுரையில் இது போல ஒரு கண்காட்சி நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் சக பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு அதில் குறைவுதான்.
பதிலளிநீக்குநண்பரே.. காமிக்ஸ் உங்கள் மகனுக்கு மட்டும் அல்ல.. இப்பொழுது முத்து, லயன் காமிக்ஸ் வண்ணத்தில், உலக தரத்தில், உலகத்தின் பெரும்பான்மையானவர்களால் ரசிக்கப்பட்ட கதைகள் வருகின்றன. அவைகள் பெரியோர்களாலும் பெரிதும் ரசித்துப் படிக்கப்படுகிறது.
பதிலளிநீக்குhttp://lion-muthucomics.blogspot.com
http://pinnokki.blogspot.in/2012/10/blog-post.html
கண்டிப்பாக படித்துப்பாருங்கள்.. உங்களுக்குப் பிடிக்கும்.
தமிழ் காமிக்ஸ் உலகம் மிக அற்புதமான வளர்ச்சியடைந்துள்ளது ஜி! வாங்க! வணக்கம்!
பதிலளிநீக்குசரவணன் இத்தனை புத்தங்கங்கள் வாங்கி இருக்கீங்களே படிப்பீங்களா! :-)
பதிலளிநீக்குநான் ஆன்லைனில் கிழக்கு பதிப்பகத்தில் எரியும் பனிக்காடு மற்றும் ஜாலியா இலக்கணம் இரண்டு புத்தகம் கடந்த வாரம் வாங்கினேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.