வெற்றி தொட்டு விடும் தூரம் தான்....
சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் நான் மேலதிகாரியாக இருக்கும் போது எம்.டி யின் மனைவி நிறுவனத்தின் அந்த பிரிவுக்கு இன்சார்ஜ். நான்
வேலைக்கு சேர்ந்த புதிதில் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டேன் .ஆனா பாருங்க ஒரு பிரெஷ் காண்டிடேட் வேலைக்கு சேர்ந்தார். எனக்கு அசிஸ்டன்ட் என்றும் சொல்லலாம் நான் விடுமுறை எடுக்கும் நாட்களில் எனக்கு மாற்றாக என்றும் சொல்லலாம் (நான் எப்போதுமே எனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை மரியாதையில்லாமல் நடத்தியதும் கிடையாது அதே
போல் எனக்கு மேலதிகாரியாக இருப்பவர்களிடம் கும்பிடு போடுவதும் பிடிக்காது). அவருக்கு நான் காஷ் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் தினமும் உள்ள வேலைகள் என்று சொல்லி கொடுத்து அவரை தயார் செய்து கொண்டிருந்தேன். நான் கவனிக்காமல் விட்ட சில வேலைகள் தவறுதலாகி விடவே செம டோஸ் எனக்கு மேடத்திடம் கிடைத்தது." இது கூட சரியாய் செய்யாம இந்த சேர் லே எதுக்கு நீங்க" என்று மேடம் கேட்டது எனக்கு ஜென்மத்திற்கும் மறக்காது.
அதற்கு அடுத்து வந்த நாட்களில் நான் அவர் வந்தவுடன் குட் மார்னிங் சொன்னால் பதிலுக்கு அவர் மார்னிங் என்று சொல்லாதது மட்டுமில்லாமல் என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார். இது என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது இதை விட கொடுமை என்னவென்றால் புதிதாக சேர்ந்த அந்த பையனையே முன்னிறுத்தி என்னை பின்னுக்கு தள்ளிய தும் நடந்தது எல்லா வேலைகளும் அந்த பையனிடமே ஒப்படைப்பார். அந்த பையன் நான் செய்ய வேண்டிய வேலைகளை கொடுப்பார். அதாவது மேடத்திற்கு அந்த பையன் ஒரு பி.ஏ போல் ஆகி விட்டார். வேலையை விட்டு வெளியேறி விடலாம் என்றால் என்னை அங்கே வேலையில் சேர்த்த உறவினருக்கு என்ன பதில் சொல்வது என்ற தயக்கம் எழுந்தது. மேலும் இப்படி என்னை அவமானபடுதியதற்க்கு பதிலடி கொடுக்காமல் திரும்பவும் நல்ல பெயரை வாங்காமல் அங்கிருந்து செல்ல கூடாது என்ற உறுதி எடுத்தேன்
அடுத்து வந்த நாட்களில் எனது வேலை நேரத்தை இரு மடங்காக்கி கொண்டேன் எப்படி தெரியுமா காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு வரை வேலை நேரம். நான் இரவு இரண்டு மணி வரை தொடர்ந்து அமர்ந்தேன். ஒவ்வொரு துறையிலும் உள்ள வேலைகள் எப்படி நடைபெறுகிறது என்று பட்டியலிட்டேன் உற்று நோக்கினேன் அந்த பையன் எப்படி மேடத்திடம் நல்ல பெயர் வாங்கினான் என்பதை கவனித்தேன் ஒன்று புரிந்தது அது முக ராசி என்று. அது நமக்கு இல்லை, ஏனெனில் நான் செய்த தவறுகளை விட அவர் அதிகம் செய்தார் ஆனால் இட்ஸ் ஓகே என்று அதை டேக் இட் ஈசி யாக நிர்வாகம் எடுத்து கொண்டது.இது என்னை இன்னும் காயப்படுத்த, வெறி கொண்டு உழைத்தேன் நிறுவனத்தின் அனைத்து துறை பற்றியும் எனது விரல் நுனிக்கு கொண்டுவந்தேன்.எனக்கான நேரம் வருவதற்கு காத்திருந்தேன்.
அந்த பையன், வீட்டில் திருமணம் என்பதால் பதினைந்து நாள் விடுமுறையில் சென்றார்
மேடம் இப்போது என்னை நம்பியாக வேண்டிய கட்டாயம் வந்தது. அவர் என் மீது நம்பிக்கையில்லாமலே என்னிடம் வேலைகளை ஒப்படைக்க, நான் அவர் என்னிடம் எதிர்பார்த்ததுக்கும் மேலே நல்ல படியாய் ரிப்போர்ட் தர ஆரம்பித்தேன். அவர் சொல்லாத வேலைகள் கூட செய்து அவரை ஆச்சரியப்பட வைத்தேன். அன்று குட் மார்னிங் சொன்னதற்கு கூட பதில் தர மறுத்தவர் இப்போது (அங்கே இரவு பகலாக ஷிப்ட் முறையில் வேலை நடக்கும் ) இரவில் போன் செய்து நடைபெறும் வேலைகளை தெரிந்து கொண்டு விட்டு குட் நைட் சரவணன் என்று அவர் சொல்லும் அளவுக்கு நன் மதிப்பை பெற்றேன் இதன் மூலம் வாழ்க்கை பாடங்களில் ஒன்றை கற்று கொண்ட திருப்தி கிடைத்தது.
FINAL PUNCH
ஏற்கனவே நான் முடிவு செய்திருந்த படி நல்ல பெயர் பெற்ற திருப்தியுடன் அந்த நிறுவனத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டேன்
ஆர் வி.சரவணன்
விடாமுயற்சியால் பெற்ற வெற்றி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசரி, இது நடந்தது எப்ப?
நன்றி நிசாமுதீன் இந்த அனுபவம் எனக்கு கிடைத்த வருடம் 1996
நீக்குஅருமை சார்... வாழ்கையில் நீங்கள் இன்னும் பல படிகள் உயர வேண்டும் ... உங்களுக்குள் இருக்கும் எனெர்ஜி எனக்குள்ளும் வந்தது போன்ற உணர்வு
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்திற்கு நன்றி சீனு
நீக்குஅருமை. வேலை குறித்த எந்த விஷயமும் நான் பெரும்பாலும் எழுதுவதில்லை ! எப்பவாவது ஜாலியான விஷயம் என்றால் லேசாய் பகிர்வேன்
பதிலளிநீக்குநன்றி மோகன் சார்
நீக்குவாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களிலிருந்து
கற்று கொள்ள விஷயங்கள் இருக்கிறது அவற்றில்
சிலவற்றை அவ்வபோது நான் பகிர்ந்து கொள்கிறேன்
சிறப்பான தன்னம்பிக்கை பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குஇறுதி பன்ச் மிக மிக அருமை
அனைவரும் புரிந்து மிகச் சரியாக
பயன்படுத்த வேண்டிய சூட்சுமம் சொல்லும் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்திற்கு நன்றி ரமணி சார்
நீக்கு"ஏற்கனவே நான் முடிவு செய்திருந்த படி நல்ல பெயர் பெற்ற திருப்தியுடன் அந்த நிறுவனத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டேன் "
பதிலளிநீக்குசூப்பர்! :-) இதை நீங்க சொல்லுவீங்களா என்று எதிர்பார்த்தேன்.. :-) இன்னொரு விசயமும் என் மனதில் உண்டு.. நாம் யாருக்காகவும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, நம் மனசாட்சிக்கு சரி என்றால் போதும்.
ரொம்ப நன்றாக இருந்தது படிக்க.
மற்றவர்களுக்கு நம் திறமையை பற்றி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை தான்.இருந்தும் எனது திறமை பற்றி நிர்வாகம் நம்பிக்கையின்மை கொண்டதால் என்னுடன் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் என் உதவியாளர்கள் உட்பட என்னை தாழ்த்தி பேசும் நிலை வந்த பின் என்னை நிரூபிக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது
நீக்குஅதற்கு பின் நிர்வாகத்திற்கு என்னை விட்டு விட விருப்பமில்லை தான்
இருந்தும் நல்ல பெயர் பெற்ற பின் நின்று விடுவதே சிறந்தது என்பதால் நான் ராஜினாமா செய்து விட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டேன்
தங்கள் கருத்திற்கு நன்றி கிரி
நல்லதொரு தன்னம்பிக்கை பகிர்வு...
பதிலளிநீக்குமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...