இளமை எழுதும் கவிதை நீ....follows
இளமை எழுதும் கவிதை நீ என்ற இந்த தொடர்கதை சென்ற தீபாவளிக்கு
நம் குடந்தையூர் தளத்தில் நான் மிகுந்த உற்சாகத்துடன் எழுத ஆரம்பித்தேன் மேலும் இணைய நண்பர்கள் அளித்த உற்சாகம் என்னை பன்னிரண்டு அத்தியாயங்கள் வரை சிறப்பாய் எழுத வைத்தது. இருந்தும் கதையின் இடைவேளை வரை வந்த பின் கொஞ்சம் ஆசுவாசபடுத்தி கொண்டு தொடரலாமே என்று இடைவேளை விட்டேன். பின் மீண்டும் நான் தொடர்ந்த போது தொடர்கதை தொடங்கிய போது இருந்த ஆதரவு இப்போது இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது . காரணம் கருத்துக்களும் வருபவர்கள் எண்ணிக்கையும் கம்மியாக இருக்கவே சரி என்று தொடர்கதையை நிறுத்தி கொண்டு விட்டேன்.
எங்கள் வீட்டில் ஏன் தொடர்கதையை நிறுத்தி விட்டீர்கள் என்று டோஸ் விட்டார்கள். நான் ஆரம்பத்தில் இருந்த ஊக்கம் கம்மியானது போல் தெரிகிறது அதனால் தான் என்று சொன்னேன்.
நண்பர் கிரி தொடர்கதைக்கு அதிக இடைவெளி விட்டுட்டீங்க போல என்று கேட்டிருந்தார்
இணைய நண்பர் நிசாமுதீன் அவ்வபோது கருத்துரையிலும் போனிலும் தொடர்கதை எப்ப என்று கேட்டு கொண்டிருந்தார்.மேலும் அவர் கூறும் போது சார் உங்கள் பதிவுகளில் மெகா பட்ஜெட் என்றால் அது இளமை எழுதும் கவிதை நீ தான். ஆகவே அதை நல்ல படியாக முடித்து விடுங்களேன் என்றார்
இந்த கதையை பற்றி நான் தொடர்ந்து விவாதிக்கும், நண்பர் அரசன் எப்ப சார் தொடர போறீங்க என்று சந்திக்கும் பொழுதெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்
ஒரு செயல் ஆரம்பிக்கும் முன் நிறைய யோசிக்கலாம் ஆரம்பித்த பின்
யோசிக்கலாமா என்று என் மனது கேள்வி கேட்க ஆரம்பித்தது
சகோதரி தென்றல் சரவணன் இந்த தொடர்கதைக்கு படம் வரைந்து கொடுத்து
தொடர்கதைக்கு இன்னும் சிறப்பு சேர்த்தார்.
இன்னும் சிலர் (அல்லது பலர்) ஏன் இவன் தொடர்ந்து எழுதவில்லை
என்று நினைத்து கொண்டிருந்திருக்கலாம். இது வரை தொடர்கதையை
படித்து வந்த அனைவரும் என்னை மன்னிக்குமாறு கேட்டு கொள்வதுடன் தொடர்கதையை தொடர்ந்து எழுத போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்
படித்தவர்கள் கதையை கொஞ்சம் புரட்டி ஞாபகம் செய்து கொள்வதற்கும் இது வரை படிக்காதவர்கள் தொடர்கதையை படித்து கொள்ள லிங்க் இளமை எழுதும் கவிதை நீ....
இளமை எழுதும் கவிதை நீ 2
இளமை எழுதும் கவிதை நீ-3
இளமை எழுதும் கவிதை நீ-4
இளமை எழுதும் கவிதை நீ-5
இளமை எழுதும் கவிதை நீ-6
இளமை எழுதும் கவிதை நீ-7
இளமை எழுதும் கவிதை நீ-8
இளமை எழுதும் கவிதை நீ-9
இளமை எழுதும் கவிதை நீ-10
இளமை எழுதும் கவிதை நீ -11
இளமை எழுதும் கவிதை நீ-12
கதையை இது வரை படித்தவர்களுக்கு ஒரு ட்ரைலர் இனி வரும் அத்தியாயங்களில் இருந்து சில வரிகள்
"சிவா நீங்க உலகத்திலே யாரும் செய்யாத தப்பை ஒன்னும் பண்ணிடலே வீட்டுக்கு அடங்காது இருந்தீங்க அதுக்கு போய் தலை குனிஞ்சு எல்லாம் நிக்கணும்னு அவசியமில்லை " என்றாள் உமா
"சரிங்க உமா" என்று அதற்கும் தலை குனிந்தவாறே பதில் சொன்னான் சிவா
"தலை நிமிர்ந்து நில்லுங்க" என்று உமா அதட்டியவுடன் தலை நிமிர்ந்தான் சிவா
"ஒன்னு தெரியுமா நீங்க மறந்தாலும் நான் மறந்துடலே"
எதை என்று குழம்பிய முகத்துடன் சிவா உமாவை பார்க்க
"சவால் விட்டீங்களே என்னை விட ஒரு மார்க் கூட வாங்கி காட்டறேன்னு மறந்துடுச்சா"
"நான் ஒரு வேஸ்ட் பீஸ்ங்க உமா போட்டிலேருந்து விலகிக்கிறேன் அதெல்லாம் மறந்துடுங்க"
இந்த வார்த்தைக்கு உமா மட்டுமில்லாது கூட இருந்த அருளும் கூட திடுக்கிட்டான்
"என்ன நீங்க ஒரு தோல்விக்கு போய் இவ்வளவு வெக்ஸ் ஆகிட்டீங்க, சவால் னா சவால் தான் நீங்க படிக்கிறீங்க நான் உங்களை தேர்தல்லே தோற்கடிச்ச மாதிரி பதிலுக்கு நீங்க இப்ப என்னை எக்ஸாம் லே தோற்கடிகீறீங்க பார்க்கலாமா "என்று உத்வேகமாய் சொன்னாள் உமா
அதை சிரத்தை இல்லாமல் கவனித்து கொண்டிருந்தான் சிவா
கதையை இது வரை படிக்காதவர்கள் பார்வைக்காக கதையை படித்த இணைய நண்பர்கள் சிலரின் கருத்துரைகள் இங்கே கொடுத்திருக்கிறேன்
சிவா இனி என்ன பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது சார் ...
வாழ்த்துக்கள் ... அரசன் - கரைசேரா அலை
கதை முழுதுமாய் இன்றே படித்துவிடவேண்டும் என்கிற தேடலை தருகிறது உங்கள் எழுத்து....அருமையாய் நகர்கிறது கதை...வாழ்த்துக்கள்...தொடருங்
தென்றல் சரவணன்
முதலில் சுவாரசியம் இல்லாமல் தான் படித்தேன். படிக்க படிக்க அட போட வைத்து விட்டீர்கள்.
சிவகுமாரன்
சரவணன் நன்றாக எழுதி இருக்கீங்க.. இதை படிக்கும் போது எனக்கு 80 களில் வந்த படங்களின் நினைவு வந்து சென்றது. சிறப்பாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள். கிரி
சுவராஸ்யம் கூடுது..தொடருங்க சரவணன்.. கட்டாயம் படித்திடனும் முடிவை.. அகமது இர்ஷாத்
"இளமை எழுதும் கவிதை நீ" தொடர்கதையை மீண்டும் தொடர்ந்திட கேட்டுக் கொள்கிறேன்.
நிசாமுதீன்
இந்த தொடர்கதைக்கு வந்த கருத்துரைகளை நான் சமீபத்தில் மீண்டும் ஒரு முறை பார்வையிட்ட போது என் மேல் அக்கறை கொண்டு கதையின் மேல் ஈடுபாடு கொண்டு படித்தவர்களை நினைத்த போது கொஞ்சம் பெருமையும் நிறைய சந்தோசமும் அடைந்தேன்.
FINAL PUNCH
இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை 19-11-2012 அன்று முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வெளியாகும் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்
நெஞ்சம் நிறைந்த நன்றியுடன்
ஆர் .வி.சரவணன்
தொடருங்கள்! நானும் ஒரு தொடரை பாதியில் விட்டிருக்கிறேன்! தொடர நினைத்துள்ளேன்! உங்கள் தொடரையும் தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅடடே... ஆரம்பம் தொடர்கதை தீபாவளி ஸ்பெஷலா? வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகாத்திருக்கிறோம்... தொடருங்கள்...
பதிலளிநீக்குஇனி தடங்கல் இல்லாமல் தடம் பதிக்கட்டும் இந்த திரைக்கதை ...
பதிலளிநீக்கு"இந்த கதையை பற்றி நான் தொடர்ந்து விவாதிக்கும், நண்பர் அரசன் எப்ப சார் தொடர போறீங்க என்று சந்திக்கும் பொழுதெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்"
பதிலளிநீக்குகடை எப்ப சார் திறப்பீங்க மாதிரியா :-)
"கருத்துக்களும் வருபவர்கள் எண்ணிக்கையும் கம்மியாக இருக்கவே சரி என்று தொடர்கதையை நிறுத்தி கொண்டு விட்டேன்"
சரவணன் பொதுவா தொடர்கதைகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போட மாட்டார்கள்.. காரணம் ஒரே கருத்தையே அடிக்கடி கூற வேண்டி வருவதால்.. அது டெம்ப்ளேட் பின்னூட்டம் ஆகி விடும் என்பதால் தான்.
எனக்கு கூட பல விசயங்களில் இது போல ஆகி இருக்கிறது.. துவக்கத்தில் சலிப்பு வந்தாலும் அதைப் பற்றி கவலைபடாமல் தொடர்ந்து எழுதுவேன்..பின்னர் அது பற்றி நினைப்பதை விட்டு விட்டேன். படிப்பவர்கள் படிக்கட்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நிறையப் பேர் ரீடரில் படித்து விடுவார்கள் அதனால் இங்கே வர மாட்டார்கள்.
எனவே எதையும் யோசிக்காமல் சிறப்பாக எழுத வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதொடருங்கள் தொடர்கிறோம்.