செவ்வாய், அக்டோபர் 16, 2012

ஸ்வீட் காரம் காபி (16-10-2012)




ஸ்வீட் காரம் காபி 
________________________________
(16-10-2012)




சாட்டை படம் பார்த்தேன்.  நாம் செய்திதாளில் கேள்விப்படும்  அநியாயங்களை ஒருங்கே கொண்ட  ஒரு அரசு பள்ளியை, அங்கு புதிதாக வந்து சேரும் ஒரு நேர்மையான ஆசிரியர் தனது புத்திசாலி தனமான நடவடிக்கைகளால்  சிறந்த பள்ளியாக மாற்றுகிறார்  என்பதை சொல்கிறது கதை.

நேர்மையான இயற்பியல் ஆசிரியராக   இந்த படத்தில் சமுத்திரகனி   
அவரது  கதாபாத்திரமும் அவரது நடிப்பும்   கை குலுக்கி  பாராட்ட தோன்றுகிறது.  ஜூனியர் பாலையா நேர்மையான தலைமை ஆசிரியராக நல்ல குணசித்திர வேடத்திலும் ,தம்பி ராமையா அநியாயங்கள்செய்யும் உதவி தலைமை   ஆசிரியராக வருகிறார்கள்.  தம்பி ராமையா சூப்பர் யா என்று சொல்லுமளவுக்கு வில்லன் நடிப்பில் பாஸ் ஆகிறார் என்றாலும் ஓவர் ஆக்டிங் காரணமாக  கொஞ்சம் பெயிலும் ஆகிறார் .(அதற்காக விளையாட்டு போட்டியை தடுப்பது, கத்தி வைத்து கொண்டு விழாவுக்கு வருவது இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.)  

பள்ளி என்றால் மாணவர்கள் சேட்டைகள், காதல் இல்லாமலா  மாணவன் மாணவி காதலும் இப் படத்தில் உண்டு . என்று அதுவும் பருவ வயதில் வரும் ஒரு நிகழ்வு தான்  அதை கடந்து தங்களுக்கென்று இருக்கும் பொறுப்பை உணர்ந்து படிக்க வேண்டும் என்பதை அவர்களே உணரும் வண்ணம் தந்திருப்பது நன்றாக இருக்கிறது.  மாணவர்கள் க எழுத்து சேர்த்து பேசும் விதம் நாம் படித்த  காலத்தை முன்னிறுத்துகிறது.  


 படம் ஆரம்பித்து எல்லா கேரக்டர்கள் அறிமுகமான பிறகு அடுத்து என்ன என்ற ஒரு வெற்றிடம் தோன்றுவது போல் இருக்கிறது . சமுத்திரகனி மீது புகார்  வந்த பின் படம் வேகமெடுக்கிறது . திரைகதையில் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் (அதாவது ஒரே வருடத்திலேயே எல்லாவற்றையும் திருத்தி விடுவதாக காட்டுவது ) படம்  இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்.

 முதல் படத்தில் இப்படி ஒரு சப்ஜெக்ட்  எடுத்து கொண்ட இயக்குனர் அன்பழகன் பாராட்டப்பட  வேண்டியவர். மாணவர்கள் மாணவிகள்  ஆசிரியர்கள் பெற்றோர்கள்   என்று அனைவருக்குமான   message படத்தில் உண்டு ( பெஸ்ட் ஒன் என்று சொல்கிறோமோ  இல்லையோ   குட் ஒன்  என்று உறுதியாய்   சொல்லலாம் )

------




பாலம் கட்றது உறவுக்கு உதவும்  சுவர் எழுப்புவது பிரிவுக்கு தான்
வழி வகுக்கும் முடிந்தவரை நீங்க  எதிலும் பாலம் கட்ரவனா  இருங்க
அப்படின்னு ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் பாக்யாவில் கே.பாக்யராஜ் சொல்லியிருக்கார் . இது அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களின் பார்வைக்கு இதற்கான விளக்கம் கீழே தந்திருக்கிறேன் (அப்படி சுவர் எழுப்பியிருந்தா கூட அதற்கு மேலே ஒரு பாலம் கட்டிட்டா சுவர் பயனற்றதாகிடும்) 

------


கிரேசி மோகன்   தன் ஹாஸ்யமான வசனங்களால்  நம்மை சிரிக்க 
வைப்பவர் அவர் வசனங்கள், நாடகங்கள் எனக்கு   பிடித்த ஒன்று .
சமீபத்தில் யு டியுபில்  நான்  உலா வந்து   கொண்டிருந்த போது 
கிரேசியை கேளுங்கள் என்ற தலைப்பில்   ஒரு ப்ரோக்ராம் 
இருந்தது .வாசகர்களின் கேள்விகளுக்கு மோகன் தனக்கே உரிய 
நகைச்சுவையுடன் பதிலளித்திருக்கிறார் ஒரு சாம்பிள் இதோ 

இறைவன் நல்லவங்களை தான் அதிகம் சோதிக்கிறான் ஏன் இப்படி ?

கஜானாவை தான் சோதனை போடுவாங்க.  குப்பை தொட்டியை யார் சோதனை போட போறாங்க


கிரேசியை கேளுங்கள் நிகழ்ச்சியை பார்க்க லிங்க்  இங்கே 

------

ஞாயிறு அன்று கும்பகோணத்தில்  எலெக்ட்ரிகல்ஸ் கடைக்கு பல்ப் 
வாங்க  சென்றிருந்தோம் (அந்த பல்பு இல்லே )  அப்போது மின்சாரம் 
இல்லை எனவே பல்ப் செக் செய்து தர வேண்டும் என்பதால் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டனர். பரவாயில்லை செக் பண்ணாம 
கொடுங்க என்று கேட்டேன். முடியாதுஎன்று மறுத்து  விட்டார்கள். சரி 
என்று மற்ற வேலைகளை முடித்து கொண்டு பின்பு சென்று பல்ப் வாங்கி  வந்தோம் இதில் என்ன கொடுமை னா  எலெக்ட்ரிகல்ஸ் கடையில் சரியான கூட்டம் இருந்தது (என்னமோ மின்சாரத்தையே விக்கிற மாதிரி)

------

செய்திகள் சில வரிகளில்

கேரளாவை விட தமிழகத்தில் மலையாளிகள் பாதுகாப்பாக உள்ளனர் கேரள முதல்வர்-செய்தி  
(வந்தாரை வாழ வைப்பவர்கள்   நாங்க ) 


காவிரியில் தண்ணீர் விட மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்ப்பு - செய்தி 

இரு நாடுகளுக்கு (மாநிலத்துக்கு) இடையே உள்ள உறவை பலபடுத்தும் விதமாய் தான்  ஒரு வெளியுறவு துறை அமைச்சரின் பேச்சும் செயல்பாடும்  இருக்க வேண்டும்


------



போட்டோ கார்னர் 




                         நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க  நடந்தாய் வாழி காவேரி 


ஆர்ப்பரித்து வரும் காவிரியை என் செல் போனில் கிளிக்கினேன் 



ஆர்.வி.சரவணன் 


14 கருத்துகள்:

  1. ஸ்வீட் காரம் காபி - நல்லா இருந்ததுங்க...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. சாட்டை எனக்கும் பிடித்திருந்தது.
    கிருஷ்ணா வெளி உறவுக்குத்தான் நண்பன்... உள் உறவுக்கு அல்ல...
    காவிரி படத்தில் பார்க்க சந்தோஷம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் வந்து படித்து கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி குமார்

      நீக்கு
  3. பதில்கள்
    1. எல்லாம் தங்கள் ஊக்கம் தான் நன்றி நிசாமுதீன் சார்

      நீக்கு
  4. //பின்பு சென்று பல்ப் வாங்கி வந்தோம் // இது எந்த பல்பு சார் சொல்லவே இல்லையே... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீரியல் பல்ப் சீனு நன்றி தங்கள் வருகைக்கு

      நீக்கு
  5. நம்ம ஊர் ஆறுகளில் நல்லா தண்ணீர் வருவது கண்கொள்ளா காட்சி ஆச்சே ! தஞ்சை ஆறுகளிலும் தண்ணீர் நல்லா ஓடுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவிரியில் தண்ணீர் பார்க்க சந்தோசமா இருக்கு மோகன் சார்

      நீக்கு
  6. பல்பு எதுக்கு மின்சாரமே இல்லாத போது...
    நடந்தாய் வாழி காவேரி படம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே இருந்தாலும் மின்சாரம் இருக்கும் போது உதவுமே

      தங்கள் வருகைக்கு நன்றி மேடம்

      நீக்கு
  7. சாட்டையை நல்ல முறையில் சுழற்றி ஒரளவு பெயரும் வாங்கி கொண்டார் இயக்குனர் திரு. அன்பழகன்...
    கிருஷ்ணா மாதிரி நாலு மந்திரி இருந்தாலே நாட்டில் முப்போகம் மழை பெய்யும், என்ன ஒரு வில்லத்தனம் அந்த மனிதருக்கு ...
    பல்பு மேட்டர் செம சிரிப்பு ... இல்லாத கோயிலுக்கு இன்னைக்கே கும்பாபிசேகம் மாதிரி சார் .. என்னைக்கு தான் இந்த பிரச்சினை தீருமோ .. இந்த வார பதிவு நல்லா இருக்குங்க சார்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்