
புதன், ஆகஸ்ட் 31, 2011
எனது தூரிகையில் .....

கணபதியே வருவாய் அருள்வாய்
எனது தூரிகையில் .....
இந்த விநாயகர் ஆர்ட் நான் ஏழெட்டு வருடங்களுக்கு முன் வரைந்தது. அடம் பிடிக்கும் என் மகனை சமாதானபடுத்த நான் அப்போதெல்லாம் ஏதேனும் வரைந்து காட்டுவேன்
அப்பொழுது பேனாவால் வரைந்தது இது
இப்படி நான் வரைந்து காட்டுவது பார்த்து தான் என் மகன் தொடர்ந்து வரைய ஆரம்பித்தான் .
என் மகன் எனது நூறாவது பதிவில் வரைந்த விநாயகர் ஓவியம் லிங்க்
விநாயகர் சதுர்த்தி யான இன்று தளத்தில் வெளியிடலாமே என்று வெளியிட்டிருக்கிறேன்
நம் அனைவருக்கும் முழு முதற் கடவுள் விநாயகர் நல்லருள் புரிவாராக
ஆர்.வி.சரவணன்
லேபிள்கள்:
சரவணன் பக்கங்கள்
ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011
தெய்வ திருமகள் ஒரு பகிர்வு

தெய்வ திருமகள் ஒரு பகிர்வு
இந்த படம் நம்மை அழ வைத்து விடுமோ என்ற தயக்கத்தில் இந்த படம் சென்று பார்க்க யோசித்து கொண்டிருந்தேன். இருந்தும் ஆர்வம் அதிகமாக நேற்று சென்று பார்த்தேன் பார்த்த பின் ஏன் இவ்வளவு தாமதமாய் சென்றோம் என்று தான் தோன்றியது
வயதுக்கேற்ற மூளை வளர்ச்சி இல்லாத தந்தைக்கும் அவர் பெற்ற மகளுக்கும் நடக்கும் பாச போராட்டம் தான் கதை. (படம் வேறு மொழியிலிருந்து தழுவல் என்றெல்லாம் பேச்சு இருந்தாலும்) மெல்லிய நகைச்சுவை படம் முழுக்க இழையோட விட்டு நேர்த்தியாய் எடுத்திருக்கிறார்
இயக்குனர் விஜய்
விக்ரம்
விக்ரமின் முக்கிய படங்களில் ஒன்றாக இந்த படமும் பங்கு பெறுகிறது கிருஷ்ணா கேரக்டருக்குள் தன்னை நுழைத்து கொண்டாரா இல்லை தனக்குள் கிருஷ்ணா கேரக்டரை உள் வாங்கி கொண்டாரா என்று தோன்றும் வண்ணம் கன கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார் விக்ரம் . நாசர் கேள்வி கணைகளால் துளைக்கும் போது என்ன சொல்வதென்று தெரியாமல் கலங்கி தவிக்கும் போது மிளிர்கிறார் நடிப்பில்

சாரா
விகரமின் பெண்ணாக வரும் இந்த குட்டி ஏஞ்சல் சாரா வை வாரே வா என்று சொல்ல தோன்றுகிறது அவ்வளவு க்யூட் இந்த குழந்தை. நடிப்பிலும் விக்ரமுடன் கை கோர்த்து நம் மனதை கொள்ளை கொள்கிறது.
விக்ரம் தன குழந்தைக்காக போராடுவதை பார்க்கும் போது பார்க்கும் நமக்கு என்ன தோன்றும் அந்த குழந்தையை எப்பாடுபட்டாவது அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தோன்றும் அல்லவா அதை தான் அனுஷ்கா செய்கிறார் வெறும் அழகு பதுமை என்றெல்லாம் இல்லாமல் நிறைவாய் செய்திருக்கிறார்.
அமலா பால் குழந்தைக்காக தன் காதலையே தியாகம் செய்யும் கேரக்டர்
அவரும் குழந்தை நிலாவும் பழகும் பள்ளிக்கூட காட்சிகள் நம்மை ஈர்க்க வைக்கிறது
கிருஷ்ணா பள்ளிக்கூட வாசலில் வந்து நின்று வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட நிலா சைகையால் அதட்டி போக சொல்வது படுக்கையில் படுத்து கொண்டு கை விரல்களால் பேசி கொள்வது என்று காட்சிகள் மனசை வசீகரிக்கின்றன
நீதிமன்ற காட்சியில் விக்ரம் நிலா இருவரும் கண்களால் பேசி கொள்வதும் சமிக்சைகளால் குசலம் விசாரிப்பதும் நம் கண்களில் கண்ணீரால் திரையிட வைக்கிறது .
நீதிபதி இந்த இருவரின் உணர்வுபூர்வ உறவை பார்த்து தீர்ப்பு தருவது சிறப்பு
அனுஷ்காவுக்கு ஒரு பாடல். பாடல் படமாக்கப்பட்ட விதம் என்னை கவர்ந்தாலும் அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையில் அந்த பாடல் தேவையா என்று தோன்றுகிறது
சந்தானம் வழக்கம் போல் கல கல ரெண்டு தடவை கேட்டதுக்கே பொறுமை இல்லியே உனக்கு. நாங்க எல்லாம் ரெண்டாயிரம் தடவை கேட்கிறோமே என்று
ஆதங்கபடுவது சிரிக்க வைக்கிறது
ஒளிப்பதிவு ஒவ்வொரு ஷாட்டும் அசத்தலாய் படமாக்கியிருக்கும் நீரவ் ஷா வுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம் பேஷா
சில இடங்களில் லாஜிக் இடித்தாலும் அவையெல்லாம் பெரிதாய் தோன்றவில்லை
மனம் லயிக்க வைக்கிறாள் இந்த தெய்வ திருமகள்
ஆர்.வி.சரவணன்
அடுத்த படமாவது படம் வெளியானவுடனே எழுத முயற்சிக்கிறேன்
லேபிள்கள்:
திரையுலகம்
திங்கள், ஆகஸ்ட் 22, 2011
காஞ்சனா ஒரு பகிர்வு
காஞ்சனா ஒரு பகிர்வு
காஞ்சனா இந்த படத்தின் ட்ரைலர் டிவி யில் பார்க்கும் போது படம் இந்த அளவு நன்றாக இருக்கும் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை நல்லா இருக்கு என்று நண்பர்கள் சொல்ல விமர்சனங்களும் படம் பார்க்கும் ஆர்வத்தை கிளப்பி விட நேற்று சென்று படம் பார்த்து விட்டு வந்தேன்
திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் தந்து திகிலை காமெடியில் தோய்த்து ராகவா லாரென்ஸ் கொடுத்திருக்கும் இத் திரைப்படம் நமக்கு
ஒரு ஜாலி த்ரில்லர் .
ராகவா லாரென்ஸ்
மனிதர் பயத்தில் அலறி கொண்டு வந்து அம்மா அண்ணி என்று ஒவ்வொருவர் மடியாய் ஏறி கொள்வதாகட்டும் ஆவி புகுந்த பின் பெண் சாயலில் அபிநயம் செய்வதாகட்டும் கிளைமாக்ஸ் இல் வில்லன தேவனை வெளுத்து வாங்குவதாகட்டும் மனிதர் அதகளப்படுத்துகிறார்
சரத்குமார்
திருநங்கையாக வே மாறியிருக்கிறார் .அறிமுக சீனில் பாய்ந்து வருவதாகட்டும் மேடையில் தங்கள் நிலை குறித்து சொல்லி கலங்குவதாகட்டும் சண்டை காட்சியில் பந்தாடுவதாகட்டும் சரத்குமார் நீங்கள் கிரேட் குமார்

கோவை சரளா தேவதர்ஷினி
மாமியார் மருமகள் சண்டை போடும் கேரக்டர்களாகவே பார்த்து பழகிய நமக்கு மருமகள் மாமியாரிடம் நொடிக்கு ஒரு முறை ஆசிர்வாதம் வாங்குவதும் மாமியார் மருமகளுடன் தோழி போல் கூடவே ஜோவியலாய் பேசி பழகுவதுமான இந்த கேரக்டர்கள் நமக்கு பார்ப்பதற்கு சந்தோசமாய் இருக்கிறது இந்த படத்தில் கோவை சரளா மிக முக்கிய கேரக்டராக ஜொலிக்கிறார் என்றால் அது மிகையல்ல இப்படி ஒரு கேரக்டருக்காக தான் காத்திருந்தேன் என்று சொல்லாமல் சொல்லி பிச்சு உதறியிருக்கிறார்
ஹீரோயின் லட்சுமிராய் ஒரு டான்ஸ் ஹீரோவுடன் கொஞ்சம் ரொமான்ஸ் அவ்வளவே
இடைவேளைக்கு முன்பு வீட்டில் ஆவி இருக்கிறதா இல்லையா என்று இருவரும் கண்டுபிடிக்கும் காட்சியில் தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது இடைவேளை போடும் போது ஆவி வரும் காட்சி திகிலை கிளப்பி விடுகிறது
அதே போல் ஆவி புகுந்த லாரென்ஸ் வீட்டில் உள்ளோரை அடித்து துவைக்கும் போது கோவை சரளா தொடர்ந்து சிரித்து கொண்டே சமாளிப்பதும் தேவதர்ஷினி புருஷனை யாரென்றே தெரியாது என்று சொல்லி தப்பிக்க முயற்சிப்பதும் ஸ்ரீமன் ஆவியை பார்க்கும் போதெல்லாம் வாய் கோணி கொண்டே படுத்து கொண்டு விடுவதும் என்று ஒரே ரகளை தான்.
கிளைமாக்ஸ் சில் கொஞ்சம் விட்டால் நம் முகத்தில் ரத்தம் தெறிக்கும் அளவுக்கு ஒரே ரத்த மயம் ராகவா லாரென்ஸ் போடும் ஆட்டம் கதி கலங்க வைக்கிறது
திகில் காட்சிகளை சிரித்து கொண்டே ரசிக்க வைக்கும் இந்த
காஞ்சனா சூப்பர் னா
ஆர்.வி.சரவணன்
லேபிள்கள்:
திரையுலகம்
வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011
கண்ணன் வந்தான்

கண்ணன் வந்தான்
பதினைந்து வருடங்களுக்கு முன் கிருஷ்ண ஜெயந்தி யின் போது என் அம்மா கிருஷ்ண ஜெயந்திக்காக பட்சணம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
நான் அப்போது கொஞ்சம் பண கஷ்டத்தில் இருந்த நேரம் அது நான் கடுப்பில் என் அம்மாவிடம் அம்மா நாம் தான் ஒவ்வொரு பண்டிகையையும் விரும்பி முழு மனதுடன் கொண்டாடுகிறோம் ஆனால் கடவுள் நம் குடும்பத்தை எப்போதும் கஷ்டத்திலேயே தான் வச்சிருக்கார் அப்புறம் என்னம்மா கொண்டாடறது என்றேன் விரக்தியாய்.
என் அம்மா, நம்பிக்கையை கை விட கூடாது நம்மால் முடிந்ததை செய்து வழிபடுவோம் என்றவுடன் சரி பால் மட்டும் வச்சி சாமி கும்பிடு அது போதும் என்று சொல்லி விட்டேன்
அன்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது கனவில் நான் ஒரு பெருமாள் கோயிலில் சன்னதியில் நின்று கொண்டிருக்கிறேன் கோயிலில் பிரசாதம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் எனக்கும் கொடுக்கிறார்கள் நான் சந்தோசத்துடன் பெற்று கொள்கிறேன்
அப்போது ஒரு சிறுவன் என்னிடம் வந்து எனக்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தை கேட்கிறான் நான் பிரசாதம் வைத்திருந்த கையை என் முதுகு பக்கம் கொண்டு சென்று மறைத்து கொண்டு அதோ கொடுக்கிறார்கள் பார் அங்கு சென்று வாங்கி கொள் என்று சொல்கிறேன் அவன் அகன்ற பின் நான் சன்னதியில் சாமியை வணங்கும் போது பின்னால் நான் வைத்திருந்த பிரசாத கையில் ஏதோ தட்டுப்படுவது போல் தோன்றவே நான் திரும்புகிறேன் அங்கே அந்த சிறுவன் என் கையில் இருந்த பிரசாதத்தை எடுத்து வாயில் வைத்து சாப்பிட்டு கொண்ட படியே ஒரு குழந்தையின் சிரிப்புடனே என்னை பார்க்கிறான். நான் பிரசாதத்தை எனக்கு தெரியாமல் எடுத்து கொண்டானே என்று கோபமுடன் முறைக்கிறேன்
கனவு கலைந்து விட்டது .
மறு நாள் நான் இதை பற்றி என் வீட்டில் சொன்ன போது எல்லோரும்
கிருஷ்ணர் தான் வந்திருக்கிறார் நீ எனக்கு கொடுக்கவில்லை என்றாலும்
நான் உன்னிடமிருந்து எடுத்து கொள்வேன் என்று சொல்லியிருக்கிறார் என்றார்கள். நான் பரவசமானேன்.
அன்று முதல் கிருஷ்ண ஜெயந்தியன்று ஒவ்வொரு வருடமும் நான்
என் மனைவி, அம்மா, குழந்தைகள் எல்லோரும் மிகுந்த ஈடுபாட்டுடன்
கிருஷ்ணருக்கு நகையெல்லாம் போட்டு அலங்கரித்து வீடு முழுக்க கோலமிட்டு பட்சணங்கள் பல விதங்களில் செய்து வைத்து பூஜை செய்து மகிழ்ச்சியுடன் பெரிய பண்டிகையாக கொண்டாடி வருகிறோம்
இந்த கனவு எனக்கு உணர்த்தியது
கவலைப்படாதே உன்னுடன் தான் நானிருக்கிறேன்
என்பதை தான் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்று நினைத்து கொண்டேன்
நம் இல்லங்களில் கிருஷ்ணனின் வருகை
சந்தோசங்களைஅள்ளி வழங்கட்டும்
அவனது அருள்
அனைவருக்கும் கிடைக்கட்டும்
ஆர்.வி.சரவணன்
லேபிள்கள்:
அனுபவம் பேசுது
புதன், ஆகஸ்ட் 17, 2011
அ.....லட்சியமாய்

அ.....லட்சியமாய்
என்னவள் வரும் வழியினிலே
இரவின் அமைதியிலே
நிலவின் ஒளியினிலே
தென்றலது தழுவலிலே
அழகு மரங்கள் அசைவினிலே
மலர்கள் மணம் வீசையிலே
காதல் மனம் கவிதையிலேபாடிய பாட்டின் போதையிலே
எனை ஆட்கொண்ட உறக்கத்திலே
கனவில் வந்த சொர்க்கத்திலே
உனை காண்பதே என் லட்சியமாய்
ஆனால் உன் பார்வையோ
அங்கும் அலட்சியமாய் .........
ஆர்.வி.சரவணன்
நான் எனது கல்லூரி காலங்களில் எழுதிய கவிதை இது
இதுவும் நான் தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்டது தான்
லேபிள்கள்:
சரவணன் பக்கங்கள்
ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011
எனக்கும் கர்வமுண்டு
எனக்கும் கர்வமுண்டு
கர்வம் கூடாது என்பார்கள் ஆனால் ஒரு விசயத்தில் மட்டும்
எனக்கு கர்வம் அதிகமுண்டு
ஆம்
நான் இந்தியன் என்பதில்
31 மாநிலங்கள்
எண்ணற்ற
மொழிகள்
சாதிகள்
மதங்கள்
29 முக்கிய பண்டிகைகள்
கொண்ட
ஒரு
தேசம்
நம்
இந்தியா
நாம் இந்தியர் என்பதில் என்றும் பெருமை அடைவோம்
அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
ஜெய்ஹிந்த்
ஆர்.வி.சரவணன்
லேபிள்கள்:
சரவணன் பக்கங்கள்
புதன், ஆகஸ்ட் 10, 2011
நீ கண்டும் காணாது சென்றாலும் ......

எனது நண்பர்கள் சிலர் கமல் ரசிகர்கள் அவர்கள் கமல் பற்றி எழுது
என்று சொன்னார்கள் அவர்களுக்காக கமல் பட பெயர்களை வைத்து
நான் எழுதிய காதல் கவிதை இதுஇதுவும் நான் தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்டது தான்
எனது இந்த முயற்சி எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்

நீ கண்டும் காணாது சென்றாலும் ......
அன்பே
மகளிர் மட்டும் பேருந்தில்
மகளிர் மட்டும் பேருந்தில்
தினம் வந்து இறங்குகிறாய் நீ
பேருந்து நிறுத்தத்தில் ஒரு
பேருந்து நிறுத்தத்தில் ஒரு
புன்னகை மன்னனாய் நிற்கிறேன் நான்
நீ கண்டும் காணாது
என் வாழ்வே மாயம்
நீ கண்டும் காணாது
சென்றாலும்
என் வாழ்வே மாயம்
ஆகி விடும் என்றாலும்
உனை பற்றி
என் கையில்
என் காதலை
மூன்று முடிச்சிட்டு
சொன்னால்
இல்லை காதலா காதலா
மனது ஆடுகிறது
இப்படியே
இன்றும் வந்து
என் ராஜ பார்வை
எனை நோக்கி
மனதுக்குள்
எனை
எல்லாம் இன்ப மயம்
உனை வைத்து
என் இளமை ஊஞ்சலாடிகொண்டு தானிருக்கிறது
உனை பற்றி
நினைத்தாலே இனிக்கும்
எப்போதும்
என் கையில்
சிகப்பு ரோஜாக்கள்
இதோ இப்போதும்
என் காதலை
சொல்ல தான் நினைக்கிறன்
மூன்று முடிச்சிட்டு
உன் நாயகன் நானே ஆக வேண்டும்
என்று துடிக்கிறேன்
சொன்னால்
மறுப்பாயா
இல்லை காதலா காதலா
என்று ஏற்பாயா
மனது ஆடுகிறது
ஆடு புலி ஆட்டம்
இப்படியே
தொடர்கையில்
இன்றும் வந்து
இறங்குகிறாய்
நீ
என் ராஜ பார்வை
உன் மீது
எனை நோக்கி
வருகிறாய்
மனதுக்குள்
டிக் டிக் டிக்
எனை
நெருங்குகிறாய்
எல்லாம் இன்ப மயம்
ஆனது எனக்கு
உன் கரங்களால் நீட்டுகிறாய்
பெற்றோர் நிச்சயித்த
திருமண அழைப்பிதழ்
பெற்றோர் நிச்சயித்த
பையனோடு
திருமணம்
வர வேண்டும் என்று
என் காதல் அலை வரிசைக்கு
அந்த ஒரு நிமிடம்
அதற்கு துணை நின்று
என்று உளமார
இதையே
வார்த்தைகளில் வைத்தாய் கண்டிப்பை
என் காதல் அலை வரிசைக்கு
கொடுத்தாய் துண்டிப்பை
அந்த ஒரு நிமிடம்
என் இதயம் எரிமலையாய்
வெடித்தது
அதற்கு துணை நின்று
என் கண்கள்
கண்ணீரை வடித்ததுநான்
உயர்ந்த உள்ளத்தோடு
என் சந்தோசங்கள் அனைத்தும்உனக்கே வாய்க்கட்டும்
என்று உளமார
வாழ்த்திட்டேன்
இதையே
என் காதல் பரிசாக
அளித்திட்டேன்
ஆர். வி .சரவணன்
லேபிள்கள்:
சரவணன் பக்கங்கள்
திங்கள், ஆகஸ்ட் 08, 2011
(கல்யாணம் பண்ணிய) பேச்சிலர் வாழ்க்கையில் ....

(கல்யாணம் பண்ணிய) பேச்சிலர் வாழ்க்கையில் ....
ஏனெனில் இது எனது அனுபவம் மட்டுமே
* நைட் ரொம்ப நேரம் டிவி பார்த்துட்டு காலையில் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் தூங்கிட்டிருக்கலாம். யாரும் எழுந்திரு என்று நம்மை டிஸ்டர்ப் பண்ண மாட்டார்கள்
(என்ன அப்படியே தொடர்ந்து நேரம் தெரியாமல் தூங்கிடோம்னா அன்னிக்கு வேலைக்கு விடுமுறை தான் எடுக்க வேண்டியிருக்கும் )
*துவைக்க வேண்டிய துணிகளை எப்ப வேணும்னாலும் எவ்வளவு வேணும்னாலும் சேர்த்து வைச்சுகிட்டு எப்ப முடியுதோ அப்ப துவைக்கலாம்
(என்ன தொடந்து துவைக்காமல் விட்டுட்டால் அலுவலகம் கிளம்பும் போது போட்டுக்க டிரஸ் இல்லாமல் முழி பிதுங்கி நிக்க வேண்டியிருக்கும் )
*சாப்பாடு விசயத்தில் அன் லிமிடெட் தான் அதாவது எது பிடிக்குதோ எப்படி பிடிக்குதோ எப்ப பிடிக்குதோ நம்ம டேஸ்டுக்கு தகுந்தார் போல் சமைச்சு சாப்பிடலாம்
(ஆனா என்ன பிரச்சினைனா சமைக்கும் போது அளவு தெரியாமல் போட்டு சமைச்சு சாப்பிட முடியாமல் ஆகிடும். கூடவே பத்து பாத்திரங்கள் வேறு மலை போல் குவிந்து போய் நம்மை மிரட்டும் வாய்ப்பும் இருக்கு )
*நைட் சுத்திட்டு எவ்வளவு நேரம் கழித்தும் வீடு திரும்பலாம்
*டிவி சானெல் இஷ்டத்திற்கு மாத்தி மாத்தி பார்க்கலாம்
(காமெடி பார்த்து ரசிச்சு ஓவரா சிரிச்சோம் னா தனியா சிரிக்கிறானே என்னாச்சு இவனுக்கு என்று அக்கம் பக்கத்திலே நினைக்கலாம் )
இது போல் ஏகப்பட்ட சவுகரியங்கள் இதில் இருந்தாலும் மனைவி குழந்தைகள் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கைக்கு முன் இதெல்லாம் ஈடாகுமா
ஆர்.வி.சரவணன்
லேபிள்கள்:
சிரிப்பு
வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011
சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே

சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே
என்னது உங்கள் வீட்டு பெட்ரூம் ஆபீஸ் ரூம் போல் உள்ளதே
அதுவா ஆபீஸ் ரூம் போல் இருந்தால் தான் என் கணவருக்கு தூக்கமே வருதாம் அதான்
*****
என்ன இருந்தாலும் உங்க ஆபீஸ் லே இப்படியா போர்டு மாட்டி வைப்பீங்க
எதை சொல்றீங்க
தூங்கும் போது எல்லோரும் தூங்காமல் ஒவ்வொருவராக தூங்கவும் னு எழுதி வச்சிருக்கீங்க லே அதை சொன்னேன்
*****
தூக்கத்திலே நடக்கிற வியதியாலே பெரிய தொல்லையா இருக்கு
என்னாச்சு
தூங்கிகிட்டு இருக்கிறப்ப நான் பாட்டுக்கு பக்கத்து ஆபீஸ் போய் தூங்க ஆரம்பிச்சுடுறேன்
*****
அன்னிக்கு முதலாளி வரப்ப ஆபீஸ் லே நாங்க எல்லோரும் தூங்கிக்கிட்டுருந்தோம்
அப்புறம் என்னாச்சு
எல்லோரையும் எழுப்பி வேலை பார்க்க சொல்லிட்டு அவர் தூங்கிட்டாரு
******
ஆபீஸ் லே தினம் தூங்குற எல்லாரும் இன்னிக்கு தூங்காம வேலை பார்க்கிறாங்கலே எப்படி
இன்னிக்கு புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்திருக்கு அதான்
தளம் ஆரம்பித்த புதிதில் நான் வெளியிட்ட இடுகை இது
ஆர் . வி .சரவணன்
லேபிள்கள்:
சரவணன் பக்கங்கள்
செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011
முத்தான மூன்று தொடர் பதிவு

முத்தான மூன்று தொடர் பதிவு
நண்பர் பாலாவின் பக்கங்கள் பாலாஅவர்கள் என்னை மூன்று பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார் அவருக்கு என் நன்றி கொஞ்சம் தாமதமாகி விட்டது
தொடர் பதிவு என்பது என்னை பொறுத்த வரை ஒரு நல்ல கான்செப்ட். ஏனெனில் இதன் மூலம் இணைய தள நண்பர்களுக்குள் கருத்து பரிமாற்றங்களும் அவர்களின் எண்ணங்களின் பகிர்வும் படிக்க சுவாரஸ்யமான ஒன்று
இதோ என் தொடர் பதிவு
விரும்பும் மூன்று
சினிமா
இசை
புத்தகம்
விரும்பாத மூன்று
பொய்
நம்பிக்கை துரோகம்
ஏமாற்றுதல்
மதிப்பிற்குரிய மூன்று மனிதர்கள்
மகாத்மா காந்தி
அன்னை தெரசா
தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய ராஜ ராஜ சோழன்
மூன்று திரைப்படங்கள்
பாட்ஷா
முதல் மரியாதை
மௌன ராகம்
மூன்று உணவு
ஐஸ் கிரீம்
பழங்கள்
என்னிடம் எனக்கு பிடித்த மூன்று
நம்பியவர் மட்டுமல்லாமல் என்னை நம்பாதவர்க்கும் உண்மையாய் இருப்பது
நல்லது கெட்டது எதுவாயிருந்தாலும் உடனே மனதில் பட்டதை சொல்லி விடுவது
ஒரு வேலை செய்து முடிக்கும் வரை தொடர்ந்து போராடி ஜெயிக்கும் குணம்
பிடிக்காத மூன்று
அசாத்திய கோபம் அதன் விளைவால் என்னிடம் வெளிப்படும் வார்த்தைகள்
கஷ்டம் வரும் போது சோர்ந்து வாழ்க்கையே வெறுத்து போய் விடும் தன்மை
செண்டிமெண்ட் பார்ப்பது
வாழ்க்கை முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று
இறைவனுக்கு ஆலயம் கட்ட வேண்டும்
உலகின் அற்புத சுற்றுலா தலங்களில் சிலவற்றை என் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் கண்டு வர வேண்டும்
ஏக்கமான மூன்று
கல்லூரி காலம் வரையில் அன்பிக்காக ஏங்கி தவித்தது
எனக்கு தேவையான ஊக்கம் தந்திருந்தால் நான் இன்னும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பேனே என்று நினைப்பது
சாதனையாளர்களை பார்க்கும் போது நாம் எப்போது இப்படியெல்லாம் சாதனை செய்வோம் என்று நினைப்பது
கற்று கொள்ள விரும்பும் மூன்று
பாட கற்று கொள்ள வேண்டும் (மேடையில் பாட தீராத ஆசை)
ஆங்கிலம் தெளிவாக பேச எழுத கற்க வேண்டும் (என் அன்றாட வாழ்வில் நான் படும் கஷ்டம் இது )
குறும் படம் எடுக்க (இயக்குனர் ஆசையை இப்படியாவது நிறைவேற்றி கொள்ளலாம் )
பிடித்த நடிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
பாக்யராஜ்
ஜாக்கிசான்
பயப்படும் மூன்று
கடவுள் 100 %
பழி பாவத்திற்கு அஞ்சுவது
எந்த நேரத்தில் எந்த கஷ்டம் வந்து நிம்மதியை குலைக்குமோ என்ற டென்ஷன்
புரியாத மூன்று
வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகள்
பணக்காரர் ஏழை என்ற பேதங்கள்
தோல்வியில் துவண்டவரை கை தூக்கி விட முயலாமல் வெற்றி கண்டவரை நோக்கி கை குலுக்க முண்டியடிக்கும் உலகம்
பிடித்த உறவுகள்
அம்மா
மனைவி
குழந்தைகள்
இனிமையான மூன்று
மனதை வருடும் இசை
உறவுகளுடன் பேசி மகிழும் தருணங்கள்
அமைதியான நல்ல தூக்கம்
முணுமுணுக்கும் பாடல்கள்
ஜனனி ஜனனி
பூங்காற்று திரும்புமா
இந்த மான் உந்தன் சொந்த மான்
பிடித்த எழுத்தாளர்கள்
கல்கி
சாண்டில்யன்
சுஜாதா
பிடித்த ஊர்கள்
நான் பிறந்த குடந்தை
எனது அலுவலக பணியை வெற்றிகரமாய் செய்து முடித்த டில்லி
எப்போது சென்றாலும் எனை கவரும் திருச்சி
கேட்க விரும்பாத மூன்று
அதட்டி அதிகாரமாய் பேசுதல்
பிச்சை கேட்கும் குரல்
புறம் பேசுதல்
பெருமைப்படும் மூன்று
மிகுந்த கஷ்டப்பட்டு போராடி கொஞ்சமே ஆனாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பது
குடந்தையூர் தளம் தொடங்கி அதன் மூலம் என்னை வெளிப்படுத்தி கொண்டு எண்ணற்ற நண்பர்களையும் பெற்றிருப்பது
இந்தியனாய் பிறந்ததற்கு
இந்த தொடர் பதிவை தொடர விரும்புபவர்கள் தொடரலாம்
ஆர்.வி.சரவணன்
லேபிள்கள்:
சரவணன் பக்கங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)