புதன், மே 04, 2011

உனை காக்க என் உயிர்.....


உனை காக்க என் உயிர்.....


பருவச் சோலையில் பூக்கள் ஏராளம்

மலரினும் மெல்லிய பெண்ணே உன் அழகு தாராளம்


தென்றலின் தொடுகையில் குயில்கள் இசை பாடுகையில்

பிரம்மன் எனும் கதிரவன் கரம் படுகையில் மலர்ந்தவளே


உன்னை சூறையாட தேன் அருந்த ஆடவர் கூட்டம் ஒன்று

வண்டுகளாய்உனை முற்றுகையிட்டது


சுற்றி சுற்றி வந்து நாள் பார்த்தது

அதிலே நானும் ஒருவன்


உனை அடைய எண்ணமில்லை

காக்க எண்ணமுண்டு


உன் அருகில் ஆயுதமாய் இருந்திட்ட

முள் பட்டு எனை வருத்திட்டேன்



என் உயிரை மாய்த்தேன்

தீயவர் தம் ஆசையை தகர்த்தேன்



ஆடவர் என் நிலை கண்டனர்

உனை விட்டு அகன்றனர்



நீ நினைத்திருப்பாய்

உனை அடைய வந்தவன் நான் என்று

நீ நினைப்பாயா

உனை காக்க என் உயிர் போக்கியதை அறிவாயா

நான் வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் எழுதிய கவிதை இது நீங்கள் யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை எனவே தான் மீண்டும் வெளியிட்டிருக்கிறேன்

ஆர்.வி.சரவணன்


ஒரு நிமிஷம்

******
கோ படம் பார்த்தேன் கடைசி வரை ஜீவா அலட்டாமல் அழகாய் நடித்திருக்கிறார் .கலகலப்பாய் வந்து கடைசியில் கதைக்கும் கேரக்டருக்கும் கனம் சேர்க்கிறார் பியா,கார்த்திகா பரவாயில்லை என்றாலும் நடிப்பு பரவாயில்லை என்று சொல்ல முடியவில்லை வேகமான திரைக்கதையின் மூலம் நமை ஈர்க்கிறார்கள் சுபா, கே .வி .ஆனந்த் என்னமோ ஏதோ பாடல் நமக்குள்ளே என்னமோ செய்கிறது .அமளி துமளி பாடல் காட்சியில் வரும் இடங்கள் அனைத்தும் அழகு டைட்டில் வரும்போது வரும் ஸ்டில்கள் இன்னும் கொஞ்சம் பார்க்கலாமே என்று ஆர்வத்தைஏற்படுத்துகிறது ஓகோ தான்
******


10 கருத்துகள்:

  1. கவிதையும் கருத்துக்கணிப்பும் நல்லாயிருக்கு!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்

    பதிலளிநீக்கு
  3. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_05.html

    பதிலளிநீக்கு
  4. ரியலி தான் பாஸ்
    ஜீவா கலக்கிட்டாரு
    அந்த ராதா பொண்ணும் அழகா இருக்கு பாஸ் lol

    பதிலளிநீக்கு
  5. கவிதை கலங்கடிக்கிறது ...
    நெஞ்சமெனும் புல்லாங்குழலில்
    இசைத்தவைகளை வரிகளாய்
    கொடுத்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ....

    பதிலளிநீக்கு
  6. கோ பற்றிய சிறிய விமர்சனமும் அற்புதம் ..
    நச் .. மொத்தத்தில் பல ரசனை நிரம்பிய பதிவு ,.

    பதிலளிநீக்கு
  7. க‌விதை ந‌ல்ல‌யிருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.. கோவின் விம‌ர்ச‌ன‌மும் ஓகோ.. :)

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் . கவிதை ரொம்ப நல்லா இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வருகைக்கும் என்னை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கும் நன்றி தங்கமணி
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துஷ்யந்தன்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவி
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டீபன்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்