நாடு நலம் நாடு
" நம்ம நாட்டை பற்றியும் கஷ்டப்படுற மக்கள் மேலேயும் கொஞ்சம் கூட அக்கறையே இந்த அரசியல்வாதிகளுக்கு கிடையாது " என்றான் சேகர்
"அப்பா வெளியிலே கட்சிகாரங்க கொடுத்தாங்க " என்று அவனது மகன் கார்த்திக் ஒரு தேர்தல் நோட்டீஸ் கொண்டு வந்து கொடுத்தான் அதை வாங்கி படித்த சேகர் தான் மேற்கண்டவாறு சொன்னான்
ஏம்பா திட்டறீங்க
உன்னை திட்டலை டா செல்லம் இந்த கட்சிகாரங்களை திட்டினேன்
அவனது மகன் "அப்பா அவங்க எவ்வளவு மரியாதையா கையெடுத்து கும்பிட்டுட்டு கொடுத்துட்டு போனாங்க தெரியுமா " நீங்க திட்டறீங்களே "
"இதெல்லாம் தேர்தல் வரைக்கும் தான் கண்ணா பதவிக்கு வந்தவுடன் மாறி விடுவாங்க"
அவனது மனைவி கீதா "ஏங்க அஞ்சாவது படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் புரியுமா ஏன் இதெல்லாம் சொல்லி குழப்பறீங்க" என்றாள்
"இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிறதிலே தப்பில்லையே அவன் தெரிஞ்சுக்கட்டும் "
அப்பொழுது செல் போன் ஒலிக்க எடுத்து பேசிய சேகர் "பில் வாங்காதே வேண்டாம்" என்று சொல்லி போனை வைத்தான்
அவன் மனைவி "என்னங்க" என்றாள்
"நம்ம டிரைவர் தான் போன் பண்ணான் நாம வாங்க சொன்னதெல்லாம் வாங்கிட்டானாம் பில் போட்டா டாக்ஸ் ஆகுமாம் பரவாயில்லையா னு கேட்டான் வேண்டாம் னு சொல்லிட்டேன் அவ்வளவு டாக்ஸ் யார் கட்டறது"
இதற்கும் அவன் மகன் "ஏம்பா கட்டினா என்ன "என்றான்
"அவ்வளவு பணம் செலவு பண்ணி பொருள் வாங்கறதே பெரிசு இதிலே டாக்ஸ் கட்டனுமா "
" அம்மா டாக்ஸ் பணம் யாருக்கு போகும் "
"அரசாங்கத்திற்கு "
"அரசாங்கம் அந்த டாக்ஸ் பணம் எல்லாம் வாங்கி என்னம்மா பண்ணுவாங்க" நாட்டுக்குசெலவு பண்ணுவாங்க . மருத்துவமனை, ஸ்கூல் சாலை வசதி , ஆதரவற்றவர்கள் ,ஏழைகள் இதுக்கெல்லாம் செலவு பண்ணுவாங்க "என்று சொன்னாள் அவன் மனைவி
"அப்படினா நல்ல விஷயம் தானேப்பா நீங்க ஏன் டாக்ஸ் கட்ட மாட்டீங்கறீங்க "
அதற்கு அவன் மனைவி "நல்லா மாட்னீங்களா இதற்கு பதில் சொல்லுங்க " என்றாள்
சேகர் "நம்ம காசு போயிடுமே" என்றான்
"அரசாங்கத்திற்கு காசு வராம போயிடுமே "
இதற்கு இருவரும் தங்கள் மகனின் பேச்சில் மெய் மறந்தனர் கூடவே அடுத்து அவர்கள் மகன் சொன்ன சொல் கேட்டு நிலை குலைந்தனர்
"அப்பா நீங்க மட்டும் கட்சிகாரங்களை திட்டறீங்க , ஆனா நீங்க மட்டும் என்னவாம் நீங்களும் அப்படிதான் இருக்கீங்க என்றவன் மேலும் தொடர்ந்து நம்ம நாட்டை பற்றியும் கஷ்டப்படுற மக்கள் மேலேயும் கொஞ்சம் கூட அக்கறையே கிடையாது உங்களுக்கு என்றான் அந்த சிறுவன்
ஆர்.வி.சரவணன்
//நம்ம நாட்டை பற்றியும் கஷ்டப்படுற மக்கள் மேலேயும் கொஞ்சம் கூட அக்கறையே கிடையாது உங்களுக்கு என்றான் அந்த சிறுவன் //
பதிலளிநீக்குநல்ல அறிவுரை சரவணன்..
இதே கேள்வியை வெகு நாட்களுக்கு முன் அப்துல்கலாம் கேட்டார்.
பதிலளிநீக்குசரிதான்! நம்ம மேலேயே இவ்வளவு அழுக்கு வச்சிக்கிட்டு மத்தவங்கள குறை சொல்றது தப்புங்கிறீங்க!
பதிலளிநீக்குsuper sir...
பதிலளிநீக்குunmaithaan indraiya nilavaram appadithaan irukku ...
thavarugalai aduthavarin mel thinikka muyarchikkum indha samooga makkal nam thavarai unara marukkindranar...
பதிலளிநீக்குnalla seidhi ...
thanks steban
பதிலளிநீக்குthanks bala
thanks thendral saravanan
thanks vanadhy
thanks arasan