ஞாயிறு, மார்ச் 27, 2011

வலங்கைமான் பாடைகாவடி திருவிழா

வலங்கைமான் பாடைகாவடி திருவிழா


கும்பகோணம் அருகே பத்து கிலோமீட்டரில் மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது வலங்கைமான் என்ற ஊர் .

இந்த ஊரில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

மிகுந்த புகழ் வாய்ந்த ஸ்தலம் இது. பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று பாடை காவடி திருவிழா இங்கு புகழ் வாய்ந்த ஒன்றாகும்.

இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் உடல் நலம் சரியில்லாதவர்கள்அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் பாடை காவடி எடுத்து ஈமக்ரியை செய்வது போல் உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். மிக பிரசித்தி பெற்ற இத் திருவிழாவை காணும் வாய்ப்பு எங்கள் குடும்பதிற்கு கிடைத்தது.


திருவிழாவில் முதல் நாள் மாலையிலிருந்து மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்திருந்தனர் இரவு முழுக்க சாலையோரம் முழுதும் இரு புறமும் கடை வீதிகள் அமைத்து எங்கும் மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது .ஞாயிறு அன்று அவ்வளவு வெயிலிலும் மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது பக்தி பரவசமாய் இருந்தது.


நாங்கள் கோவில் சென்றிருந்த போது ஒலிபெருக்கியில் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் என்ற பாடல் வரிகள் கேட்டேன் அதையே நாமும் வேண்டுவோம் நான் எடுத்த சில படங்களை இங்கு தந்திருக்கிறேன் இரவு இரண்டு மணி கோவில் சன்னிதானம் முன் பக்தர் வெள்ளம்
தொடர்ந்து வரும் பாடை காவடி



பாடை காவடி எடுத்து வரும் பக்தர்கள்


வலங்கைமான் மகா மாரியம்மனின் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்


ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

  1. r.v.saravanan ,
    ரொம்ப நன்றி(வலங்கைமான் மகா மாரியம்மனின் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்)தங்களின் அன்பான வேண்டுதலுக்கு!

    பதிலளிநீக்கு
  2. புது தகவலுடன் படங்களும் அருமை.. நன்றிங்க :)

    பதிலளிநீக்கு
  3. படங்களுடன் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி... நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  4. சில அறிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க சார் ... படித்து முடித்ததும் வியந்து போனேன் ...
    அது போல் படங்களும் தூள் ....
    ரொம்ப நல்ல பதிவு ...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்