ஞாயிறு, மார்ச் 21, 2010

அவருக்கு முன்னால் எல்லோரும் ஒன்று தான் நான் புரிந்து கொண்டது அன்று தான்



அவருக்கு முன்னால் எல்லோரும் ஒன்று தான்


நான் புரிந்து கொண்டது அன்று தான் (கடவுள் தரிசனம் )



சில மாதங்களுக்கு முன் நானும் என் நண்பனும் திருப்பதி சென்றிருந்தோம்

அங்கே சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்று உள் பிரகாரத்தை அணுகிய போது ஆந்திர மாநில அமைச்சர் தன் குடும்பத்துடன் தரிசனத்திற்கு வந்தவுடன் உடனே வரிசையை நிறுத்தி விட்டனர்

அப்போது நான் என் மனதிற்குள் பெருமாளே உன்னிடத்தில் நாங்கள் எல்லோரும் சமம் அப்படியிருக்கும் போது ஏன் இந்த பாரபட்சம் எங்களை போன்ற சாதாரண பக்தர்களுக்கு இது போன்ற தரிசனம் கிடைக்காதா என்று ஆதங்கப்பட்டேன்.

அப்பொழுது தீடிரென்று தடுப்பு நீக்கி ஒரு முப்பது பேர் இருப்போம். எங்களை மட்டும் அனுமதித்து மீண்டும் வரிசையை நிறுத்தி விட்டனர்.

எங்களை மட்டும் சாமியின் சந்நிதானத்தில் நிறுத்தி வைத்தனர் ஒரு 5 நிமிடங்கள் வரை நாங்கள் சந்நிதானத்திலேயே இருக்கும் படி நேரிட்டது(காரணம் அமைச்சர் உள் பிரகாரத்தை வலம் வருவதால்).

என் வாழ்நாளில் நெரிசல் இல்லாமல் 5 நிமிடங்கள் நின்று நான் சாமி கும்பிட்டது அன்று தான்.


நான் ஆதங்கப்பட்ட 15 நிமிடத்திற்குள் நான் நினைத்ததை நிறைவேற்றி, எல்லோரும் எனக்கு ஒன்று தான் நீ நினைத்தது தான் தவறு என்று சொல்லி வெங்கடாஜலபதி என்னை பார்த்து சிரிப்பதாகவே எனக்கு பட்டது




மெய் சிலிர்த்தேன் பரவசமானேன்

என் உதடுகள் தானாகவே உச்சரித்தது







ஓம் நமோ நாராயணா ........



4 கருத்துகள்:

  1. குறை நினைக்கவேண்டாம், சில காரணங்களுக்காக என்னால் உடனடியாக வர முடியவில்லை, உங்கள் தளத்தின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள் , உங்களிடமிருந்து நிறைய கலக்கல் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கடவுளை தேடி நாம் எங்கும் போகவேண்டியதில்லை நம் வீட்டிலேயே உள்ள பூஜை அறையில் வணங்கினாலே போதும் .. நாம் தான் இவ்வாறு சென்று தேடிக்கொண்டு இருக்கிறோம். நானும் இதைப்போல செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்..அவ்வளவு எளிதாக முடிவதில்லை :-)

    பதிலளிநீக்கு
  3. thirupathi varai poitu dharsan paakama naan vantha anaiku ninachen avar anumathi illama ena than kaasu panam irunthalum ,kaathu kidanthalum dharsan kidaikaathunu ,

    i realised that he is almighty but in te other way

    பதிலளிநீக்கு
  4. Hello sir,

    Really ur story about the bike is very nice. i like it. and all ur writings r good.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்