முக நூல் கிறுக்கல்கள்
(முக நூலில் படிக்காதவர்களுக்காக தொகுக்கப்பட்டது இந்த பதிவு)
லிப்ட், என்னடா நாம கீழேயே இருக்கோமே னு வெக்ஸ் ஆகிட கூடாது. அதனோட பட்டனை தட்டி மேலே ஏற்றி விட யாராவது வருவாங்க. (மேல இருக்கோம்னு மிதப்புலயும் இருக்க கூடாது. கீழே இறக்கி விடவும் யாராவது வருவாங்க)
லிப்ட் க்காக வெயிட் பண்ணும் போது தோன்றிய சிந்தனை
----------
பேக்கரி கடையில் ப்ரெட் வாங்கினேன். கவர் கொடுக்கவில்லை. கேட்டதுக்கு "பிளாஸ்டிக் கவர் கொடுக்க கூடாது னு அரசாங்கம் ஆர்டர் போட்டிருக்கு" என்றனர். ஆனால் கடையில் கவர் வைத்திருந்தார்கள். எனக்கு கவர் தேவைப்படவில்லை இருந்தும் கடையில் கவர் இருந்தது . கவர் வச்சிருக்கீங்களே என்று கேட்டதற்கு "அது நிறைய பர்சேஸ் பண்ணினால் கொடுக்கிறதுக்கு" என்றான் கடை பையன். "அதை சொல்லாம அரசாங்கம் ஆர்டர் போட்டிருக்குன்னு ஏன் பொய் சொல்றே" என்றேன். அவன் பதில் சொல்லவில்லை
எந்த சட்டமானாலும் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் பாருங்கள்
----------
ஒரு பாடத்தில் சென்டம் எடுத்திருந்த மாணவிக்கு, அந்த பெண்ணின் போட்டோ, பெற்றோர் பெயர் எல்லாம் போட்டு வாழ்த்துக்கள் சொல்லியிருந்த பேனர் ஒன்றை நடந்து வரும் வழியில் பார்க்க நேர்ந்தது. பள்ளியின் விளம்பரம் அல்ல அது என்பது பார்த்த நொடியிலே தெரிந்து போயிற்று. தெருவாசிகள் தான் வாழ்த்தி இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பேனரை ஆர்வமாய் கவனித்தேன். சாதி பெயரை குறிப்பிட்டு அதன் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பேனர் அது என்று தெரிந்த போது, முன்னோக்கி வந்த என் உற்சாக அலை பின்னோக்கி சென்று விட்டது.
----------
நான் உபயோகிக்கும் இன்டர்நெட் டேட்டா கார்டு நிறுவனத்தின் சேவை மையத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. "சார் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆபர். 650 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணீங்கன்னா இரவு 1 மணியிலிருந்து காலை 5 மணி வரைக்கும் அன் லிமிடெட் நெட் use பண்ணலாம் ரெண்டு நாளுக்குள் நீங்க ரீசார்ஜ் பண்ணியாகனும்" னு சொன்னாங்க. அதாவது அவசரபடுத்தினாங்க நான் " போன வாரம் தான் 450 ரூபாய்க்கு ஒரு மாசத்துக்கான ரீசார்ஜ் பண்ணினேன். அதை என்ன பண்றது" னு கேட்டேன். பதில் ஒன்னும் சொல்லாம போனை வச்சிட்டாங்க.அவங்களுக்கு பதிலடி கொடுக்கணும்னு இதை நான் கேட்கலை. நான் உண்மையாகவே சமீபத்தில் தான் ரீசார்ஜ் பண்ணியிருந்தேன்.
----------
கை நிறைய கட்டணம் அள்ளி கொடுத்தாலும், பள்ளியில் கொடுப்பதென்னவோ ரசீது துண்டு சீட்டில் தான். (அதுல ஸ்கூல் பெயரும் இருக்கிறதில்ல) எதிர்த்து கேட்கலாம் னு வேகம் வந்தாலும் நம் உணர்வின் நிலை, பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்த பின் சம்பந்தி வீட்டாரின் அடாவடியை எதிர்த்து கேள்வி கேட்டால் பொண்ணு அங்கே கஷ்டபட்டுடுமோ என்ற பயத்தில் மௌனமாய் இருந்து விடும் பெண்ணை பெற்றவர்களின் நிலைக்கு நிகராக இருக்கிறது.
----------
கும்பகோணத்தில் இருந்து சென்னை வர நான் பேருந்து நிலையம் சென்ற போது அன்று கூட்டமில்லை. வாங்க வாங்க என்று அழைத்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு பேருந்தின் அருகே சென்ற போது சீட் இருக்கு வாங்க சார் என்று அழைத்த கண்டக்டர், நான் உள்ளே ஏறியவுடன் சீட் நம்பர் 30 க்கு அப்புறம் உட்கார்ந்துக்குங்க என்றார். வேண்டாம் என்ற படி நான் இறங்க முயல, அவர் "நீங்க இதை யோசித்தால் எந்த வண்டியிலயுமே போக முடியாது" என்றார். நான் உடனே கூலாக "அது என் பிரச்னை நீங்க ஏன் கவலைபடறீங்க" என்றவாறு இறங்கினேன். "இதுவே கூட்டம் நிறைய இருந்து கடைசி சீட் தான் இருக்கு அதுவும் இந்த பேருந்தில் மட்டும் தான் இருக்குனு சொன்னால் உட்கார்ந்து போக மாட்டியா நீ" என்று கேட்டது கண்டக்டர் இல்லீங்க என் மைண்ட் வாய்ஸ் (மனித சுபாவம் இது தானே)
----------
என் நண்பர் ஒருவர் டீசர் னா என்ன. ட்ரைலர் னா என்ன ? என்று என்னிடம் கேட்டார். "ஹோட்டலுக்கு சாப்பிட போறீங்க. அந்த ஹோட்டல் ல என்ன ஸ்பெசல்னு ஒரு மெனு கார்டு கொடுப்பாங்க அது டீசர். மெனுல இருக்கிறதை கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாருங்க னு கொடுத்தால் அது ட்ரைலர்". நான் இவ்வாறு பதில் கொடுத்தேன். (கூடவே நான் சரியா தான் பேசறேனா என்று அவரை கேட்கவில்லை. உங்களை கேட்கிறேன்)
----------
வாடகை வீட்டில் தண்ணீர் வரல மோட்டர் ஆன் பண்ணுங்க னு நாம கேட்கறப்ப காலையில தானே புல் டேன்க் நிரப்பினேன் னு வீட்டு சொந்தக்காரர் சந்தேகமா மோட்டார் ஆன் செய்யும் போது தான், நாம் தண்ணீர் உபயோகபடுத்தவில்லை
என்பதை எப்படி நிரூபிப்பது எனற குழப்பத்தில் சொந்த வீட்டுக்கு அஸ்திவாரமிடும் எண்ணம் இன்னும் வலுப் பெறுகிறது.
----------
"முக நூல் இணையம் மூலமா நீ சாதிச்சது என்ன" னு என்னை ஒருத்தர் கேட்டார்.
அவரிடம் நான் பதில் சொல்லுமுன்பே அவர் "உன்னை எழுத ஊக்கப்படுத்தறாங்கனு சொல்வே" அதானே என்றார் நக்கலாய். நான் புன்னகைத்த படி பதில் கொடுத்தேன்.
பள்ளி,கல்லூரி,அலுவலகம் என்று மட்டுமே இருந்த என் நட்பு வட்டம் விரிவடைந்தது இதனால் தான்.இப்ப தமிழகத்தில் பல ஊர்களில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். என்பதில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா என்றேன் பெருமையாய்.
நீண்ட நாள் உறவிது. இன்று போல் என்றுமே தொடர்வது....
----------
வாழ்க்கையில் வர்ற கஷ்டங்களெல்லாம் நாம ரோட்டில் டூவீலர்ல போறப்ப எதிரில் வரும் லாரிகள் போல தான்.அவைகள் கடந்து போகும் அந்த நொடியே நம் கவனத்திலேருந்தும் விலகி போயிடறது. ஆகவே கஷ்டங்களை பின் தள்ளி முயற்சிகளை முன்னெடுப்போம்.
FINAL TOUCH
கர்வம் கூடாது தான்.இருந்தும்
கர்வம் கொண்டிருக்கிறேன்
நான் இந்தியன் என்பதில்.
ஜெய்ஹிந்த்
ஆர்.வி.சரவணன்
பள்ளிக் கட்டணம் டிரைலர்-டீசர் , பேனர் உள்ளிட்ட அனைத்தும் வேறு கிறுக்கல்கள் அல்ல "நறுக்"கல்கள்
பதிலளிநீக்குநன்றி முரளிதரன் சார்
நீக்குவலையில் தங்களைச் சந்தித்து வெகுநாட்களாகிவிட்டது நண்பரே
பதிலளிநீக்குமன்னியுங்கள் சார் கொஞ்சம் அலுவலக வேலை மற்றும் கதை எழுதும் வேலை இவற்றால் தான். விரைவில் வருகிறேன்
நீக்குதொகுப்பு அருமை அண்ணா...
பதிலளிநீக்குடீசர், ட்ரெய்லர் உங்கள் விளக்கம் சரியே! டீசர் - ஷார்ட்....புது ட்ரெண்ட்....ட்ரெய்லர்.....நீளமான அட்...பழைய முறை....டீசர் 30 செகன்ட்ஸ் - 1 நிமிடம் வரை..இருக்கலாம். ட்ரெய்லர்....2-3 நிமிஷம் வரை....டீசர் படத்திலிருந்து சிறிதளவே கதை தெரியாத அளவு..கிளிப்ஸ்......ட்ரெய்லர்.....கிட்டத்தட்ட கதை புரியும் அளவு கிளிப்ஸ்....அதனால் இப்பொதெல்லாம் டீசர்தான் பிரபலம்....
பதிலளிநீக்குதங்கள் விளக்கம் சரியே அருமையும் கூட....
கண்டிப்பாக முகனூல்,வலைத்தளம் , இணையம் மூலமாக நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். இப்போது உதாரணமாக...உங்கல் எல்லோரையும் எடுத்துக் கொள்ளலம்...எங்களுக்கு கிடைத்த நீங்கள் எல்லோரும் இப்படித்தானே! ...உங்கள் பதில் மிகவும் சரியே!