இருமன அழைப்பிதழ்-2
கதாநாயகன் கிருஷ்ணா
கிருஷ்ணா வந்து கொண்டிருந்த அந்த பேருந்தில் மற்ற பயணிகள் தூங்கி கொண்டிருக்க அவன்
மட்டும் டிரைவருக்கு துணையாக போல் விழித்துகொண்டிருந்தான். அந்த இரவின் அமைதி
மட்டும் டிரைவருக்கு துணையாக போல் விழித்துகொண்டிருந்தான். அந்த இரவின் அமைதி
அவனுக்குள் இல்லை .காரணம் ராதாவின் கல்யாண விஷயம் கேள்விபட்டதிலிருந்து
அவன் மனம் தவித்து கொண்டிருந்தது.அதற்கு அடுத்து வந்த எந்த இரவும் அவனால் தூங்க
அவன் மனம் தவித்து கொண்டிருந்தது.அதற்கு அடுத்து வந்த எந்த இரவும் அவனால் தூங்க
முடியவில்லை . உமாவின் மேலுள்ள காதலை உள்ளுக்குள் வைத்து அல்லாடுவது
பச்சை மிளகாயை கண்ணில்வைத்து கொண்டது போல் இருந்தது.
இப்போது பார்த்து கொண்டிருக்கும் வேலை கிடைத்தது கூட ராதாவின் முயற்சியால்
தான் . அவள் தான் ஹிந்து பார்த்து அப்ளை பண்ண சொன்னாள்.வேலை கிடைத்தது.
நல்ல சம்பளத்தில்வேலையில் சேர்ந்தான். வேலை கிடைக்காமல் கஷ்டபட்டவனுக்கு
இந்த வேலை மிக பெரிய அந்தஸ்தை கொடுத்தது.அது சந்தோசத்தை தந்தாலும்
அவளை விட்டு பிரிந்து வந்தது தான் ரொம்ப கஷ்டமாக இருந்தது.
முதல் சம்பளம் வாங்கியவுடன் அவளுக்கு பிடித்தவற்றையும் வாங்கிகொண்டு
உடனே ஊருக்கு வந்தான். வீட்டில் உங்களை பார்க்க வேண்டும் போலிருந்தது என்று
பொய் சொன்னான். அவளிடம் உன்னை பார்க்க வேண்டும் போலிருக்கிறது
என்று மெய் சொன்னான்.
ஆறு மாதங்களில் மனதில் துளிர் விட்டது. நட்பா காதலா என்று அவன்
மனதுக்குள் நடந்த பட்டி மன்றத்தில்
காதல் அதிக மதிப்பெண் எடுத்து சுலபமாக வெற்றிபெற காதல் இப்போது விருட்சமாய்
ஆகியிருந்தது. காதலை உள்ளுர பதுக்கினான். தான் எழுதும்கவிதைகளில் அவளை மையமாக கொண்டே எழுதினான். அதை அவளிடம் படிக்ககொடுத்தான்.ராதா படித்து விட்டு நல்லாருக்கே யாரந்த அதிர்ஷ்டசாலி என்று மட்டுமே சொன்னாள்.தன்னை அதில் பொருத்தி பார்த்ததாக இவனுக்கு தோன்றவில்லை.எப்படி காதலை சொல்வது மேலும் அவர்கள் குடும்பத்தில்
அம்மா, அப்பா, அவள் அண்ணன் எல்லோரும் அவனை தங்கள் வீட்டுபிள்ளையை
போல் தலையில் துக்கி வைத்து கொண்டாடுவது அவனை காதலில் முன்னேற விடாமல் தடுத்தது
இந்த நிலையில் ராதாவுக்கு கல்யாணம் என்று அவள் அண்ணன் சொன்ன அடுத்த விநாடி ராதாவுக்கு பிடிச்சிருக்கா என்று தான் கேட்டான். அவள் சம்மதம் இல்லாமல்
எப்படி முடிவு செய்வோம் என்று அவள் அண்ணன் சொன்னதும் தான் அவளே சம்மதம்
சொல்லி விட்டாள் எனும் போது நம் காதலுக்கு கொடுப்பினை இல்லை அவளை
மனைவியாய் அடையும் அதிர்ஷ்டமில்லை என்ற உண்மை புரிய வெறுத்து போய் தன் போன்நம்பரை மாற்றினான்.அலுவலகத்தில்
வேறு ஒருவர் செல்ல வேண்டிய பஞ்சாப் வேலையை தான் செல்வதாக
கூறி அங்கு சென்று விட்டான். ராதாவின் அண்ணன் வட இந்தியாவில் இருந்த தன் நண்பனை இவனை பார்க்க அனுப்பியிருந்தான்.அவன்
வேறு ஒருவர் செல்ல வேண்டிய பஞ்சாப் வேலையை தான் செல்வதாக
கூறி அங்கு சென்று விட்டான். ராதாவின் அண்ணன் வட இந்தியாவில் இருந்த தன் நண்பனை இவனை பார்க்க அனுப்பியிருந்தான்.அவன்
கொண்டு வந்து கொடுத்த கல்யாண
பத்திரிகையுடன் நீ வரலை என்றால் இனி
என் முகத்தில் முழிக்காதே என்று லெட்டர் பார்த்து விட்டு இதோ கல்யாணத்திற்காக புறப்பட்டு
பத்திரிகையுடன் நீ வரலை என்றால் இனி
என் முகத்தில் முழிக்காதே என்று லெட்டர் பார்த்து விட்டு இதோ கல்யாணத்திற்காக புறப்பட்டு
வந்து கொண்டிருக்கிறான் .
கிருஷ்ணா பேருந்தை விட்டு இறங்கிய போது எதிரே ராதாவின் அண்ணன்
வண்டியுடன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் "ஏண்டா
கல்யாண வேலையை விட்டுட்டு வந்திருக்கே நான் வர மாட்டேனா "
என்றான்.
"இதுவும் ஒரு வேலை தான் உட்கார்" என்று சொல்லி வண்டியை
கிளப்பினான்.அவன்
கிளப்பினான்.அவன்
கல்யாண மண்டபம் வந்ததும் உள்ளே சென்று ராதாவின் அப்பாவை பார்த்த போது
அவர் வாடா செல்லம் என்று அழைத்து போய் தன் உறவினர்களிடம் எங்க வீட்டு பிள்ளை
மாதிரி என்றுஅறிமுகபடுத்தினார். ராதாவின் அம்மா கை பிடித்து
அழைத்து போய் ராதாவுக்கும்
மாப்பிளைக்கும் வாங்கிய நகைகள் புடவை பைக் என்று ஒவ்வொன்றையும் ஆர்வமுடன் காட்டினார். ராதாவை போய் பார் என்றும் அனுப்பி வைத்தாள்.
கார்த்திக் உச்சகட்ட தயக்கத்துடன் ராதாவின் அறைக்குள் நுழைந்தான்.
அங்கே அவள் ஜன்னலை பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தவள் இவனை
பார்த்தவுடன் திரும்பினாள்.
அங்கே அவள் ஜன்னலை பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தவள் இவனை
பார்த்தவுடன் திரும்பினாள்.
"நீ இன்னும் தூங்கலே " என்றான் கிருஷ்ணா
"கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலருந்து நான் தூங்கலே ஆனா உனக்கு நல்லா தூக்கம் வந்திருக்குமே" இது ராதா
"அப்படில்லாம் இல்லை " வேறு பக்கம் பார்த்த படி சொன்னான்
"பொய் சொல்லாதே உனக்கும் எனக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கு. ரெண்டு
பெரும் எந்த விசயத்தையும் மறைக்க கூடாதுனு. சோ பொய் சொல்லாம
சொல்லு . ஒருநாள் நான் உனக்கு போன்
பண்ணலேன்னா கலங்கி போற நீ ஏன் நம்பர் மாத்தி ஊருக்கு போனே
சொல்லு" என்னை பார்த்து பேசு
அதட்டினாள்
" நான் உன் கிட்டே மறைச்சது ஒன்னே ஒன்னு தான் அது நான் உன்னை
காதலிக்கிறது எப்படி உன்கிட்டே சொல்றது நீ தப்பா நினைச்சுட்டா என்ன பண்றதுனு தான் உன்கிட்டே சொல்லாமல்
காதலிக்கிறது எப்படி உன்கிட்டே சொல்றது நீ தப்பா நினைச்சுட்டா என்ன பண்றதுனு தான் உன்கிட்டே சொல்லாமல்
மறைச்சேன். .உனக்கு கல்யாணம் னு நியூஸ் வந்தவுடன் என்னாலே தாங்கிக்க முடியல அதான் வெறுத்து போய் உன்னிடம் பேசுவதை
தவிர்த்தேன் ."
தவிர்த்தேன் ."
என்று கிருஷ்ணா சொன்னவுடன் ராதா "லூசு லூசு" என்று சொல்லவும்
அவள் வேகத்தையும் அவள் கண்களில் தெரிந்த பிரகாசத்தையும் பார்த்து சற்றே மிரண்டான்.
அவள் வேகத்தையும் அவள் கண்களில் தெரிந்த பிரகாசத்தையும் பார்த்து சற்றே மிரண்டான்.
"இதை இப்ப வந்து சொல்றே நீ .இந்த வார்த்தை உன் கிட்டே இருந்து வராதான்னு ஒவ்வொரு வினாடியும் காத்துக்கிட்டிருக்கேன்" கன்னங்களில் வலிந்த கண்ணீரை துடைத்த படியே சொன்னாள்
கிருஷ்ணாவிற்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை .இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படியே உற்சாகத்தில் காதலை சொல்லாமல் இருந்ததற்காக தலையிலடித்து கொண்டார்கள்
"இப்ப என்ன செய்றது "
"உங்க அண்ணன் கிட்டே சொல்லி பார்க்கலாம் முடியாது னு சொன்னால்"
என்று இழுத்தான்
"நான் விட மாட்டேன் " என்றாள் ராதா அவளது தைரியம் தன்னிடம் இல்லையே என்று நினைத்த போது தான் ராதாவின் வீடு அவன் மேல் வைத்திருக்கும் மரியாதை தான் அவனை
தடுத்து கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. இதை எப்படி அகற்றுவது என்று தெரியாமல் விழித்தான்
அப்போது உள்ளே நுழைந்தான் ராதாவின் முறை பையன் சரண் .இவர்கள் இருவரையும் முறைத்த படி பார்த்தவனை கண்டு கொள்ளாமல் அவளிடம் எப்படியும் உன்னை கை பிடிச்சிடுவேன் என்று ஜாடை காட்டி விட்டு ஹாலுக்கு வந்தான். தன் காதல் வெற்றி பெற்றதற்கு சந்தோசப்பட நேரமில்லாமல் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்ற யோசனையில் நேரத்தை செலவிட்டான். மேடையில் ராதா பெயருக்கு பக்கத்தில் இருக்கும் மாப்பிள்ளையின்
பெயர் பார்த்த போது மனது வலித்தது
நாளை இந்த கதையை முடிக்க வருவது ராதாவின் முறை பையன் சரண்
(அதாவது நான்)
நன்றி திரு .ஓவியர் மாருதி அவர்கள்
ஆர்.வி.சரவணன்
அடடா... சொந்தக் கதையா...?
பதிலளிநீக்குசொந்த கதை அல்ல சார் சுவாரஸ்யமாக இருக்கட்டுமே என்று நான் இந்த கேரக்டரில் வருவது போல் கேரக்டரை அமைத்துள்ளேன். வேறு பெயர் செலக்ட் செய்ய நேரமின்மையால் சரண் என்று குறிப்பிட்டேன்
நீக்கு// ராதாவின் முறை பையன் சரண்// ஹீரோவா வில்லனான்னு பொறுத்திருந்து பார்க்கனுமா?
பதிலளிநீக்குஹீரோ தான் வந்தாச்சே அடுத்து வில்லன் தானே வர வேண்டும்
நீக்குசுவாரசியத்தை கூட்டி விட்டீர்களே? ..முடிவை சீக்கிரம் சொல்லுங்க...
பதிலளிநீக்குநன்றி. நாளை வரை காத்திருங்களேன்
நீக்குசரண் என்ன பண்ணப் போறார்னு பார்ப்போம்! சுவையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குமுடிவு என்னாவாக இருக்கும்? சுபமாகத்தான் இருக்கும்! இல்லையா நண்பரே?!! "3 வது வருது பொருத்திருங்க" அப்டின்றீங்களா! ஒகே! அதுவும் சரிதான்!
பதிலளிநீக்குரைடடு,
பதிலளிநீக்குமுடிவு தெரிந்து கொள்ள, அதாவது நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் எனத் தெரிந்து கொள்ள அடுத்த பகுதிக்கு வருகிறேன் இப்போதே! :)
பதிலளிநீக்கு3 வது முடிவானது சுபமானது அப்படித்தானே ?
பதிலளிநீக்கு