ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

பண்ணையாரும் பத்மினியும் (பயணித்த) நானும்




பண்ணையாரும் பத்மினியும் (பயணித்த) நானும்


காரை ஒரு உபயோக பொருளாக, இயந்திரமாக பார்க்கும் திசையிலிருந்து வேறுபட்டு அதை உயிருள்ள ஜீவனாக குடும்பத்தில் ஒரு பிள்ளையை போல் பார்க்கும் பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும் அந்த காரின் டிரைவருக்கும் (அவர்களுக்குள்ளும்) உள்ள பாசத்தை மையமாக கொண்ட கதை இல்லை இல்லை முழுக்கவே சொல்லும் கதை இது

நான் இதன் குறும்படத்தை இன்னும் பார்க்கவில்லை. இருந்தும் குறும்படமாக எடுக்கப்பட்டதை பெரிய படமாக எடுக்கும் போது காட்சிகள் சுவாரசியம் குறையாமல் கொடுக்க முடியுமா என்று என்னுள் எழுந்த வினாவுக்கு முடியும் என்ற பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண்குமார்  

இந்த படம் ஆரம்பிக்கும் போது அவ்வளவு ஏன், ஜெயப்ரகாஷ் தன் உறவினரிடம் காரை பற்றி பேசும் போது (அவருக்கு காரின் மீது பாசம் உண்டு என்பதை மேற்கோள் காட்டியிருக்கலாம்) என்ன இது காரை பற்றியே பேசுகிறார் என்று எரிச்சலாவார் அந்த உறவினர். அது போல் நானும் கொஞ்சம் எரிச்சலானேன். என்னடா இது தெரியாமல் வந்து உட்கார்ந்துடோமோ என்று. இதை இப்படியும் சொல்லலாம்.தெரு ஓரத்தில் நின்று கொண்டு போனால் போகுது என்பதாக காரை வேடிக்கை பார்ப்பதாக மட்டுமே இருந்தது அப்போதைய என் நிலை. இருந்தும் என்னை எப்போது இயக்குனர் காருக்குள் (கதைக்குள்) இழுத்து போட்டார் என்பதே தெரியாமல் போய் விட்டதை இடைவேளையில் தான் கவனித்தேன்

ஜெயப்ரகாஷ் துளசி ஆதர்ச தம்பதி என்று சொல்வார்களே அது போல்.
 இருவருக்கும் உள்ள அந்த அன்பு காதலை, சின்ன சின்ன வசனங்களில் முக பாவங்களில் அது வெளியாகும்
விதத்தை அசத்தலாய் தந்திருக்கிறார் இயக்குனர்.
உதாரனத்திற்க்கு சொல்ல வேண்டும் என்றால் துளசியை ஊஞ்சலில் உட்கார வைத்து விட்டு ஜெயப்ரகாஷ் பரிமாறி கொண்டிருக்கும் போது வேலையாள் வந்து விட உடனே அவர் பாத்திரத்தை கீழே வைத்து விட்டு மேலும் கீழும் பார்ப்பதும் அவன் சென்றவுடன் மீண்டும் பரிமாறுவதும் அதை துளசி ரசித்து கொண்டே வேண்டாம் என்று சொல்வதும் என்று அவர்கள் இருவருமே தங்கள் கேரக்டரை உள் வாங்கி அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.வயதான தம்பதிகள் பார்த்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் நம் வாழ்க்கை என்று ஏக்கம் கொள்வார்கள். இளவயது தம்பதியர் வருங்காலம் இப்படி தான் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள்.(எனக்காக பிறந்தாயே பேரழகா பாடல் காட்சி அசத்தல் ரகம் (ராகம்) 

விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அந்த பத்மினி காரின் டிரைவராக நடித்திருக்கிறார் அந்த கார் மேல் அவர் காட்டும் பாசம் காரை கற்று கொண்டு தன்னை வேலையை விட்டு நீக்கி விடுவாரோ என்ற பயத்தில் முதலாளியையே அதட்டி ஏனோ தானோவென்று கற்று கொடுப்பதும் பின்பு அவர்களின் அன்பு புரிந்து உண்மையாகவே கற்று கொடுப்பதும் என்று தன் பங்குக்கு சூப்பராக ஸ்கோர் செய்திருக்கிறார் (முதலாளி என்றால் இப்படி இருக்கணும்). 

அவரது ஜோடியாக வரும் ஐஸ்வர்யா, ஜோடிக்கு ஒரு ஆள் வேண்டும் என்பதற்காகவே இருப்பது போல் தான் அவரது கேரக்டர். அவர்கள் 
காதல் கதைக்கு அவசியமில்லை தான் இருந்தாலும் காரை சுற்றியே 
வரும் கதைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள
பயன்பட்டிருக்கிறது..அவரின் சினிமாஸ்கோப் கண்கள் தன்னை பதிவு செய்யும் காமேரவையே விழுங்கி விடும் போல் அவ்வளவு ஈர்ப்புடன் இருக்கிறது.
 . 
சினேகா ஒரு காட்சி தான் என்றாலும் சுவாரஸ்யம் தான். கார் உங்களுக்கு தான் என்று சொல்லும் போது ஜெயப்ரகாஷ் க்கு வரும் நெகிழ்ச்சி போல்



அந்த பீடை பெருச்சாளி சைசில் இருந்து கொண்டு ( படத்தில் அவர் பெயரும் அது தான்) வீட்டு வேலை செய்பவராக வருகிறார் பாலா. ரொம்ப பேசறாங்க நல்லாருங்க னு வாழ்த்திரவா என்று சொல்லும் போது அதிர்கிறது. அவரை வைத்தே செண்டிமெண்டை உடைப்பது கூட நல்ல விஷயம் தான். அவரது பார்வை மற்றும் குரல் மாடுலேஷன் பார்க்கும் போது நீங்க ரொம்ப நல்லா வருவீங்க னு சொல்ல தோணுது (இது அவர் படத்துல சொல்ற தன்மையில் சொல்லலைங்க உண்மையா சொல்றேன் ) 




ஜெயப்ரகாஷ் துளசி இருவரும் விஜய் சேதுபதியிடம் இருவரின் ஆசையை தெரிவிக்கும் போது விஜய் சேதுபதி நெகிழும் இடம் நம்மையும் நெகிழ வைக்கும் ஒன்று.

கார் தான் படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம். கதையும் கட்சிகளும் முழுக்கவே அதை சுற்றியே பயணிக்கின்றன கூடவே காதல் நகைச்சுவை என்று அழகாக இயக்குனர் அருண்குமார்.
அங்காங்கே சரியான விகிதத்தில் அழகுபடுத்தி இருக்கிறார். கார் ஹீரோ எனும் போது வில்லன் இல்லாமலா ஒரு மினி பஸ் தான் அங்கே வில்லன் போல். அதன் ஓட்டுனர்  நடத்துனர் மற்றும்  விஜய் சேதுபதி அவைகளின் சார்பில் மோதி கொள்வது கூட ரசனையுடன் ரசிக்க வைக்கிறது 

பண்ணையாரின் மகள் வரும் போதெல்லாம் ஏதேனும் ஒரு பொருளை எடுத்து செல்வார் .கண்டிப்பாக அவர் காரை தான் கேட்க போகிறார் என்று நமக்கு தெரிந்து விடுகிறது இருந்தாலும் அது எப்ப என்று நம்மை டென்சனுடன் விடுகிறார் இயக்குனர் 


 நீலிமா காருக்காக தன் தந்தையிடம் பேசும் போது விஜய் சேதுபதி ஊர் சுற்றுவதற்காக எடுத்து சென்றிருப்பதை குறிப்பிட்டு "வேலைகாரனுக்கு கொடுப்பீங்க பொண்ணுக்கு கொடுக்க மாட்டீங்களா" என்று தந்தையை

 லாக் செய்வார். அது போல் விஜய் சேதுபதி காரை கேட்க "ஏன் எங்கப்பாவுக்கு வாயில்ல அவர் கேட்க மாட்டாரா நீ ஊர் சுத்தறதுக்கு
கேட்கறியா  எங்கப்பாவுக்கு யார் யாரை எங்கே வைக்கனும்னு தெரியல" என்பார். இயக்குனர் அங்காங்கே இப்படி லாக் கொடுத்து அதை பின்பு ரீலீஸ் செய்திருப்பார். இது போன்ற சுவாரஸ்யங்களும் உண்டு திரைக்கதையில் 

பாடல்களிலும் பின்னணி இசையிலும் ஜஸ்டின் பிரபாகரன் இயக்குனருக்கு வலது கரமாக செயல்பட்டிருக்கிறார் பின்னணி இசையை ரொம்பவே ரசித்தேன் . கிராமத்தை  கண் முன் நிறுத்தி வைக்கிறது ஒளிப்பதிவு 


அட்ட கத்தி தினேஷ்  கதையை சொல்வதாக படம் நகர்கிறது.  அவரது சின்ன வயசு கேரக்டர் ஒரு அழகிய கவிதை. விஜய் சேது பதி வாங்க நாங்க டிராப் பண்றோம் என்பதாக காட்டாமல் தினேஷ் நின்றிருக்கும் காருக்குள் ஏறி அமர்ந்து கண் மூடி ரசனையுடன் ரசிப்பதாக அமைத்து விஜய் சேதுபதி வந்து பார்த்து விட்டு யாருங்க நீங்க என்று கேட்கும் போது அவர் சிரித்து கொண்டே எழுந்து வெளி வந்து தனது விலையுயர்ந்த காரில் ஏறி கொண்டு செல்ல விஜய் சேதுபதி புரியாமல்  பார்க்கும் படி  முடித்திருந்தால் இன்னும் கவிதையாக இருந்திருக்கும் (மோ)

நான் 42 வயதில் தான் டூ வீலர் ஓட்டவே கற்று கொண்டேன். வண்டி  வாங்கி ஓட்ட கற்று
கொண்டவுடன் எனது உற்சாகம் சொல்லி மாளாது. டூ வீலர் தான் என்றாலும் அதன்மேல் எனக்கு தனி மோகமே உண்டு.
படம் முடிந்தவுடன் எனக்கு உடனே சென்று எனது டூ வீலரை ஆசையுடன் தொட்டு பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 
இதுவே (இப் படத்தின்) இயக்குனரின் வெற்றி 



FINAL PUNCH


அந்த கார் வீட்டு வாசலில் மரத்தடியில் நின்றிருக்கும் போது அதன் மேல் மஞ்சள் மலர்கள் விழும். அதை ஜெயப்ரகாஷ் ஆசையாக பார்த்து சந்தோசபடுவார். கார் இல்லாமல் இருக்கும் போது அதே மஞ்சள் மலர்கள் தரையில் விழுந்து கிடக்கும். அது கார் வரவை எதிர்பார்த்திருப்பது போல் தோன்றியது எனக்கு.  இயக்குனர்  அருண்குமாரின் அடுத்த படத்தை இப்படி எதிர்பார்க்க தோன்றுகிறது.  வாழ்த்துக்கள் 

ஆர்.வி.சரவணன் 

12 கருத்துகள்:

  1. நான் ரசித்தவற்றை நீங்களும் பட்டியல் போட்டிருக்கீங்க... நான் சென்ற வாரம் பார்த்தேன் ...ஆனால் இன்னமும் அந்த வயதானவர்களின் காட்சிகள் இன்னமும் கண்முன்னே.... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. //இது அவர் படத்துல சொல்ற தன்மையில் சொல்லலைங்க உண்மையா சொல்றேன்// :-)

    நல்ல விமர்சனம் சார், சீக்கிரமே பார்க்கணும்

    பதிலளிநீக்கு
  3. படத்தை ரசித்தேன்... உங்களின் விமர்சனமும் நல்ல ரசனை...

    பதிலளிநீக்கு
  4. அருமையான விமர்சனம்! மிகவும் ரசித்துப் பார்த்திருக்கின்றீர்கள் என்பது தெரிகின்றது!!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நல்ல விமர்சனம் பாஸு.. இன்னும் பார்க்கல.. என்னை மாதிரியே சில பேர் இருக்காங்க போல..

    // சினிமாஸ்கோப் கண்கள் // பலே பலே. நல்லா ரசிச்சிருக்கீங்க ;-)

    பதிலளிநீக்கு
  6. நான் எழுதிய இந்த பதிவை படித்திருக்கிறீர்களா?

    http://www.kovaiaavee.com/2013/03/riding-with-my-darlings.html

    பதிலளிநீக்கு
  7. அழகிய, இனிமையான பயணம் (செய்ததுபோலிருந்தது).

    பதிலளிநீக்கு
  8. நானும் ரசித்துப் பார்த்தேன்...
    அருமையான படம் அண்ணா....

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான படம் அண்ணா... படம் பார்த்து முடித்த பின், அந்தக்காரும் நம்மோடு பயணிக்கும் உணர்வை இயக்குனர் ஏற்படுத்தியிருப்பார்.

    தங்கள் விமர்சனமும் சிறப்பாக உள்ளது... தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. இன்னும் படம் பார்க்கவில்லை சரவணன், உங்களின் விமர்சனம் பார்க்க சொல்லும் விதமாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  11. அருமையான விமர்சனம் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  12. அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்