வெள்ளி, டிசம்பர் 07, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 






படம் நல்லாருக்கு அதுவும் படம் முழுக்க சிரிப்பு என்று கேள்விப்பட்டவுடன் உடனே எனக்கு படம் பார்த்து விடணும் என்ற வேகம் வர அந்த வேகத்திலேயே உடனே  நேற்று தியேட்டர் சென்று படமும்  பார்த்து
விட்டேன் (அந்த வேகத்திலேயே பதிவும் போட்டுட்டேன் )


கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது தலையில் அடி பட்டு விடுகிறது.ஷார்ட் டைம் மெமரி லாஸ் வந்து விடுகிறது. அதனால்  கடந்த ஒரு வருடத்தின் நினைவுகள் மறந்து விடுகிறது அதில் முக்கியமானது அவரின் காதலியும், அவருடனான திருமணமும் 

அவரது மூன்று நண்பர்களும் வீட்டுக்கு தெரியாமலும் ஏன் காதலிக்கே தெரியாமலும் இந்த விசயத்தை மறைத்து கல்யாணம் செய்து வைக்கிறார்கள் 
எப்படி முடியும் என்பது தானே உங்கள் கேள்வி? முடியும் என்று  அதை இயக்குனர் பாலாஜி தரணிதரன் முழுக்க முழுக்க காமெடி யில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் .

படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி என்னாச்சு என்ற வசனத்தை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் சொல்லும் போது தியேட்டரே சிரிப்பில் அள்ளுகிறது (சில நேரங்களில் என்ன திரும்ப திரும்ப பேசறே நீ என்று  நமக்குள் எரிச்சல் எட்டிபார்க்கும் தருணங்களில் ஒரு காமெடி வந்து அதை சரி செய்து விடுகிறது) ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் வசனங்கள் மாறும் முக பாவங்கள் என்று  விஜய் சேதுபதி நன்றாக செய்திருக்கிறார் 

அடுத்து அவரது நண்பர்களாக வரும்  மூன்று பேரும்  படத்திற்கு முதுகெலும்பு என்றே சொல்லலாம். பக்ஸ் என்ற பெயரில் வருபவர் அதட்டலும் மிரட்டலும் என்றால் இரண்டாமவர் கண்களாலேயே பயத்தை வித விதமாய் காட்டி பம்முகிறார். சரஸ் ஹீரோவை நான் சொன்னா கேட்பியா மாட்டியா என்று கண்களில்  கெஞ்சலும் குரலில் கண்டிப்புமாய் அவரை அடக்கி ஆளுகிறார் 
மூவரும் கன கச்சிதம் 




ரசிக்க வைக்கும் காட்சிகள் படம் முழுக்கவே இருக்கிறது உதாரணத்திற்கு சில காட்சிகள் 

சலூன் கடை காட்சி ,

ரிசப்சன் மேடையில் மணப்பெண்ணை பார்த்து விட்டு, ப்பா என்று சொல்லி முகத்தை திருப்பி  கொண்டு என்னடா பொண்ணு பேய் மாதிரி இருக்கு என்று சொல்லும் காட்சிகள் 

டேய் நீ சொன்னா பில்டிங் மேலேருந்து குதிக்கிறது மட்டுமில்லே முன் பின் தெரியாத பெண்ணுக்கும் தாலி கட்டுவேண்டா என்று கண்களில் நீர் திரள விஜய் சேதுபதி சொல்லும் காட்சி 

கசின் பிரதருடன் சண்டையிட்டது மறந்து போய் என்ன அண்ணே இளைச்சுட்டீங்க என்று பார்க்கும் போதெல்லாம் இவர் கட்டி கொள்ள அவர் நெகிழும் காட்சி 

நண்பன் சரஸ், என் காதலி வந்திருக்கா பேசணும் கொஞ்சம் மேடைக்கு வாங்கடா என்று அழைக்க நண்பர்கள் நீ போ நீ போ என்று ஜகா வாங்குவது


எளிமையான வசனங்கள் தான் இருந்தும் காட்சியின் சூழல் காரணமாய்  அவை சிறப்பாய் அமைந்து நம்மை சிரிப்பில் ஆழ்த்துகிறது. உதாரணம் இவன் காதலியை மறந்துட்டான் என் காதலியை ஞாபகம் வச்சிருக்கான்டா  என்று சரஸ் சொல்லும் இடம் 

படத்தின் குறைகள் என்றால்,
 ஒரு டயாலாக் பேச ஒவ்வொரு கேரக்டரும் அதிக நேரம் எடுத்து கொள்வது, பேசிய வசனங்கள் திரும்ப வருவது , ஹீரோ என்னாச்சு என்ற வசனத்தை ஒவ்வொரு சூழ்நிலையில் பேசுவது ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் அதை கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம். படத்தின் ஆரம்ப பகுதியில் மெதுவாக நகரும்  காட்சிகள் (பக்கத்தில் அமர்ந்திருந்தவர் என்ன படம் ஷார்ட் பிலிம் பார்க்கிற மாதிரி இருக்கே என்றார்)


ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் (உண்மை நாயகன்) கிரிக்கெட் ஆடும் காட்சியில் விளையாடியிருக்கிறார் 

ஹீரோயின் படத்தின் நிறைவு பகுதியில் தான் வருகிறார். மருந்துக்கு 

கூட அவரது ஒரு போட்டோ அது வரை காட்டப்படவில்லை . இயக்குனர் தைரியத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் படத்தில் அந்த நண்பர்கள் மூவர் கேரக்டராக நாம் ஒன்றி போய் விடுகிறோம் விளைவு அவர்கள் சிரித்தால்  நாமும் சிரிக்கிறோம் அவர்கள் பயந்தால் நாமும் பயப்படுகிறோம் உண்மை கதையை நம் கதை போல் ரசிக்க வைத்த விதத்தில் இயக்குனர் பாலாஜி தரணிதரன் அடுத்த படம் என்ன பண்ண போறீங்க என்ற எதிர்பார்ப்பை தந்திருக்கிறார் 

FINAL PUNCH 

இது உண்மை கதை என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் அந்த கேரக்டர்களின் நிஜ மனிதர்களையும் அவர்கள் இப்போது இருக்கும் நிலையையும்  காட்டும் போது நமக்குள் ஒரு நெகிழ்ச்சி வருகிறது 

நன்பேண்டா என்று சொல்ல தோன்றுகிறது 

ஆர்.வி.சரவணன் 





3 கருத்துகள்:

  1. நன்றாக இரசிச்சி பார்த்திருக்கீங்க. நானும் இரசிச்சி படிச்சேன்.

    பதிலளிநீக்கு
  2. ரசித்துப் பார்த்து அருமையாக
    ரசிக்கும்படியாகவும் விமர்சனம் செய்துள்ளீர்கள்
    அவசியம் பார்த்து விடத் தோன்றுகிறது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்லாயிருக்கு பாக்கலாமின்னு சொல்லிட்டிங்க..
    பாத்திடிவோம் அண்ணா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்