ஞாயிறு, ஜூலை 20, 2014

சதுரங்க வேட்டை





சதுரங்க வேட்டை

செய்திதாள்களில் நாம் பார்க்கும் ஏமாற்று நிகழ்வுகளை எல்லாம் அழகாக தொகுத்து சுவாரஸ்ய திரைக்கதையாக்கியிருப்பதன் மூலம், அறிமுக இயக்குனர் வினோத் ஆடியிருக்கும் வேட்டை இது. (தயாரிப்பு நடிகர் இயக்குனர் மனோபாலா)

கதாநாயகன் ஏமாற்றும் வித்தைகளையும்,(அந்த எம்.எல்.எம் பிசினெஸ் பக்கா) அதற்கு அவர் போடும் ஸ்கெட்ச்களையும் நாவலில் வரும் அத்தியாயங்கள் போல் தலைப்பு கொடுத்து (உதாரணம் பணம் அச்சடிக்கப்பட்டஆயுதம்) திரையில் நன்றாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.

கதாநாயகன் நடராஜ் இந்த கேரக்டருக்கு நன்றாக பொருந்துகிறார்.  
அந்த ரைஸ் புல்லிங் ஏமாற்றுதலில் அவரது வேடமும் நடிப்பும் வில்லன் சொல்வதை போல் கச்சிதம். உதாரணமாக அவர் நீதிமன்றத்திலிருந்து பேசி கொண்டே இறங்கி வரும் காட்சியில் (நடிப்பில்) மேலேறுகிறார் என்று சொல்லலாம்.




கதாநாயகி இஷாரா அறிமுக காட்சியில் உள் நுழையும் போது பரிதாபப்படும் ஜீவனாக இருக்கிறதே ஹீரோ இவரையும் ஏமாற்றி விட போகிறாரோ என்ற தவிப்பை தரும் கேரக்டர். ஹீரோ அவரை விட்டு சென்ற பின் அவர் நிலை என்ன என்பதை பற்றி காட்டியிருக்கலாம். 
அவர் ஹீரோவுக்கு உதவுவதை கூட காதலித்த பாவத்திற்காக செய்வதாக 
காட்டி பின் ஹீரோ திருந்தி விட்டார் என்ற உண்மை நிலை தெரிய 
வரும் போது அவர் மேல் இம்ப்ரெஸ் ஆவதாக காட்டி அவர் மனப்பான்மையை தெளிவுபடுத்தி இருக்கலாம்

“காசில்லாதவன் உடம்பை வச்சி கத்துக்கோ காசிருக்கிறவன் 
உடம்பை வைத்தியம் செய்து சம்பாதிச்சிக்கோ இப்படியான வசனங்கள் ஒவ்வௌன்றும் நெத்தி(யில் சுத்தியை வச்சி நச் என்று இறக்குவது போல்)அடி.

பாம்பு இளைக்க கூடாது என்பதற்காக இளவரசு வேண்டுமானால் மௌன விரதம் இருக்கலாம். அதுக்காக அவரை (நடிப்பை) பற்றி பேசாமல் நம்மால் மௌனமாக இருக்க முடியாது. இப்படியெல்லாம ஏமாறுவீங்க என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அசரடிக்கிறார்.

நடராஜின் முன்கதையை ஓவியங்களால் சொல்லியிருப்பது, சுத்த தமிழில் பேசும் வில்லன் கயிற்று கட்டிலில் படுத்து கொண்டே வானத்து நிலவை ரசிக்கும் அவரது கேரக்டர் நம்மால் ரசிக்க முடிகிறது. அந்த தாடி வில்லன் எப்படியும் இஷாராவை காப்பாற்றுவான் என்று தெரிந்து விடுவதால் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிக்க முடியவில்லை. அவனது இளகிய மனசை காட்டாமலே இருந்து கடைசியில் வெளிப்படுவதாய் அமைத்திருக்கலாம். இருந்தும் பணத்தை அவன் காலடியில் நடராஜ் கொட்டி எடுத்துக்கோ எனும் போது அவர் சொல்லும் டயலாக் கை தட்டல் ரகம். நடராஜ் பற்றிய வழக்கு கோர்ட்டில் ஆரம்பிக்கும் போது அது  தலைப்பு செய்தியாவதும் வழக்கு விசாரணை தொடர தொடர அதன் செய்திகள் எட்டாம் பக்கத்துக்கு பெட்டி செய்தி போல் ஷிப்ட் ஆவது போல் காட்டியிருப்பது நச். 

ரைஸ் புல்லிங் விசயத்தில் தொழிலதிபர் ஏமாறுவது கூட ஓகே 
ஆனால் அதிகாரி ஏமாறுவது ஏற்புடையதாக இல்லை. நடு இரவில் நகைக் டைக்கு முன்பு பணத்தாசையில் கூடும் மக்கள் கூட்டத்தை 
நம்ப முடிந்தாலும் போலீஸ் நம்புவதை ஏற்க முடியவில்லை.

சீன் ரோல்டனின் பின்னணி இசையும், பச்சை வயல்களுக்கு நடுவே இருக்கும் அந்த குடிசையை காண்பிக்கும் கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது. 

பணத்தாசையை துறந்தால் ஏமாறாமல் தப்பிக்கலாம். அடுத்தவரின் 
காசை சூறையாடும் நோக்கம்  இல்லாமலிருந்தால்  ஏமாற்றும் எண்ணத்திலிருந்தும் தப்பிக்கலாம் இப்படி எல்லாம் சொன்னால் 
போங்கய்யா நீ என்ன சொல்றது என்று சொல்லி விடுவார்கள். அதையே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து எடுத்து கொண்டு சுவாரஸ்யமாய் விழிப்புணர்ச்சி தரும் விதத்தில் தந்திருப்பதால் படம் பார்க்க தியேட்டருக்கு படையெடுக்கலாம்.



FINAL TOUCH 

ஏமாறுபவர்கள் உண்டு எனில் ஏமாற்றுகாரர்களும் (அதற்கு தக்க 
விதத்தில் )வித விதமாய் உண்டு. ஏமாறுபவர்களின் புத்திக்கு ஏற்ப 
ஏமாற்றுகாரர்களின் புத்தியும் செயல்படும் என்பதை பொடனியில்
அடித்து சொல்கிறது படம் 


ஆர்.வி.சரவணன் 

7 கருத்துகள்:

  1. இன்று தான் பார்த்தேன்.. படம் நல்லா இருக்கு!!

    பதிலளிநீக்கு
  2. அருமையான விமர்சனம் அண்ணா...
    இன்னும் படம் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான விமர்சனம்
    படம் பார்க்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம்... படம் பார்க்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  5. விமர்சனம் நல்லாருக்கு சார்....படம் இனிதான் பார்க்கணும்.....

    பஞ்ச் நல்லாருக்குது சார்!

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான விமரிசனம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான விமர்சனம். படமும் சிறப்பாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் இன்னும் பார்க்கவில்லை. நாளைதான் பார்க்கவேண்டும்.இன்னும் பல நல்ல திரைப்படங்களின் விமர்சனம் தொடர வாழ்த்துகள் அண்ணா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்