ஞாயிறு, நவம்பர் 17, 2013

பல நேரங்களில் சில மனிதர்கள் -2







பல நேரங்களில் சில மனிதர்கள் -2


வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களை பற்றி 
இங்கே கொஞ்சம் சிந்திக்கிறேன்.


கோ எஜுகேசன் பள்ளியில் ஆறாவது படித்து கொண்டிருந்த நேரம் அது.மாதம் ஒரு மாணவர் கிளாஸ் லீடர் ஆக நியமிக்க படுவார்.என் வகுப்பில் நானும் ஒரு மாதம் லீடரானேன். கிளாஸ் லீடர் ஆனவுடன் எல்லோரும் எனை பயத்துடன் பார்த்தது எனக்கு  ஆச்சரியமாக கூட இருந்தது. 


அப்போதெல்லாம் புது வருடம் வரும் போது மாணவ மாணவிகள் 
தங்களுக்கு கிடைக்கும் காலெண்டரை வகுப்புக்கு கொண்டு வருவார்கள். வகுப்பில் எங்கும் அதை மாட்டி வைப்போம். அவை அந்த வருடம் பள்ளி முடிந்து டீ பார்ட்டி நடக்கும் வரை இருக்கும் ( மாணவ மாணவிகள் பள்ளியின் கடைசி நாள் அன்று தங்கள் பாக்கெட் மணியில் வகுப்பு அசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் நன்றி கூறும்விழா அது.ஸ்வீட் காரம் காபி புது டிரஸ் என்று ஒரே தடபுடலாக இருக்கும். (அந்த நாளுக்காக அந்த ஆண்டு ஆரம்பிக்கும் போதே காத்திருக்க தொடங்கி விடுவோம் )

நான் லீடராக பங்கேற்ற மாதத்தில் தான்  மாணவர்கள் காலெண்டர் 
கொண்டு வந்து வகுப்பறையில் மாட்டி வைத்தார்கள். ஒரு மாணவன் கொண்டு வந்த காலெண்டர் எல்லோரையும் கவர்ந்தது. சுவரில் மாட்டலாம் என்று நாங்கள் முயற்சித்த போது வகுப்பாசிரியர் பார்த்து 
விட்டு, "இது நல்லாருக்கு நான் என் வீட்டுக்கு  கொண்டு போறேன்" 
என்று கூறி தன் மேஜை டிராயரில் வைத்து கொண்டு விட்டார். 
வகுப்பறையில் இருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் உற்சாகம் வடிந்து போனவர்களாக ஆனோம். 

காலெண்டர் கொண்டு வந்தவன் "நான் இதை என் வீட்ல கூட மாட்டாமல் இங்க கொண்டு வந்தேன்.இப்படி வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னு சொல்லிட்டாரே" என்றான் வருத்தமாய்.எனக்கும் இது விசயத்தில் கோபம் வந்தது மாணவ மாணவிகள் எவ்வளவு ஆர்வமுடன் இருந்தார்கள் என்பது அவருக்கும் தெரியும். இருந்தும் தன் வீட்டுக்கு என்று அவர் உரிமை கொண்டாடியது எனக்கு பிடிக்கவில்லை.இதை எப்படி  ஆசிரியரிடம் சொல்வது என்று நான் யோசிக்கையில் ஒரு மாணவன் சொன்னான் 

"டேய் உன் கிட்டே தான் இப்ப விஷயமே இருக்கு. நீ தான் எங்க லீடர் நீ 
பர்மிசன் கொடு.  நாங்க எடுத்து மாட்டிடறோம். ஆசிரியர் வந்தால் பசங்க எல்லாரும் ஆசைப்பட்டார்கள் அதான் மாட்ட சொல்லிட்டேன்னு சொல்லிடு. அவரும் மாட்டினதை எப்படி கழட்ட சொல்றது னு விட்டுடுவார்" என்று சொல்ல மற்றவர்களும் என்னை கெஞ்சவே நானும் ஓகே சொல்லி விட்டேன். 

ஆசிரியர்  பார்த்து விட்டு என்னை கேட்டார்.  நான் "பசங்க ஆசைபட்டாங்க அதான்" என்றேன். மாணவ மாணவிகளும்  தலையசைத்தார்கள். ஆசிரியர் அவர்களை அதற்காக திட்டவில்லை மாறாக "எப்படி என் டிராயரில் வைத்ததை நீ எடுத்து மாட்ட சொல்லலாம்"  என்று என்னை கோபமாய் கேட்டார். நான் திணறினேன்.  அடுத்து அவர் எடுத்த ஆக்சன் என்ன தெரியுமா. (என் பதவி முடிய பத்து நாட்களே 
இருந்த நிலையிலும்) என்னை உடனடியாக லீடர் பதவியிலிருந்து தூக்கி விட்டார். வேறொரு மாணவரை லீடராக்கினார். எல்லோரும் என்னை பரிதபமாய் பார்த்தார்கள்.

 அவர் சென்ற பிறகு எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு  "எங்க 
ஆசைக்கு உன்னை பலிகடா ஆக்கிட்டோம் சாரிடா" என்று ஆறுதல் சொன்னார்கள்."பரவாயில்லை விடுங்க. இதில் என் தப்பும் இருக்கிறது உங்களின் கோரிக்கையை அவர் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது 
அனுமதியுடன் தான் நான் அதை மாட்டியிருக்க வேண்டும் நானும் 
இப்படி செய்திருப்பது கூடாது.இந்த தண்டனை எனக்கு தேவை தான் 
இருந்தும் உங்கள் ஆசையை நிறைவேற்றிட்டேன் அது போதும் " என்றேன் 

FINAL PUNCH

இப்போது இந்த சம்பவத்தை நினைத்து பார்க்கையில், ஆசிரியர் என்பவர் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட கூடாது என்று கற்பிப்பவர் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக தன் வீட்டுக்கு அவர்கள் பொருளை எடுத்து செல்ல ஆசைப்பட்டது தப்பாயிற்றே. என்று தோன்றுகிறது. 

மேலும்லீடர் என்பவர் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் பாலமாய் 
இருப்பவர். ஆசிரியர் தேவைகளை மட்டும் நிறைவேற்றுபவர் எப்படி மாணவர்களின் தலைவனாய் இருக்க முடியும். அந்த வகையில் 
அப்போது லீடர் பதவியில் இருந்து தூக்கப்பட்டது எனக்கு தலை 
குனிவாகவே இருந்தாலும், இப்போது   (அவரது கை பாவையாக
இல்லாமல்இருந்ததை) பெருமையாகவே நினைக்கிறேன் 


ஆர்.வி.சரவணன்


13 கருத்துகள்:

  1. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது என்று கற்பித்து - அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியரே - தவறிழைத்தார் எனில்,

    என்ன சொல்வது?.. காலத்தின் கோலம் என்பது இது தானோ!..

    பதிலளிநீக்கு
  2. பெருமை படும் எண்ணம்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. ஆசிரியரே இப்படியென்றால்...
    ஒரு ஆசிரியர் என்ற முறையில் வருந்துகிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் வேண்டாம் நண்பரே யாரோ ஒருவரின் தவறுக்கு நாம் ஏன் வருந்த வேண்டும்

      எனக்கு (எல்லோருக்கும்) அறிவை ஊட்டிய ஆசிரியர் அனைவரையும் கடவுள் ஸ்தானத்தில் வைத்து இன்று வரை போற்றி கொண்டிருக்கிறேன்

      நீக்கு
  4. பெருமைப்படுங்கள் அண்ணா...
    அந்த ஆசிரியர் மனிதரே அல்ல... விட்டுத்தள்ளுங்கள்...

    பதிலளிநீக்கு
  5. நல்ல ஒரு அனுபவப் பாடம். அதாவது, "இதில் என் தப்பும் இருக்கிறது உங்களின் கோரிக்கையை அவர் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது
    அனுமதியுடன் தான் நான் அதை மாட்டியிருக்க வேண்டும் நானும்
    இப்படி செய்திருப்பது கூடாது" ஆறாவது வகுப்பிலேயே நல்ல ஒரு மன முதிர்ச்சி! அடுத்து "இந்த தண்டனை எனக்கு தேவை தான்
    இருந்தும் உங்கள் ஆசையை நிறைவேற்றிட்டேன் அது போதும் ". இந்த ஒரு மன முதிர்ச்சியினால்தான் இன்று நீங்கள் உங்கள் எழுத்திலும் பிரகாசிக்கின்றீர்கள்! என்று நினைக்கிறேன். ஒரு நல்ல லீடருக்கான அடையாளம். நல்ல பதிவு நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. ஒரு சில ஆசிரியர்களால் ஆசிரியர் அனைவருக்கும் பெயர் கெட்டுப்போகிறது. நல்ல பகிர்வு .

    பதிலளிநீக்கு
  7. மனிதர்கள் பலவிதம்தான்... இந்த ஆசிரியரும் அதிலொரு விதம்தான்... தங்கள் அனுபவங்களால் தங்கள் மன ஓட்டங்களையும் சிந்தனையெண்ணங்களையும் இங்கு
    பகிர்ந்ததினால் அறியமுடிந்தது நண்பரே!
    [இந்தத் தலைப்புத் தொடர் நீண்ட நாள் இடைவெளியில்
    வருகிறதே?]

    பதிலளிநீக்கு
  8. ஜோக்காளியின் நன்றி உங்களுக்கு ..காண்க >>http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_3165.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்