புதன், செப்டம்பர் 25, 2013

குடிக்காதது குத்தமாய்யா








குடிக்காதது குத்தமாய்யா 


சரக்கை பற்றிய  ஜாலியான ஒரு அனுபவ பதிவு இது. அதாவது சரக்கு 
அடிச்ச நண்பர்கள் இடையிலே சரக்கு அடிக்காம மாட்டிய  என்னோட 
போதை சீ கதை வாங்க பாட்டில் ஓபன் பண்ணுவோம் 



சின்ன வயசுலே தண்ணி அடிச்சிட்டு பேசறவங்களை பார்த்தாலே  எனக்கு பயம். ரோட்டிலே ஒருத்தர் குடிச்சிட்டு  நடந்து வந்தா கூட பம்மி ஒதுங்கிடுவேன். போதை ஏற ஏற சீ வயசு ஏற ஏற  பயம் போயிடுச்சு. 
கல்லூரி வாழ்க்கையில்  நண்பர்கள் எப்படியாவது எனக்கு புனல் வச்சாவது வாயில சரக்கை ஊத்திடணும்  னு முடிவு பண்ணி அலைஞ்சாங்க. நான் சிக்கலை இப்படியே போயிகிட்டிருக்குமா வாழ்க்கை.

வேலைக்கு வந்த பின்னாடி இது விஷயமா நான் பட்ட பாடு இருக்கே 
அது சொல்லி மாளாது (இருந்தாலும் சொல்றேன்) ஒரு நாள் படத்துக்கு போலாம் னு கிளம்பறப்ப என் அலுவலக நண்பன் நானும்  வரேண்டா 
என்று சொன்னான். சரி என்று வர சொல்லி விட்டு  மவுண்ட் ரோடு 
வந்தேன். நான் பஸ்ஸை விட்டு இறங்கறப்ப  ஒரு நண்பர்கள் படையோட 
என் நண்பன் வெயிட்டா  வரவேற்பு கொடுத்தான்." மச்சி சும்மா படத்துக்கு 
போனா ஒன்னும் எபக்ட் இல்லே. கொஞ்சம் ஸ்மால் விட்டுட்டு 
போலாம் "  னு அவன் சொன்னவுடன் ஆஹா ஆரம்பத்திலேயே வா  என்று 
உள்ளுக்குள்  கலங்கியவன் மறுக்க முடியாமல்  அவர்கள் சரக்குடன் 
வாட்டர் கலக்குவதை பார்த்து கொண்டிருந்தேன். ஸ்மால்  என்பது லார்ஜ்  ஆகி போனது

அவர்கள் செய்த அலப்பறையை அடக்கி வெளியில் கொண்டு வந்தேன்.தெருவையே அளந்து கொண்டு அவர்கள் சென்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்த ஒரு பெண்ணின் தோள் மேல் கை போட்டு விட்டான் நண்பன் அந்த பெண்ணும் கூட வந்த பையனும்  சண்டைக்கு வர நான் மன்னிப்பு கேட்டு  அவர்களை தியேட்டருக்கு அழைத்து கொண்டு வந்தேன்.

டிக்கெட் வாங்கி சீட்டில் அவர்களை அமர வைப்பதற்குள் எனக்கு கண்ணுல தண்ணி வராத குறை. தூங்கி போனவர்களை படம் முடிஞ்சவுடன் எழுப்பிய போது "என்னது படம் முடிஞ்சிடுச்சா விளம்பரம் தானே ஓடுதுன்னு தூங்கினோம். எழுப்ப வேண்டியது தானேடா"  என்று நண்பன் முறைக்க நான் பதிலுக்கு முறைத்தவுடன் அனைவரும் பெட்டி பாம்பாய் அடங்கினர்

இத்தோடு நான் ஒதுங்கியிருக்க வேண்டும் முடிந்ததா இல்லியே 

அடுத்ததாக ஒரு  நண்பருக்கு கல்யாணம் என்று பார்ட்டி ஏற்பாடானது
என்னை என் நண்பன் அழைக்க  நான் மறுக்க, விடாமல் என்னை அழைத்து சென்றான். அங்கு பெரிய ஹோட்டலில் பார்ட்டி நடந்தது. எல்லோரும் சரக்கு சாப்பிட நான் கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டேன் அப்போது அறிமுகமான நண்பர்கள் என்னை ஒரு உலக அதிசயம் போல் பார்த்தனர் நேர் காணலும்  நடத்தினர்

"நீங்க ஏன் சாப்பிடறதில்ல"

"பிடிக்கலை"

"சரி ஒரு வாட்டி டேஸ்ட் பார்க்கலாம் ல "

"வேணாம் ப்ளீஸ்"

 இப்படி போய்கிட்டிருந்த உரையாடல் போதை ஏற ஏற பாதை மாறியது
எப்படி

"என்ன  மச்சி உன் ப்ரெண்ட் தனியா நமக்கு தெரியாம சாப்ட்டுட்டு இங்க நல்லவன்  மாதிரி ஆக்டு  குடுக்குறாரோ"

"சீ ச் சீ அவன் சுத்தமானவன்"

"தம்மடிப்பாரோ"

"நோ"

"சைட்"

"தண்ணி அடிக்கிற நேரத்துல கூட சைட் அடிக்கிறது  கட் ஆகிட கூடாது னு தான் அவன் தண்ணி அடிக்கிறது இல்லேன்னு நினைக்கிறேன்"

"அட இங்க பார்ரா என்ன   தலைவா அப்படியா"

நான் நண்பனை முறைக்க அவன்  ஜாலிக்கு  மச்சி என்றவன் திடீரென்று பேச்சை  மாற்றி

"நம்ம ப்ரெண்ட் பாரதிராஜா  குரல்ல முதல் மரியாதை டையலாக் பேசுவான் தெரியுமா. பாக்யராஜ் டி.ராஜேந்தர்  மாதிரி  டான்ஸ் பண்ணுவான். மச்சி என் பிரெண்ட்ஸ் க்காக சொல்லேன் " என்று போட்டு கொடுக்க நான் மறுக்க,

அவர்கள் "பாஸ் நாங்க என்ன நீங்க பண்றதை ரசிக்கிற அளவுக்கு ரசனை இல்லாதவங்களா"என்று டபாய்க்க ஆரம்பித்தனர்.

 நான் வேறு வழியில்லாமல்  டான்ஸ் ஆடி காட்டினேன் பேசி
காண்பித்தேன்.ஓகே ஓகே படத்தில் சந்தனம் மிமிக்ரி செய்வது போல் 
ஆகி விட்டது என் நிலைமை.  திரும்ப திரும்ப பண்ண சொல்லி அவர்கள் போதைக்கு அன்று என்னை ஊறுகாய் ஆக்கி விட்டனர்

அடுத்து வந்த நாட்களில்  பார்ட்டி ஏற்பாடாகி என்னை கூப்பிட, நான் 
மறுத்தேன் மேலும், இப்ப எதுக்காக பார்ட்டி என்று கேட்டேன்.மச்சி நம்ம பிரெண்டு பொண்ணு பார்க்க போறான் அதுக்காக கொடுக்கிறான் என்றனர்

இதுக்கெலாம் ஒரு பார்ட்டி யாடா என்று நான் பல்லை கடிக்க, அவர்கள் 
"நீ வரலைனா பார்ட்டி கான்ஸல்" என்று அடம் பிடித்தனர்

"பாசக்கார  பயலுங்களா இருக்காங்கலே. நம்மை  கூப்பிடாம ஒரு 
பார்ட்டி  கூட இவங்க நடத்தறதில்ல  பாரு" என்று நான் நெகிழ்ந்தேன். 
ஏன் நெகிழ்ந்தோம் என்றாகி விட்டது.

 அன்றைய போதையில் ":மச்சான் உன்னை எதுக்கு அழைச்சிட்டு வரோம் தெரியுமா. நாங்க மட்டையானா எங்களை வீட்டில் கொண்டு போய் சேர்க்க ஆள் வேணும்ல அதுக்கு தான்"  என்றான்.

" டேய் பார்ட்டி க்கு ஹோட்டல் புக் பண்ணிட்டு செக்யூரிட்டி க்கு  என்னை புக் பண்றீங்களா" என்றதற்கு 

"நான் சொல்லல மச்சான் கற்பூரம் மாதிரி. படக்குன்னு பிடிச்சுக்குவான்"
என்றான் 

அந்த பார்ட்டியில், அன்று தான் அறிமுகமாகி இருந்த ஒரு நண்பர் கை குலுக்கி வெரி டீசண்டா பேசினார். இந்த காலத்தில இப்படி ஒருத்தரா ஆச்சரியமா இருக்கு ஐ லைக் யுவர் காரெக்டர்  என்றெல்லாம் சொன்னவர் 
போதை அதிகமானவுடன் " கடைக்கு போய் எனக்கு சிகரெட் வாங்கி வாங்க" என்றார் எனது நண்பன் பயந்து போய் தடை செய்வது போல் கை உயர்த்த அவர், "நம்ம பயடா இவன் மாட்டேன்னா சொல்லிடுவான்" என்று 
அவர்   வடிவேலு பாணியில் சொன்னார்

"டேய் என் ப்ரெண்ட் நட்புக்காக உயிரே கொடுப்பான் ஒரு சிகரெட் வாங்கி
கொடுக்க மாட்டானா. மச்சான் நீ போய் வாங்கிட்டு வாடா"என்று சொல்ல எனது நிலவரம் கலவரமானது 

 நண்பர்களை சொல்லி குற்றமில்லை.  நாம் கலந்து கொள்வது தவறு என்று முடிவு செய்து அன்றிலிருந்து அவர்களுடன் செல்வதை தவிர்த்தேன்

அப்படியே காலங்கள் உருண்டோட அந்த நண்பர்கள் பிரிந்து வேறு நண்பர்கள் வேறு அலுவலகம் என்று மாறினாலும் பார்ட்டி என்று எனக்கு அழைப்பு வருவதும், நான் மறுப்பதும், அவர்கள் ஏன் என்று அதிசயபடுவதும் 
 கிண்டலடிப்பதும் தொடர்ந்த வண்ணமாய் இருக்கிறது. இதில் அவர்கள் சொல்லும் மெசேஜ்  என்ன தெரியுமா. 

" உன்னுடைய காலேஜ் பிரெண்ட்ஸ் சரியில்ல ஒரு தண்ணி அடிக்க கூட 
கத்து குடுக்கலை பாரு" என்று படிப்பு முடிந்து வேலைக்கு வந்த போது  அறிமுகமான நண்பர்கள் சொன்னார்கள்

 "இப்பயும் நீ குடிக்கலைனா வருங்காலத்தில் உனக்கு வர போற பிரெண்ட்ஸ் எங்களை திட்டுவாங்கடா என்று இப்போதைய நண்பர்கள் சொல்கிறார்கள்.
(குடிக்காதது ஒரு குத்தமாய்யா)


FINAL PUNCH 

இந்த கட்டுரை டைம் பாஸ் 20-07-2013 இதழில் 
வெளியானது. நன்றி டைம் பாஸ் 






ஆர்.வி.சரவணன்

17 கருத்துகள்:

  1. இப்படிலாம் சோகமா எழுதினா நீங்க குடிக்கலைன்னு நம்பிடுவோமா?!

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப ரொம்ப சிரமம் தான்... உங்களின் மன உறுதிக்கு வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  3. எல்லா இடங்களிலும் இதே தான்.

    பதிலளிநீக்கு
  4. ஹா ஹா... சூப்பர் அனுபவங்கள்.... டைம் பாஸ் இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. தமிழ்நாட்டில் மதுவிலக்கு இல்லாட்டாலும்
    அது உங்ககிட்ட இருக்கிறதே என்று நினைக்க
    எனக்கு மகிழ்ச்சியில் என்ன சொல்வதென்றே
    தெரியல.
    நண்பரே, நீங்கள் - நீங்களாகவே இருங்கள்,
    என்றைக்கும். வாழ்த்துக்கள் என் நண்பருக்கு!

    பதிலளிநீக்கு
  6. பயங்கரமா வேலை வாங்கியிருக்காங்க போல..

    பதிலளிநீக்கு
  7. இங்கயும் அதே நிலைதான் அண்ணா...
    சென்னை அருணா பாரில் நண்பர்களுடன் பெப்ஸி சாப்பிட்டு கம்பெனி கொடுத்திருக்கிறேன்.... சைட்டிஷ் சாப்பிட வம்படியாக கூட்டிச் சென்று ஒரு பியர் மட்டும் அடிச்சிப் பாரு என்பார்கள். இரவு 10, 11 மணி வரை இருந்திருக்கிறேன். பெப்ஸியை சாப்பிட்டபடி... இப்பவும் சிகரெட், தண்ணி எதுவுமில்லையா நீயெல்லாம் வேஸ்ட் என்கிறார்கள் இங்கே... ஆமா வேஸ்ட்த்தான் என்று சொல்லி ஒதுங்கிவிடுவேன்....

    பதிலளிநீக்கு
  8. ஹாஹா ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...

    பதிலளிநீக்கு
  9. நம்பிட்டோம்... நீங்கள் குடிக்கலையா...


    நல்லா எழுதியிருக்காங்க... சிரிப்பு சிரிப்பா வருது...

    பதிலளிநீக்கு
  10. குடிக்காதது குத்தமில்லை! கஷ்டப்பட்டதை நகைச்சுவையாக பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. குடியைவிரும்பாத வாலிபர்(!) சங்கம் என்ற பெயரில் நீங்கள்
    ஒரு சங்கம் ஆரம்பித்தால், அதில் இரண்டாவது சேர நான்
    ஆசைப்படுகிறேன். தலைவர் நீங்கள்தான்.

    நானும் எனது வலையில் குடியை எதிர்த்து பதிவுகள்
    வெளியிட்டிருக்கிறேன். அவை உங்கள் பார்வைக்கு:


    ஓரக்கண்ணால... (பாட்டை மாத்துங்க கவிஞரையா - 4)
    http://www.kalaiyanban.blogspot.com/2013/09/pmk-4.html

    தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்!
    http://www.kalaiyanban.blogspot.com/2013/07/blog-post.html

    பதிலளிநீக்கு
  12. தங்களின் இந்த பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_12.html
    வருகை தரவும்.

    பதிலளிநீக்கு
  13. ஹாஹா நல்ல அனுபவம்தான்..அத்தனையும் தாண்டி வெற்றியுடன் வந்தீர்கள் என்றால் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஐயா!.. வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்!
    வாழ்த்துக்கள்!

    இங்கு உங்கள் பதிவும் நல்ல நகைச்சுவை! ரசித்தேன்!..

    வாழ்த்துக்கள்! தொடருகிறேன்.....

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. நல்ல அனுபவம்தான் போங்க... ரசனையோடு எழுதியிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  17. Naanum ungalaipola pala sandharbangalil anubaviththirukirEn. PiRagu avargaL enakku thannirtheliththu vittuvittaargaL (thannirthaanga) . Naam naamaagavE iruppOm. UngaLukku vaazhththukkaL.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்