இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்....
மனம் கவர்ந்த பாடல்கள்
இசை சக்கரவர்த்தி இளையராவின் இன்னிசை மழையில் என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று. அவரது பெரும்பாலான படங்களுக்கு இசை, நம் இசை அரசர் இளையராஜா தான்
இளமைக் காலங்கள். படத்தில் ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ என்று ஆரம்பிக்கும் ஒரு டூயட் பாடல் இதில் ஜானகி அவர்கள் தேன் குரலில் ராகம் ஆரம்பிக்க கூடவே கோரஸ் ராகம் கோர்க்க இசை அரசரின் இசை உத்வேகம் எடுக்கும் பாருங்கள். தொடரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் இப் பாடலுக்கு அழகூட்டும் அதிசயம்
அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலை பஸ்சில் வரும் போது இந்த பாடல் பஸ்சில் ஒளிபரப்பானது… அதிகாலையில் அந்த குளிரில் பஸ்சின் சீரான ஓட்டத்தில் இந்த பாடல் கேட்டு பரவசமாகிப் போனேன்… எப்போது எங்கே இந்தப் பாடலைக் கேட்டாலும், என் மனதுக்குள் அந்த அதிகாலை சில்லென்ற நினைவுகளைப் பரப்பிவிட்டுப் போகும் அதிசயம்.
ஒரு அதிகாலையில் நீங்களும் கூட கேட்டுப் பாருங்கள்…
இதில், இரண்டாவது சரணத்திற்கு பின் ‘ப…ப…ப…பா…பா..ப…ப..
என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையை அந்த இடத்தில் தந்திருப்பார் நம் இளையராஜா
படம்: இளமை காலங்கள் (1984)
தயாரிப்பு: கோவைத்தம்பி
இயக்கம்: மணிவண்ணன்
நாயகன்: மோகன், நாயகி: சசிகலா
பாடல்: வைரமுத்து
இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.
பாட வந்ததோர் கானம்..
ஈரமான ரோசாவே…
ராகவனே ரமணா ரகுநாதா…
படிப்புலே ஹீரோ …
இன்ப வேளையில் சுக ராகம்.... என்ற வரிகளை போலவே இந்த பாடல் ஒரு சுக ராகம் தான்
ஆர்.வி.சரவணன்
அருமையான ஈரமான பாடல் பகிர்வு.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குarumai.
பதிலளிநீக்குஇசை அரசரின் கடின உழைப்பின் பலன் தெரிகிறது பாடலில் ..
பதிலளிநீக்குநல்ல பாடலை தேர்ந்தெடுத்து எங்களுடன் பகிர்ந்து
கொண்ட உங்களுக்கு என் நன்றிகள் . சார்
பாடல் பற்றிய தங்கள் அனுபவங்கள் ரசிக்க வைத்தன.
பதிலளிநீக்குஇப்போதும் மனம் சஞ்சலப்படும்போது இவரின் பாடல்கள் ஆறுதல் அளிக்கின்றன....
பதிலளிநீக்குஆமாம் !அருமருந்து இசை வழியில்!!!
பதிலளிநீக்கு