இளமை எழுதும் கவிதை நீ 9
அத்தியாயம் 9
நீ அடையும் தோல்வியில் பங்கெடுக்க வருகிறேன்
நான் அடையும் வெற்றியில் பாதியை உனக்கு தருகிறேன்
உமா மாணவிகள் படை சூழ எதிரே கம்பீரமாய் வந்து கொண்டிருக்க, அவளை பார்த்த சிவா வுக்கு கோபம் வராமல் இதழ்களில் புன்முறுவல் தான் தோன்றியது
தன் இரு பேண்ட் பாக்கெட்களிலும் கை விட்ட படி ஸ்டைலாய் நின்றிருந்த சிவா உமா கிட்டே வந்தவுடன் ,"ஏன் இந்த கொலைவெறி" என்றான்
அவன் சொல் கேட்டு நின்றவள் "நீ சொல்றது புரியலை" என்றாள்
"தேர்தல்லே நிக்க போறியாமே அதை சொன்னேன் ஏன் இந்த வேண்டாத வேலை"
"ஏன் நீ மட்டும் தான் நிக்கலாம்னு எதுனா சட்டம் இருக்கா என்ன
"நீ ரொம்ப எல்லை மீறி போறே"
இந்த பதிலால் கோபமடைந்தவள் "அதை கேட்க நீ யார்" என்றாள்
"உன்னை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு "
"உன்னை பார்த்தா எனக்கு கேவலமா இருக்கு"
இந்த பதிலால் அதிர்ச்சியுற்ற சிவா கோபமாய் கை சொடக்கு போட்டு
"தோத்து போயிட்டா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் தலை நிமிர்ந்து போக முடியாது "
"அதே தோல்வி உனக்கும் வரலாம் இல்லையா அப்ப உன் நிலைமையும் அதானே"
"வார்த்தைக்கு வார்த்தை பேசறியே" எரிச்சலை வார்த்தைகளில் கொட்டினான்
"ஏன் தோத்து போயிடுவோம்னு பயமா இருக்கா"
"எனக்கு ஒன்னும் பயமில்லை "
"அப்புறம் என்ன நீ மட்டுமே நின்னு ஜெயிக்கிறதை விட்டுட்டு என் கூட எதிர்த்து நின்னு ஜெயிச்சு பாரு அது தான் உண்மையான வெற்றி யா இருக்கும் நான் உன் கிட்டே போட்ட சபதத்தில் இது தான் முதல் ஸ்டேப் னு கூட நீ எடுத்துக்கலாம் "
"கண்டிப்பா ஜெயிப்பேன்"
தொடரும்
ஆர்.வி.சரவணன்
இந்த ஓவியம் வரைந்தது நம் சக வலை பதிவர் சகோதரி தென்றல் சரவணன் அவர்கள் அவருக்கு என் நன்றி
this story going very interesting...
பதிலளிநீக்குwill continue...
கொஞ்சம் பதைபதைப்பை குறைத்த மாதிரி குறைத்து மீண்டும் பரபரப்பை
பதிலளிநீக்குதூண்டி விட்டிர்கள் சார் .. கதையின் வேகம் குறையாமல் தெளிவாக பயணிக்கின்றது ...
நாங்களும் கூடவே சேர்ந்து பயணிக்கின்றோம் ... வாழ்த்துக்கள் ...
அழகான படம் வரைந்த தென்றல் அக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....
முதலில் அழகான கதைக்கு வரையும் வாய்ப்பு கிடைத்ததே பெரும்பேறு!
பதிலளிநீக்குஎன் மனமார்ந்த நன்றி .
கதையின் ஓட்டம் எதிர்பார்ப்பையும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. நன்றியுடன் வாழ்த்துக்களும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசன் தம்பிக்கும் என் நன்றிகள்!
சரவணன் தேர்தல் நிகழ்ச்சிகளை இன்னும் பரப்பரப்பாக எழுதி இருக்கலாம்.. நன்றாக இருந்து இருக்கும். இவர்கள் சண்டை இந்த அளவிற்கு போகும் போது வாக்கு எண்ணிக்கை பரபரப்பு டென்ஷன் என்று இன்னும் கூட்டி இருக்கலாம்.
பதிலளிநீக்குஇளமைக் காலங்கள் எஃபெக்ட் தெரியுது சரவணன்!
பதிலளிநீக்கு