வளையோசை கல கல கல கல வென ....

சில பாடல்கள் கேட்கிறதுக்கு மட்டும் நல்லா இருக்கும் சில பாடல்கள் விசுவல்ஆக பார்க்கிறதுக்கும் நல்லா இருக்கும் நான் எப்போதுமே பாடல்களைகேட்கிறதுக்கு ரொம்ப ஆசைபடுவேன். ஆனா பாருங்க நான் விசுவலா பார்க்கிறதுக்கும் ஆசைபடுற பாடல்களில் ஒன்னு தான் இப்ப நான் சொல்லபோறது
சத்யா படத்தில் வரும் வளையோசை கல கல கல வென .... பாடலும் சரி படமாக்கப்பட்ட விதமும் சரி எனக்கு ரொம்ப பிடிக்கும்கமல் செய்யும் குறும்புகளும் அதை சிணுங்கலோடு அனுமதிக்கும் அமலாவின்நடிப்பும் எனை கவர்ந்த ஒன்று
உதாரணம் சொல்லனும்னா அமலா தன் கை முஷ்டியை உயர்த்தும் போது கமல்முத்தமிட உடனே அமலா கமல் தலையில் குட்டுவார் கவிதை போன்ற காட்சி இது
அதே போல் பேருந்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருக்கும் கமலைஉள்ளே வர சொல்லி அமலா சைகையில் அழைப்பார் அந்த சைகை, முக பாவனை ரொம்ப நல்லாருக்கும்அதே போல் கமல் முத்தமிட்டதால் அமலா பொய் கோபத்துடன் சிணுங்க கமல் சமாதானம் செய்வதும், அவர் லா லா என்று ராகம் பாடும் போது கமல் அமலாவின் கழுத்தை கிள்ளுவதும் , அமலா கமலின் தாடியை பிடித்து இழுத்து விளையாடி அவரை தன் கைகளால் தாக்குவதும் கமல் அதை ரசிப்பதும் என்று படு சூப்பர் ஆனா பாடல் இது
எப்பொழுது இந்த பாடல் டிவியில் போட்டாலும் நான் கண்டிப்பாக பார்ப்பேன்
இந்த பாடலிலும் நம் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்கள் செய்திருக்கும்இசை ஜாலம் பற்றி, செவிக்கும் மனதுக்கும் இந்த பாடல் தரும் இன்பத்தை பற்றிஇதத்தை பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ காட்சியாய் கண்டதை என்றும் நம் நினைவில் நீங்காமல் வைத்திருப்பது எது இசை அரசரின் இந்த இசை தான் என்பதும் நீங்கள் அறிந்தது தானே
சரி முடிவா என்ன தான் சொல்றே ன்னு கேட்கறீங்களா
இந்த பாடலை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த காதலின் மேல் பொறாமையே வந்துடும்
படம் சத்யா
பாடியவர்கள் எஸ் .பி .பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்