கவுண்டமணியின் ஒரு நேர் காணலில்....
(கற்பனையில தாங்க எழுதிருக்கேன்)
பிரபல தொலைகாட்சியில் இணையத்தில் எழுதுபவர்களை கவுண்டமணி இண்டர்வியூ செய்யும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.
கவுண்டமணி ஸ்டார்ட் மியூசிக் என்ற குரலுடன் உள்ளே நுழைய, சூரியன் பட பேக் கிரௌண்ட் மியூசிக் ஒலிக்க ஆரம்பிக்கிறது. ஏகப்பட்ட கர கோஷத்துடன் வந்து நாற்காலியில் அமர்பவர் கேமராவை பார்த்து "கும்பிடுறேனுங்க" என்று அவரது ஸ்டைலில் வணக்கம் வைக்கிறார்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவர் அருகே வந்து "சார் நீங்க கோட் சூட் போட்ருக்கீங்க
இங்கிலீஷ் ல தான் சொல்லணும் " என்கிறார்.
"அப்ப பெர்முடாஸ் போட்டிருந்தால் எந்த மொழில பேசச் சொல்வே நீ.
இல்லே புதுசா மொழி எதுனா என்னை கண்டு பிடிக்க சொல்வியா. பிஸியா இருக்கிற
என்னை டார்ச்சர் பண்ணாதே கோ மேன் "என்று எகிறவும் நிகழ்ச்சிஏற்பாட்டாளர்
நகர்கிறார்
நிகழ்ச்சி ஆரம்பமாகிறது
ஹாய், ஹாய் , பசியோட இருக்கிற புள்ளைங்களுக்கு சாப்பாடு கூட கொடுக்காம, புருஷன் எப்ப வீட்டுக்குள்ளே வந்தார்னு கூட தெரியாம டி வி பெட்டியே கதி னு உட்கார்ந்திருக்கிற தாய்குலங்களே அப்புறம் பொண்டாட்டி கிட்டே போட வேண்டிய சண்டையை கூட நிப்பாட்டி வச்சிட்டு ப்ரோக்ராம் பார்த்ததுக்கு அப்புறம் சண்டை போடலாம் னு காத்திட்டிருக்கிற தந்தைகுலங்களே. எல்லாருக்கும் நம்ம நிகழ்ச்சி சார்பா ஒரு வெல்கம் சொல்லிக்கிறேனுங்க.இம்மீடியட்டா நிகழ்ச்சிக்கு போயிடறேன். இல்லேன்னா விளம்பரத்தை போட்டுடுவாங்கோ.இன்னிக்கு யாரோட பேச போறோம்னு பார்க்கலாமா கமான் பாய். வா வந்து உட்காரு.
என்று அவர் சைகை காண்பிக்க நான் அவர் எதிரே உள்ள இருக்கையில் அமர்கிறேன்
என்னை ஒரு முறை மேலிருந்து கீழ் வரை நக்கலாக பார்க்கிறார் கவுண்டமணி
மணி : உன் பேரென்ன
நான் : ஆர்.வி. சரவணன்
மணி :உன்னோட ப்ளாக் பேரு
நான் : குடந்தையூர்
மணி : பெயர் காரணம்
நான் : கும்பகோணத்தோட இன்னொரு பேரு குடந்தை. அதுல ஊர்னு
ஒரு வார்த்தையை சேர்த்து குடந்தையூர் னு ஆக்கிட்டேன்
மணி :இருக்கிற ஊர் பத்தாதுனு நீ வேற புதுசா உண்டாக்கிட்டியா
நான் : கொஞ்சம் தனி தன்மையோட இருக்கட்டுமேனு தான் ....என்று இழுக்கிறேன்
மணி : அப்ப நீ தனி தீவுல தான் இருந்திருக்கணும். பை த பை. நெட்ல
எத்தனை வருசமா எழுதறே.
நான் : அஞ்சு வருஷமா
கம்ப்யூட்டரை பார்த்து கொண்டே
மணி : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் னு கேப்சர் வோர்ட் உன் சைட் ல
வச்சிருக்கியே. நீ முதல்ல அதை பாலோ பண்றியா மேன்.
நான் : நம்மாலே யாருக்கும் கெடுதல் இல்லாமே நடந்துகிட்டாலே
நன்மை பண்ண மாதிரி தானே
மணி : ஓ இப்படி வேற ஒண்ணு இருக்கா.சரி இந்த குண்டூசி விக்கிறவன் புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர் னு சொல்றான்யா னு நான் ஒரு படத்துல வசனம் பேசுவேன். அதை இப்ப இங்க ஏன் சொல்றேன்னு உன்னாலே புரிஞ்சிக்க முடியுதா.
நான் : எஸ் சார் . பேனா பிடிச்சவன் எல்லாம் எழுத்தாளர் ஆகிட முடியுமா னு
சொல்ல வரீங்க.
மணி : குட்யா . கேட்ச் மை பாயிண்ட் . நான் சொன்னதுக்கு எதுனா நீ பீல் பண்றியா.
நான் : நோ சார். யாருக்கு திறமை இருக்கோ அவங்க கண்டிப்பா மேல வருவாங்க
மணி கம்ப்யூட்டரையும் என்னையும் மாறி மாறி பார்க்கிறார்.
நான் : என்ன சார்
மணி மேலும் கீழும் என்னை பார்த்து விட்டு
ரஜினி கூட பேசற மாதிரி எல்லாம் பதிவு எழுதிருக்கே .கனவு காணுங்கப்பா உங்களை வேணாம் னு நான் சொல்லல. ஆனா நாங்க எல்லாம் நம்பற மாதிரி கனவு காணுங்க.
ரஜினி கூட பேசற மாதிரி எல்லாம் பதிவு எழுதிருக்கே .கனவு காணுங்கப்பா உங்களை வேணாம் னு நான் சொல்லல. ஆனா நாங்க எல்லாம் நம்பற மாதிரி கனவு காணுங்க.
நான் : ஒரு ஆசை தான்
மணி :சரி நீ எது வரைக்கும் எழுதுலாம் னு பிளான் வச்சிருக்கே
கூகுள்காரன் கழுத்தை பிடிச்சு தள்ளற வரைக்கும்னு சொல்லிடாதே
நான் :படிக்கிறவங்க விரும்பற வரைக்கும்
மணி : உன்னை நீ வா போ னு சொல்றேனே. இதை பத்தி எதுனா பீல் பண்றியா
நான் : உங்க ஸ்டைல் அதானே சார். சிங்கம் கர்ஜித்தால் தானே அழகு.
சிணுங்கினால் அழகாவா இருக்கும்
சிணுங்கினால் அழகாவா இருக்கும்
மணி : வெரி குட். நீ என்னை தனியா வந்து பாரு.
நான் : சார் உங்க கூட ஒரு செல்பி எடுத்துக்கணும்
மணி : எதுக்கு பேஸ் புக்ல போட்டு லைக்ஸ் வாங்கறதுக்கா. இதெல்லாம் எனக்கு பிடிக்காது மேன். சரி உன் பியுச்சர் பிளான் என்ன
நான் :டைரக்டர் நாற்காலில உட்காரணும்
மணி : யோவ் ஒரு சேரை எடுத்து அதுல டைரக்டர் னு எழுதி ஒட்டிட்டு உட்காருய்யா. இதை எல்லாம் போய் பியுச்சர் பிளான் னு சொல்லிட்டு திரிஞ்சுகிட்டிருக்கே.
நான் : சார். நான் டைரெக்டர் ஆகணும்னு சொல்ல வந்தேன்
மணி : ஓ அப்படியா . தமிழ்நாட்டு ரசிகர்களை கொடுமைபடுத்தணும்னு முடிவு பண்ணிட்டே சரி. வாழ்த்துக்கள்
என்றவர் என் கை பற்றி குலுக்கி
நைஸ் மீட்டிங் சரவணன்.இது வரைக்கும் உங்க கிட்டே நான் கேள்வி கேட்டேன். என் கிட்டே நீங்க எதுனா கேள்வி கேட்க ஆசைபடறீங்களா
நான் : எஸ் சார் நீங்க ஒருத்தர்ட்ட கேட்ட கேள்விக்கு பதில் வந்திருச்சானு தெரிஞ்சிக்க ஆசைபடறேன்
மணி : நான் யாருட்ட என்ன கேள்வி கேட்டேன் ?
நான் : ஒரு பழம் இந்தாருக்கு இன்னொன்னு எங்கேனு செந்தில் கிட்டே கேட்டீங்களே பதில் கிடைச்சிருச்சா
மணி : ம் பழனிக்கு போயிருக்கு. அது இந்நேரம் பஞ்சாமிர்தம் ஆகிருக்கும்
என்று சீரியசானவர் தன் உதவியாளரிடம்
சும்மாருந்தவனை சொரிஞ்சு விட்டுட்டாண்டா.
நீ செந்திலுக்கு உடனே போன போடு. இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்
சும்மாருந்தவனை சொரிஞ்சு விட்டுட்டாண்டா.
நீ செந்திலுக்கு உடனே போன போடு. இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்
மணி போன் பேச முயற்சிக்கையில், எப்படியும் செந்தில் "அதாண்ணே இது" என்ற அதே பதிலை தான் சொல்ல போகிறார்.கவுண்டமணி இன்னும் டென்சன் ஆக போகிறார் என்பதால் நான் அங்கிருந்து வெளியேறுகிறேன்.
வலைச்சரத்தில் அக்டோபர் 2013 நான் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த போது எழுதிய பதிவு. அதை கொஞ்சம் மாற்றங்களுடன் இங்கே எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன்.
இன்று பிறந்த நாள் காணும் கவுண்டமணி அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஆர்.வி.சரவணன்
நிகழ்ச்சி உண்மையில் நடந்தது போலவே இருக்கிறது ... அருமை
பதிலளிநீக்குஹஹஹஹ் நல்லாருக்கு சார்...
பதிலளிநீக்குஅருமையான கற்பனை!
பதிலளிநீக்குபேட்டியைக் கொடுத்தவருடைய புகைப்படம் இப்பதிவில் இல்லையே?
பதிலளிநீக்குவித்தியாசமான ரசனை. கற்பனையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்கு