ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

ஆவிப்பா B(u)Y கோவை ஆவி




ஆவிப்பா   B(u)Y  கோவை ஆவி 

நண்பர் கோவை ஆவி எனும் ஆனந்த விஜயராகவன் பதிவர் திருவிழாவில் தான் எனக்கு அறிமுகமானார். அன்றைய விழாவில் 
அவர் எழுதி இசையமைத்து பாடிய பாடலில் அவரோடு சேர்ந்து பயிற்சியெடுத்து பாடிய நிகழ்வு அவருக்கும் எனக்குமான நட்புக்கு அடித்தளமிட்டது.முகநூல், தள பதிவுகள் என்று தொடர்ந்த நட்பில் 
எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு கோவையிலிருந்து வந்திருந்து 
சிறப்பு சேர்த்தார். 

அவரது ஆவிப்பா நூல் வெளியீட்டு விழாவிற்கு வரவேற்புரையாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்த போது மேடையில் பேசவே தைரியத்தை வரவேற்க வேண்டிய நிலையில் உள்ள நான் எப்படி 
என்று திணறினாலும் அவரிடம் மறுக்க முடியாமல் விரும்பி ஏற்று கொண்டதுடன் அதில் ஆர்வமுடனும் கலந்து கொண்டேன்.





நூல் வெளியீடு 

புலவர் குரல் ராமானுஜம் அய்யா நூலை வெளியிட கோவை ஆவியின் தந்தை பெற்று   கொண்டார். விழா மேடையில் தன் தந்தை தாயை அமர வைத்து கோவை ஆவி தானும் மகிழ்ந்து கலந்து கொண்டவர்களையும் நெகிழ வைத்தார். சுப்பு தாத்தா, ராய செல்லப்பா, வெற்றிவேல்,சீனு, சிவகுமார்,ஸ்கூல் பையன் பாலகணேஷ், அனன்யா,கீதா ரங்கன் வேடியப்பன் மற்றும் பலரும் பங்கேற்று வாழ்த்தி விழாவை
சிறப்பித்தனர் சீனு,தொகுப்புரையும் ரூபக் ராம் நன்றியுரையும் 
வழங்கினர்.




சீனு தொகுப்புரை 


மதுமதி பொன்னாடை போற்றி வாழ்த்து 



வெற்றிவேல் பேசுகிறார் 

நூல் பற்றிய எனது பார்வையை ஆர்வமுடன் இங்கே பதிவு செய்கிறேன்  
"கவிதை எழுதிட இலக்கணமும் இலக்கியமும் அவசியம் என்று பயந்து ஒதுங்கி நிற்போரை கூட வியக்க வைப்பதுடன் பார்ப்பதை எல்லாம் எழுத்தில் வடிக்கும் அழகு இது" என்று திருமதி மஞ்சுசுபாஷினி அவர்கள் தன் அணிந்துரையிலும், "விதிமுறைகளற்ற கவிதை என்ற ஒற்றை விதியை சாதகமாக்கி கொண்ட ஆவிப்பா இது" என்று சீனு தன் வாழ்த்துரையிலும் அழகு பட உரைத்திருக்கின்றனர்.

படிக்கும் பழக்கம் வளர்த்த அன்னைக்கும், அழகான கையெழுத்தால் எழுத்தின் மீது ஆர்வத்தை தூண்டிய தந்தைக்கும், அன்பு சகோதரி தன் வாசகி ஆனதையும், தங்கை கணவர் அறையை நூலகம் ஆக்கியதன் மூலம் படிக்கும் எண்ணம் அதிகமானதையும், பாலகணேஷ் அவர்கள் இந்நூல் உருவாக்கத்தில் ஆற்றிய பங்கையும் இங்கே நன்றியுரையில் நேசத்துடன் பகிர்ந்திருக்கிறார் நண்பர் கோவை ஆவி 


மேடையில் கோவை ஆவியின் பெற்றோர் 
மற்றும் ராமானுஜம் அய்யா சுப்பு தாத்தா 


ராய செல்லப்பா பேசுகிறார் 

புலி மார்க் சீயக்காய்க்கும் புலிக்கும் உள்ள தொடர்பே இந்த நூலுக்கும் நஸ்ரியாவுக்கும் உள்ள தொடர்பு என்ற டைட்டில் சிரிக்க வைக்கிறது முதல் இரண்டாம் மற்றும் எல்லாக் காதலிகளுக்கும் இந்த நூலை 
சமர்த்திருப்பதை பார்க்கும் போது நம் இதழ்களில் தோன்றும் புன்னகை சில பக்கங்களில் வலுப்பெறுகிறது.பல பக்கங்களில் அட போட
வைக்கிறது. சீனு சொல்வது போல் நஸ்ரியவாவின் முக பாவனைகளுக்கு ஏற்ப நண்பர் எழுதினாரா இல்லை இவரது வார்த்தைகளுக்கு ஏற்ற 
முக பாவனைகள் முன்னமேயே அவர் தந்து விட்டாரா என்று நினைக்க தோன்றுகிறது. வாருங்கள் பக்கங்களுக்குள் ஒரு உலா செல்வோம்




ஸ்கூல் பையன், சிவகுமார், ருபக்ராம்

காதலி சொல்லும் உஷ் எனும் வார்த்தை கூட ஒரு ஹைகூ 
தான் என்றுரைக்கிறது (11)

கடவுளை காத்திருக்க சொல்லி விட்டு காதலியுடன் செல்ல 
துடிக்கும் காதலை சொல்கிறது (13)

க என்ற எழுத்துக்களில் ஆரம்பமாகும் எழுத்துக்கள் தந்திருக்கும் 
பா ஒன்று, கஷ்டப்பட்டு சாவதை விரும்பாமல் இஷ்டப்பட்டு 
வாழ விரும்புவதை சொல்கிறது (17)

இமயமலையில் நடந்து எவரெஸ்டைதொடுவது போன்றது காதலின் பின்னே அலைவது என்ற உவமையை சொல்கிறது (18)

பிரிதலை பற்றிய புரிதலை வார்த்தைகளால் கோர்த்திருக்கும் பா
ஒன்று இங்கே (19)

மேல் சட்டை மேல் என்பதை ஆங்கிலம் கலந்து சொல்லும் பா (21)

இரண்டாய்வெட்டப்பட்ட வெங்காயத்திற்கு கண்ணீர் வரும்.
பா வருமா என்றால் வரும் என்கிறார் (27)

கோலம் போடும் கோலமயில் தன்னை அலங்கோலமாக்கியதை 
வார்த்தை களில் இடும் கோலம் (32)

இடை பற்றி இடைவிடாமல் வார்த்தைகளிட்டு தொடர்கிறது 
பா வொன்று (37)

பசியையும் புசியையும் பற்றி வரும் பா அல்சர் (காதலின்) 
அவதியை சொல்கிறது (42)

தன் காதல் வண்ணத்துபூச்சி கருப்பு வெள்ளையில் இருந்தாலும் 
அது வர்ணம் பெற்ற விதம் இங்கே (53)

வீரன் மற்றும் தேவதை இவர்களின் தன்மையை இங்கே மாற்றி போடப்பட்ட கவிதை அட சொல்ல வைக்கிறது (54)

"மண மேடையில் நீ
பக்கத்தில் நான்
கழுத்தில் மாலையோடு நீ"
என்ற பா வில் அடுத்த வரியை நாம் ஆர்வத்தோடு அவசரம் 
கலந்து கவனிக்கையில், "கண்ணீருடனும் கிப்டோடும் நான்" 
என்று முடிப்பது காதல் தோல்வியை முகத்தில் 
அறைகிறது (55)

வெட்கம் பெண்களுக்கு மட்டுமா சொந்தம். ஆண்களுக்கும் உண்டு 
என்று உரிமை கொண்டாடுகிறார் (56)

சாதாரண வரிகளில் காதல் சுவையையும் , நகைச்சுவையையும் கலந்து தந்திருக்கும் இந்த குறும்பாக்கள்  நம்மை ஈர்க்கிறது. சில குறும்பாக்களின் வரிகள் இன்னும் பட்டை தீட்டப்பட்டிருக்கலாம். வரிகளை மாற்றி 
போட்டு எழுதியிருக்கலாம் அது இன்னும் சிறப்பு சேர்த்திருக்கும் 
என்பது என் கருத்து. நண்பர் சமுதாயம் பற்றிய சிந்தனைகளை 
கொண்ட குறும்பாக்களை அடுத்து எழுத முயற்சி மேற் கொள்ள 
வேண்டும் என்பது என் அவா 




கோவை ஆவியின் பேச்சில் வெளிப்பட்ட தோற்றங்கள் 

கோவை ஆவியின் ஆவிப்பா நூலின் வெற்றி அவர் இனி தொடர 
போகும் முயற்சிகளுக்கு ஊக்கம் சேர்ப்பதாக அமையட்டும் என்று 
உளமார வாழ்த்துகிறேன்

FINAL PUNCH 

இப் பதிவில் கோவை ஆவியின் நூல் பற்றி பகிர்ந்து கொண்டாலும் அவரை பற்றியும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு, முகநூலில் 
நான் வெளியிட்ட ஒரு கருத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் 

நேற்று பாரிமுனைக்கு பால கணேஷ் சாருடன் கோவை ஆவி வந்திருந்த போது வர முடியுமா என்று அழைத்தார். காலை நேர அலுவலக நெருக்கடிகளுக்கு இடையிலும் சென்று பார்த்து பேசி விட்டு வந்தேன். என் ஊரிலிருந்து உறவினர்கள் வருவதுண்டு வேலையை முடித்து விட்டு கிளம்பும் போது வீட்டுக்கு வர முடியவில்லை இருந்தாலும் உன்னை பார்க்க வேண்டும் போல் உள்ளது வருகிறாயா என்று அழைப்பார்கள்.நான் சென்று 
பார்த்து விட்டு வருவது மனதுக்கு ஒரு நிறைவை உற்சாகத்தை கொடுக்கும். நேற்று என்னை கோவை ஆவி அழைத்து பேசி விட்டு சென்றது அது போன்றதொரு உற்சாகத்தை கொடுத்தது

ஆர்.வி.சரவணன் 




23 கருத்துகள்:

  1. பெயரில்லாஏப்ரல் 13, 2014 10:33 AM

    வாழ்த்துக்கள் சரோ சார் .....உங்க திறமைக்கு மேடைப் பேச்சு ல்லாம் ஒரு பெரிய சவாலா என்ன .....

    ஆவி புத்தகம் வெளியிட்டரா ????????????


    உங்கள் பதிவும் மூலம் தான் அறிந்து கொண்டேன் ...


    ஆவிஈஈ உங்களுக்கு முதலில் பெரிய கர்ர்ர்ரர்ர்ர்ர் .........அதை விடப் பெரிய வாழ்த்துக்கள்...கர்ர்ர்ரர்ர்ர்ர் ரீசன்-----புத்தகம் வெளியிட்டுக்கு பெரிய ஆட்களை கூப்பிட்டு இருக்கீர்கள் ...எனக்கு ஒரு சின்ன அழைப்பிதழ் கூட இல்லை ......சின்னப் புள்ள தானேன்னு ....கர்ர்ர்ரர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் இல்லை "டீச்சர்", நான் முகநூலிலும், என் தளத்திலும் எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தேனே.. உங்க கைபேசி எண் தெரியாத காரணத்தால் அதில் அழைக்கவில்லை.. அடுத்த புத்தகம் வெளியிடும் சமயம் வாங்கிக் கொண்டு அழைத்து விடுகிறேன்..

      இந்த விழாவின் போது எல்லோருக்கும் காபியும் சமோசாவும் கொடுத்தார்கள்.. அடுத்த விழாவின் போது உங்களுக்கு எல்லாம் டபுள்.. ஓக்கேவா? ;-)

      நீக்கு
    2. உங்க திறமைக்கு மேடைப் பேச்சு ல்லாம் ஒரு பெரிய சவாலா என்ன .....

      நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை மேடம்

      நீக்கு
    3. உங்க திறமைக்கு மேடைப் பேச்சு ல்லாம் ஒரு பெரிய சவாலா என்ன .....

      நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை மேடம்

      நீக்கு
  2. பெயரில்லாஏப்ரல் 13, 2014 10:34 AM

    வெட்கம் பெண்களுக்கு மட்டுமா சொந்தம். ஆண்களுக்கும் உண்டு
    என்று உரிமை கொண்டாடுகிறார் ////////////// ஓஓஓஓஓஓஓஒ ஆவி எல்லாக் கவிதைகளும் அருமை ..ரசித்தேன் .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கவிதைகள் இல்லீங்கோவ்.. (கவித எழுத தெரிஞ்சவங்க அடிக்க வந்திடுவாங்க.. அது ஜஸ்ட் ஆவிப்பா) ஹிஹிஹி..

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. இது வெறும் சாம்பிள் தான்... இனிமேல் தான் மெயின் பிக்சரே...!

    ஆவி பறக்க வாழ்த்துக்கள்...

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி DD.. கலக்கிடுவோம் அடுத்த வெளியீட்டில்..

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கு நன்றி தனபாலன் சார்

      நீக்கு
    3. இனிமேல் தான் மெயின் பிக்சரே...! avvvvvvvvv ;-)

      நீக்கு
  4. ஆவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான பகிர்வாக வெளியிட்ட அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி நண்பா.. நம் நட்பு தொடங்கி சிறிது காலமே ஆயிருந்தாலும் நீண்ட நாள் பழகிய உணர்வை தருகிறது.. அது நீங்கள் பழகும் விதத்தினால் மட்டுமே.. ஆவிப்பாவின் வரவேற்புரை வழங்க நீங்க எடுத்துகிட்ட முயற்சிகள் இன்னும் மனதில் இருக்கிறது. நீங்களும் மற்ற நண்பர்களும் அவரவர் புத்தக வெளியீடு போலவே எண்ணி செயலாற்றியது மனதிற்கு இனிமையாக இருந்தது..

    இன்று உங்கள் விமர்சனம் அதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது.. நன்றிகள் பல..

    - நம் நட்பு என்றும் தொடர விரும்பும் ஓர் எளியோன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி சரவணனை சரவணர் என்று அழைக்க வேண்டுமோ அது போல் நண்பாவை நண்பர் என்றே அழைக்க வேண்டும்... குற்றம் குற்றமே # கொளுத்தி விடுவோம் ;-)

      நீக்கு
  6. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  7. இனிய நிகழ்வை மீண்டும் நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றி சார் ... நண்பர் ஆவி அவர்கள் மேலும் பல கவிகள் படைக்க வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  8. நண்பரே! அழகான தொகுப்பு! அருமையான ஒரு விமர்சனம் ஆவிப்பாவிற்கு!

    ஆவிக்கு எங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு! அடுத்த எழுத்தை அவரிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. அருமையான நூல் அறிமுகம்! ஆவிப்பாக்களை முகநூலில் வாசித்து இன்புற்றிருக்கிறேன்! நூல் விரைவில் வாங்க வேண்டும்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. நிகழ்வு பற்றி லேட்டா பதிவு போட்டிருந்தாலும். நேரில் சென்ற உணர்வை உங்கள் வரிகள் ஏற்படுத்தியது. நேரில் என்னை சந்தித்து எனக்கு ஆவிப்பா ஸ்மைலோட கொடுத்து இருக்கிறார் ஆவி. அழகான அச்சிடலோடு அம்சமாக இருக்கிறது. புத்தகத்தைத் தான் சொல்கிறேன். வேறு எதையோ நினைச்சுகாதீங்க. ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு. ஆவியின் புத்தகம் படித்து ரசித்தவர்களில் நானும் ஒருவன்......

    வாழ்த்துகள் ஆவி!

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு. ஆனால் பதிவின் நீளம் கொஞ்சம் மலைக்க வைத்துவிட்டது. உதாரணம் காட்டிய கவிதைகளின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம். பாதிக் கவிதைப் புத்தகத்தை உங்கள் பதிவிலேயே வெளியிட்டு விட்டீர்கள் போலிருக்கிறதே? ஆனாலும் பதிவுக்கு வாழ்த்துக்கள். என் தளத்தில்: கந்தசாமியும் சுந்தரமும் - 02 http://newsigaram.blogspot.com/2014/04/kandasaamiyum-sundaramum-02.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்